நாட்டுப்பற்று அதிகரித்தது! | சிறுவர் மலர் | Siruvarmalar | tamil weekly supplements
நாட்டுப்பற்று அதிகரித்தது!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

07 ஜூன்
2019
00:00

கோவை மாவட்டம், மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், 8ம் வகுப்பு படித்த போது, தேசிய மாணவர் படை, என்.சி.சி.,யில் சேர்ந்திருந்தேன்.
என்.சி.சி., மாஸ்டர் இருதயராஜ், தேசிய மாணவர் படை பற்றிய பல விபரங்களை தெரிவிப்பார்.
ரொம்ப நல்ல மனிதர்; நாட்டு பற்று மிக்கவர்; 1998ல், என்.சி.சி., போட்டியில், கோவை அளவில், எங்கள் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தேர்ச்சி பெற்றது.
நானும், என் மூன்று நண்பர்களும் தேர்வாகி, உத்திரபிரதேச மாநிலம், மீரட் மாவட்டம், ஹஸ்தினாபூர் என்ற இடத்திற்குச் சென்று, பயிற்சி பெற தகுதி பெற்றோம்.
இந்திய அளவில், அனைத்து மாணவர்களும் வந்திருந்தனர்.
நாட்டின் ராணுவ நிகழ்வுகளை கண்முன் கண்டதால் நாட்டுப்பற்று அதிகரித்தது.
என் வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவத்தில் ஒன்று; இந்த அனுபவம் ஒவ்வொரு மாணவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதே என் விருப்பம்!
- வி.ரவிக்குமார், கோவை.
தொடர்புக்கு: 98435 66991

Advertisement

 



We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X