இளஸ்... மனஸ்... (168)
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஜூன்
2019
00:00

அன்பு ஜெனி ஆன்டிக்கு, கல்லூரி மாணவியர் எழுதுவது.
குக்கிராமத்தில் வசிக்கிறோம்; டவுனில் உள்ள கல்லூரியில் படிக்கிறோம். சென்னையில் உள்ள கல்லூரியில் படிக்க வேண்டும்; அங்குள்ள மாணவியர் போல, விரித்த கூந்தலுடன், 'மாடர்ன்' உடைகளில், கலக்க வேண்டும் என்று ஆசை.
எங்கள் பெற்றோர் விவசாயிகள்; இவ்வளவு தூரம் கல்லூரிக்கு அனுப்பி, படிக்க வைப்பதே பெரிய விஷயம். கல்லுாரி நுாலகத்தில் தான் சிறுவர்மலர் படிப்போம்!
எங்கள் பிரச்னை என்னவென்றால், என் தோழியர் முகத்தில், கரும்புள்ளிகள் வருது ஆன்டி... எனக்கு வெள்ளை வெள்ளையாக மூக்கை சுற்றி உள்ளது. அழகு நிலையம் செல்ல பணம் இல்லை...
நீங்கள், எளிமையான வழிகளை சொல்வீர்கள் என்பதாலே, அனைவரும் சேர்ந்து எழுதுகிறோம்.
இந்த கடிதத்தை அலட்சியப்படுத்தாமல், எங்கள் முகங்களை அழகாக்குங்க ஆன்டி...

கல்லூரி மாணவியருக்கு, வணக்கம்!
உங்கள் ஆசை எனக்குப் புரிகிறது; கிராமத்தில் இருக்கும் அனேகருக்கு, நகரத்தில் படிப்பவர்களை போன்று வாழ வேண்டும் என்ற ஆசை வரும்.
அதேபோல், அரசு பள்ளிகளில் படிப்பவர்களுக்கு, தனியார் பள்ளி மாணவர்களை போல், ஆடை அணிந்து, நாகரிகமாக காரில் வந்து படிக்க வேண்டும் என்ற ஆசை வரும்...
தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு, வெளிநாட்டு பள்ளிகளில் படிக்கும் மாணவியர், அவர்களது நடை, உடை, நாகரிகம் கண்டு ஆசை...
இப்படி, மனிதர்கள் எல்லாருமே, தங்களுக்கு கிடைத்ததை விட்டு விட்டு, கிடைக்காத பொருட்களின் மீது ஆசைப்படுவது இயற்கை.
குக்கிராமத்தில், விவசாய குடும்பத்தில் பிறந்திருந்தாலும், கல்லுாரியில் பயிலும் சந்தர்ப்பம் கிடைத்ததை நினைத்து மகிழ்ச்சியடைவது நல்லது.
சரி! விஷயத்திற்கு வருவோம்...
கரும்புள்ளிகள், வெள்ளை புள்ளிகள் மறைய...
* தயிர் நான்கு தேக்கரண்டி, தக்காளி விழுது இரண்டு தேக்கரண்டி, கோதுமை மாவு இரண்டு தேக்கரண்டி போட்டு, நன்கு கலக்கி, முகத்தில் பூசி, 20 நிமிடத்திற்கு பின், வெது வெதுப்பான நீரில் முகம் கழுவி வந்தால், கரும் புள்ளிகள் மறைந்து, முகம் பளிச்சிடும்
* உருளைக்கிழங்கு சாற்றுடன், எலுமிச்சை சாறு, தேன் கலந்து முகத்தில் பூசி, காய்ந்ததும், குளிர்ந்த நீரில் கழுவி வந்தாலும், புள்ளிகள் மறையும்
* வெள்ளரிக்காயை அரைத்து, அத்துடன் எலுமிச்சை சாறு கலந்து, முகத்தில் பூசி, காய்ந்ததும், முகம் கழுவினாலும், முகம் பளபளக்கும்
* சிறிதளவு தேனை கரும்புள்ளி இருக்கும் இடத்தில் தடவி, 10 நிமிடம் கழித்து தண்ணீரில் கழுவவும். இவ்வாறு செய்து வந்தால், அது தோலை இறுக்கமாக்கி எல்லா புள்ளிகளையும் அகற்றும். தேன், சருமத்தை மிருதுவாகவும் மென்மையாகவும் வைத்திருக்க உதவும்.
முயற்சி செய்து விட்டு, எனக்கு கடிதம் போடுங்க... சரியா!
- அன்புடன், ஜெனிபர் பிரேம்.

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X