மாம்பழமாம் மாம்பழம்...
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஜூன்
2019
00:00

முக்கனிகளில் ஒன்று, மா!
காயாக இருக்கும் போது, 'வைட்டமின் -சி' சத்தையும், பழமானால், 'கரோடின்' சத்தையும் தருவது மாம்பழம்.
உலகில், 4,000 வகை மா ரகங்கள் உள்ளன; இந்தியாவில், 1,000 ரகங்கள் உண்டு. இவற்றில், 25 வகை மட்டுமே, வியாபார ரீதியில் உற்பத்தி செய்யப்படுகின்றன.
மகாராஷ்டிர மாநிலத்தில், அல்போன்சா, கோவாவில் மான்குர், குஜராத்தில் கேசார், வட கிழக்கு மாநிலங்களில், ஹிம்சாகர், தமிழகத்தில், ருமேனியா, மல்கோவா, ஆந்திராவில், பங்கனப்பள்ளி ஆகியவை, பிரபலமான மாம்பழங்கள்.
இந்தியாவிலிருந்து, 6,000 டன் மாம்பழம் ஏற்றுமதி செய்யப்படுகிறது; அதில், 60 சதவீதம் அல்போன்சா ரக மாம்பழம். இது, குஜராத், கர்நாடகா மத்திய பிரதேச மாநிலங்களில் விளைகிறது.
இங்கிலாந்து ராணியாக, எலிசபெத், 1953ல் பதவி ஏற்ற போது, இந்தியா சார்பில், அல்போன்சா மாம்பழம் பரிசாக அனுப்பி வைக்கப்பட்டது.
ஆந்திர பிரதேசம், கர்நாடகம், தமிழகத்தில் தோட்டா புரி என்றொரு மாம்பழம் உள்ளது. காயின் அடியில், மூக்கு போல் வளைந்திருக்கும்; நன்கு கனிந்து விடும் முன், இதை சாப்பிட்டால் அவ்வளவு சுவையாக இருக்கும்.
குஜராத்தில் விளையும் கேசர் ரக மாம்பழம், உள் பகுதியில் செம்பழுப்பாய் ஜொலிப்பது தனி அழகு. ஆந்திர ராஜ குடும்பங்களில் மட்டுமே சாப்பிடப்பட்டு வந்த, பங்கனப்பள்ளி மாம்பழம், இன்று, ஆந்திரா, தமிழகம் முழுவதும் பயிரிடப்பட்டு, சந்தையில் பவனி வருகிறது!

உலக மாம்பழ உற்பத்தியில், 42.6 சதவீதம், இந்தியாவில் உற்பத்தியாகிறது.
* மாம்பழத்திற்கும், ஒரு மானசீக தலைநகரம் உண்டு; அது, லக்னோவிலிருந்து, 35 கி.மீ., துாரத்தில் உள்ள, மல்லிகாபாத். இங்கு, 700க்கும் அதிகமான மாம்பழ வகைகள் பயிரிடப்படுகின்றன; சுற்றுலா ஸ்தலமாக விளங்குகிறது
* இந்தியாவின், மிகப் பழமையான மாம்பழம் தாசரி; இதன் தாய் மரத்தை, இன்றும், லக்னோ அருகில் உள்ள, தாசரி கிராமத்தில் காணலாம்
* சிந்துாரம் மாம்பழத்தின் பெயர் காரணம், இதன் மேல் பகுதியில், மிகச் சிவந்த, சிவப்பு வண்ணம் பூசப்பட்டது போல் இருப்பது தான்
* இந்தியா முழுவதும் உற்பத்தி செய்யப்படும் பழம் நீலம்.கோவா மாநிலம் சில வித்தியாசமான மாம்பழங்களுக்கு பிரபலம்!
போர்த்துக்கீசியர்கள் இந்த பகுதியை, வாங்கியதும், மாம்பழ மரங்களை பயிரிடத் துவங்கினர். 1879ல், ஒட்டு மரங்களின் மூலம், பல வகையான மாம்பழங்களை, ஒரே மரத்தில் உருவாக்க முடியும் என, இந்தியர்களுக்கு காட்டியவர்கள் இவர்களே!
தாங்கள் உற்பத்தி செய்த மாம்பழங்களுக்கு, நுாதன பெயர்களையும் வைத்தனர்.

இதோ, சில வித்தியாசமான மாம்பழங்கள்!
* மன் குராத், கோவாமன்கூர் எனவும் பெயர் உண்டு; போர்த்துக்கீசியர்கள் வைத்த பெயர் மல்கராடோபின், இதுவே மண் குராத் என சுருங்கியது.
* மல்கராடோ என்றால், மட்டமான வண்ணம் உள்ள பழம் என பொருள்; மால்கேஷ்டா எனவும் அழைப்பர்; மால்கேஷ்டா என்றால், போர்த்துக்கீசிய மொழியில், 'ஜீரணிக்கப்படுவது கஷ்டம்' என பொருள்.

ஹிலாரிடேபா!
வட கோவாவின் சியோலிம் கிராமத்தில், ஹிலாரிடேபா பெர்னான்டஸ் என்பவரின் வீட்டில், இதன் தாய் மரம் இன்றும் இருப்பதால் இந்த பெயர்.

முசாராத்!
வட கோவாவில் உள்ள முசாராத் என்ற ஊரில், இது முதன் முதலில் பயிரிட்டதால், இந்த பெயர்.

அல்பான்சோ!
இந்தியாவில், குறிப்பாக, கோவாவில், போர்த்துக்கீசியர் ஆட்சி ஏற்பட, முக்கிய காரணமாக இருந்த, ராணுவ அதிகாரியின் பெயர் அல்பான் கோடி அல்ப் யூகர் க்யூ.
இவரின் நினைவாகவே, அல்பான்சோ மாம்பழம் என பெயரிடப்பட்டது.
- திலிப்

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X