இது உங்கள் இடம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஜூன்
2019
00:00

'மீம்ஸ்' வேண்டாமே!
எங்கள் குடும்ப உறுப்பினர் மற்றும் உறவினர் வட்டத்தில், சிறியவர் முதல் பெரியோர் என்று, 80 பேர் அடங்கியோரை இணைத்து, 'ஸ்வீட் பேமிலி' என்ற பெயரில், 'வாட்ஸ் - ஆப்'பில், 'குரூப்' ஒன்று ஆரம்பித்தோம்.
அதில், புகைப்படங்கள் பரிமாறுவது, வாழ்த்துகள் சொல்வது, ஏதாவது விசேஷம் என்றால் சந்தோஷமாக கருத்து சொல்வது என்று, சென்று கொண்டிருந்தது.
என் தம்பிக்கு திருமணமானவுடன், அவன் மனைவியையும், அந்த, 'குரூப்'பில் இணைத்தோம். வந்த புதிதில், வாழ்த்துகள் சொல்வது, காலை வணக்கம் என, குறுஞ்செய்தி அனுப்புவது என்று இருந்தாள்.
நாளடைவில், அவளுக்கும், என் தாயாருக்கும், வாக்குவாதம் அல்லது சின்ன சின்ன புரிதல் இன்றி ஏதேனும் பிரச்னை வந்தால், மாமியாரை கேவலமாக சித்தரிக்கும் வாசகங்களுடன், 'மீம்ஸ்'கள் உருவாக்கி, 'வாட்ஸ் - ஆப் குரூப்'பில் போட ஆரம்பித்தாள்.
ஆரம்பத்தில், குடும்ப உறுப்பினர்கள், இதை சாதாரணமாக ரசித்தனர். நாளடைவில், குடும்பத்தில் பிரச்னையாகி, உறவினர் வட்டத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியது.
இதை விட கொடுமை, 'இந்த மாதிரி, 'மீம்ஸ்' போடாதே...' என்று கூறும் மற்ற உறவினர்களை, உறவே அர்த்தமற்று போகும் அளவுக்கு, கேலியாக, 'மீம்ஸ்' சித்தரித்தாள். உறவினர்கள் யாராவது, அவள் வீட்டில், தங்குவதற்கு சென்றால், 'சோத்துக்கு வந்துட்டாங்க...' என்று, காமெடி நடிகர்களின் படத்தை, 'மீம்ஸ்' போட்டு சம்பந்தபட்ட நபர்கள் மனம் புண்படும்படி செய்தாள்.
இதை தட்டிக்கேட்ட தம்பியை, திரைப்படத்தில் வருவது போல், காமெடி நடிகை, நடிகரை அடிப்பது போன்ற, 'மீம்ஸ்' போட ஆரம்பித்தாள். காலப்போக்கில், உறவினர்கள் வருகையும், பேச்சும் குறைந்து, சண்டை சச்சரவு வரும் நிலை ஏற்பட்டு விட்டது.
இதன் காரணமாக, அந்த, 'வாட்ஸ் - ஆப் குரூப்'பை, நீக்கி விட்டோம். மேலும், தம்பியின் மனைவியோடு யாரும் பேசுவதையும் தவிர்த்தோம். ஆல மரமாக தழைத்து நின்ற குடும்ப உறவுகள், பிரிந்தது, மன வருத்தத்தை ஏற்படுத்தியது.
'வாட்ஸ் - ஆப்' மற்றும் முகநுால் போன்றவற்றில் வரும், 'மீம்ஸ்'கள், மற்றவர்களை பாதிக்காமல், சிரிக்க வைக்க தான். எந்த ஒரு தனிப்பட்ட மனிதரையும் குறி வைத்து உருவாக்குபவை, நிச்சயம் அழிவை தரும்.
— எஸ். அமுதா, பொள்ளாச்சி.

லட்சியத்திற்கு வழி காட்டிய, ஆசிரியர்!
ஏழாம் வகுப்பு படிக்கும், என் மகன், தினமும் காலையில் எழுந்ததும், உரத்த குரலில், 'சொலல்வல்லன், சோர்விலன் அஞ்சான் அவனை இகழ்வெல்லல் யார்க்கும் அரிது' என்ற திருக்குறள் சொல்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறான்.
அவனிடம், அது பற்றி கேட்டபோது, 'எங்கள் தமிழாசிரியர் தான், 'ஏதாவது ஒரு திருக்குறளை எடுத்து, அது, தனக்காகவே எழுதப்பட்டது என்று நினைத்து, அந்த குறளுக்கு, இலக்கணமாக வாழ முயற்சி செய்யுங்கள்...' என்றார்.
'அதன்படி, நான், இந்த குறளை எடுத்துக் கொண்டேன். என் நண்பர்களில் சிலர், 'தோன்றின் புகழோடு தோன்றுக, பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல், இனிய உளவாக இன்னாத கூறல், தாளாற்றி தந்த பொருளெல்லாம்...' என்று தங்களுக்கு பிடித்த குறளை எடுத்து, அதன்படி நடக்க ஆரம்பித்து விட்டனர்...' என்றான்.
ஏதாவது ஒரு குறளுக்கு, இலக்கணமாக வாழ, மகன் முயற்சி செய்த பின், அவனது நடவடிக்கைகள் நல்ல முறையில் மேம்பட்டிருந்தன. இதை கண்கூடாக உணர்ந்து, அவனை வாழ்த்தியது, அவனுக்கு மேலும் உற்சாகத்தை தந்தது.
லட்சிய வாழ்விற்கு வழிகாட்டிய, ஆசிரியரை சந்தித்து, பாராட்டினேன். இதுபோன்று, மற்ற ஆசிரியர்களும், மாணவர்களை ஏதாவது ஒரு வகையில் ஊக்குவிக்கலாமே!
— பி. பிச்சைமணி, மதுரை.

பெற்றோரின் பொறுப்பு!
எங்கள் அனைவருடனும், தொடர்ந்து உறவாடிய உறவினர் ஒருவரிடமிருந்து, திடீரென, எந்தவித தொடர்பும் இல்லாமல் போனது.
தொலைபேசி அழைப்புகளுக்கும் அவர்களிடமிருந்து பதில் இல்லாததால், அக்குடும்பத்தின் நெருங்கிய நண்பர் ஒருவரிடம் விசாரித்தோம். அப்போது கிடைத்த அதிர்ச்சி தகவலால், உறைந்து போனோம்.
பிளஸ் 2 தேர்வில், தங்கள் மகன், மாநில அளவில், 'ரேங்க்' வாங்கவும், ஐ.ஐ.டி.,யில் விரும்பிய பாடப்பிரிவு கிடைக்கவும், பெரும் பொருள் செலவில், பிரபல பயிற்சி மையங்களுக்கு, இரவு - பகல் பாராமல் அனுப்பி, தயார்படுத்தினர், பெற்றோர்.
அதற்கான இலக்கை எட்டவில்லை என்பது, தேர்வு முடிவில் தெரிய வந்ததும், குடும்பமே சோகத்தில் மூழ்கியது. 94 சதவீத மதிப்பெண் எடுத்திருந்த மகனோ, மேற்கொண்டு படிப்பை நிறுத்திவிடப் போவதாக கூறியுள்ளான். இதனால், மற்றவர்களை சந்திப்பதையும், அவர்களிடம் பேசுவதையும் தவிர்ப்பது தெரிந்தது.
உடனடியாக, இரண்டு, மூன்று குடும்பத்தினர் சேர்ந்து, அவர்கள் வீட்டுக்கு சென்று, பலவாறு பேசி, சமாதானம் செய்தோம். இப்போது, மனம் தேறி, வேறொரு கல்லுாரியில், விருப்பப்பட்ட பிரிவிலேயே சேர்ந்துள்ளான், உறவினரின் மகன்.
பெற்றோரே... நீங்கள் வரையறுத்த இலக்குகளை, குழந்தைகள் எட்ட முடியாமல் போகலாம். அந்த தருணத்தில், தன்னம்பிக்கையூட்டும் வார்த்தைகளும், செயல்களும் தான், அவர்களின் மனதை கலங்கடிக்காமல் பாதுகாக்கும். இதையறிந்து செயல்டுவது, பொறுப்புள்ள பெற்றோருக்கு இலக்கணமாகும்.
எஸ். ராமன், சென்னை.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (5)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M Selvaraaj Prabu - Gaborone,போஸ்ட்வானா
10-ஜூன்-201917:37:01 IST Report Abuse
M Selvaraaj Prabu //'ஏதாவது ஒரு திருக்குறளை எடுத்து, அது, தனக்காகவே எழுதப்பட்டது என்று நினைத்து, அந்த குறளுக்கு, இலக்கணமாக வாழ முயற்சி செய்யுங்கள்'// அதிசயித்து போனேன் எனக்கு தெரிந்து இப்படி ஒருவரும் சிந்தித்தாக தெரிய வில்லை. ஆசிரியருக்கும் மாணவருக்கும் வாழ்த்துக்கள் பல பல.
Rate this:
Cancel
wildy - Chennai,இந்தியா
09-ஜூன்-201919:38:02 IST Report Abuse
wildy //ஏழாம் வகுப்பு படிக்கும், என் மகன், தினமும் காலையில் எழுந்ததும், உரத்த குரலில், 'சொலல்வல்லன், சோர்விலன் அஞ்சான் அவனை இகழ்வெல்லல் யார்க்கும் அரிது' என்ற திருக்குறள் சொல்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறான்// இகல்வெல்லல் என்பதே சரி
Rate this:
Cancel
Kathiresan - Chennai,இந்தியா
09-ஜூன்-201919:12:16 IST Report Abuse
Kathiresan இந்த வாரம் அனைத்து (3) கடிதங்களும் மிகவும் நன்று. குறிப்பாக திருக்குறள் பற்றிய கடிதம்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X