அந்துமணி பதில்கள்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஜூன்
2019
00:00

டி.வெற்றிச்செல்வன், கோவை: கமல், சீமான், தினகரன் எல்லாம் இன்று, என்ன செய்து கொண்டு இருக்கின்றனர்?
தண்ணீர் பஞ்சத்தில் வாடும் தமிழர்களை நினைத்து, இரண்டு கண்களில் வழியும் கண்ணீரை துடைக்கக் கூட நேரமில்லாமல், வறண்டு கிடக்கும், நம் மாநில, குளம், குட்டை, கால்வாய்களை துார் வாருவது எப்படி என, தங்கள் வீட்டிலிருந்தபடியே ஆலோசித்துக் கொண்டிருக்கின்றனர்!

வே.சாமந்தி, வேலுார்: தமாஷ்களில் வருவது போல், வீடுகளில், கணவர்கள் சமைக்க ஆரம்பித்து விட்டால்...
கணவன்மார்கள் மிகவும் சந்தோஷம் அடைவர்... தங்களுக்கு பிடித்த உணவு கிடைத்து விட்டதே என்று!
- இதுவும் தமாஷ் தான்! கோபித்துக் கொள்ளாதீர்!

* எஸ்.ஆர்.சாந்தி, மதுரை: 'இது, அவளது பரம்பரை குணம்...' என, இன்னொரு தோழியை இகழ்கிறாள், என் நண்பி; இதுவெல்லாம் உண்மையா?
இல்லை என்றே சொல்வேன். ஒருவரின் குணம், வளர்ப்பவர்கள், சுற்றுப்புறம், பழக்க வழக்கங்கள், உடன் பழகுவோரின் தன்மைக்கு ஏற்பவே மாறுகிறது. தமிழக முதல்வராக இருந்தவர், பக்தவச்சலம்; இவர், தமிழ் புலவர், சேக்கிழார் பரம்பரையில் வந்தவர். ஆனால், அரசியல் மேடைகளில், 'தமிழ் வெறி கூடாது' என, பேசி வந்தாராம்! இப்போது புரிகிறதா, 'பரம்பரை குணம்' பற்றி!

கே.ரமேஷ், சென்னை: வாழ்வின் கடைசி வரை, கண்ணாடி போடாமல் இருக்க முடியுமா?
முடியும்! இப்போது தான், 10 நிமிடத்தில், கண், 'ஆபரேஷன்' செய்து, 'லென்ஸ்' பொருத்தி விடுகின்றனரே, கண் மருத்துவர்கள்!

* துா.சிவபாலன், காட்டுமாவடி, புதுக்கோட்டை: போதை தெளிந்ததும், 'பேசியது ஞாபகம் இல்லை...' என்கின்றனரே...
தெளிவாக இருக்கும்போது, சொல்ல வேண்டியவற்றை பேச தைரியம் இல்லாதவர்கள், இப்படி சொல்கின்றனர் என்றும் எடுத்துக் கொள்ளத் தோன்றுகிறது!

அ.ரஷீத், திண்டுக்கல்: தம் வாழ்க்கையை, பிறருக்காக தியாகம் செய்து கொண்டிருப்போர், யார் யார்?
எனக்குத் தெரிந்து, மனிதர்களில் யாரும், இப்போது இருப்பதாகத் தெரியவில்லை... ஆனால், இருந்து கொண்டிருப்பதும், இருக்கப் போவதும், மெழுகுவர்த்தியும், ஊதுவத்தியும் தான்!முதலாவது, மனிதனுக்கு வெளிச்சத்தை கொடுத்தே மறைந்து போகிறது... இரண்டாவது, நறுமணத்தை கொடுத்தபடியே!

* ஆர்.கிருத்திக்குமார், நெய்வேலி: பாலியல் குற்றங்கள் அதிகரிக்க காரணம், போதிய விழிப்புணர்வு இல்லாததாலா, சரியான தண்டனை கொடுக்காததாலா?
இரண்டாவது தான் சரி! கழுத்தில் கயிற்றை கட்டி தொங்க விட்டு விடுவர் எனத் தெரிந்தால், இவை நின்று விடும்!

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (5)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Manian - Chennai,இந்தியா
10-ஜூன்-201900:59:30 IST Report Abuse
Manian என் மனைவி வேலைக்கு போன புதிதில், "அய்யோ பாவம் பசியோடு வருவாள்" என்று நான் சமைத்து வைப்பேன். சுவை அதிகம். இதை அவள் பெருமையாக தன் நண்பிகளிடம் சொல்லிவிட்டாள். பொறாமையால், அவர்கள் அவளை கேலி செய்திருக்கிறார்கள். ஒருநாள் கோபமாக, நீங்க இனிமே சமைக்க வேண்டாம். கறியில் இஞ்சி அதிகமா இருக்கு என்றால். அன்றிலிருந்து எனக்கு விடுதலை. நீண்ட நாள் அவள் ஊருக்கு போனால், சுகமா அற்புத புதுவித சமையல் தான். சங்கீதம், சமையில் எல்லாமே ஒரு கலை. அது தெறியாதவன் கண்ணிருந்தும் குருடன். இன்னொரு நன்மை, பொதுவாக நாண்பர்கள் வீட்டிக்கு அடிக்கடி சாப்பிட கூப்பிடுவார்கள். அங்கே நண்பர்களின் மனைவிகள் அன்போடு, இங்கே வாங்க அண்ணே. இந்த ரசம், சாம்பாரை குடிச்சு, என்ன வேண்டும் என்று சொல்லுங்கள் என்று தணிந்த குரலில் கேட்ப்பார்கள். என்ன கொதிக்க வைச்ச புளி, எலுமிச்சை பழம் இருக்கா, கொஞ்சம் தா என்பேன். ஒரு மூக்கு பொடியளவு உப்ப தா. கொத்து மல்லி தழை தா.அவர்களுக்கு பாராட்டுதான். என் மனைவிக்கு அது பிடிப்பதில்லை.' பெண்களை திருப்தி படுத்தவே முடியாது' என்று சுவாமி சர்வஜீர்ணாநந்தா சொந்னதைத்தான் சொல்ல முடிகிறது. மேல் நாடுகளிலும் சேர்ந்து சமைக்கு வீட்டில் மகிஷ்ச்சி சற்று அதிகம் தான். கம்பியூட்டருக்கு மென் பொருள்(புரோகிராமிங், சங்கீதம் தெரிந்தவர்களையே பொதுவாக வேலைக்கு எடுக்க விரும்புகிறார்களாம்)எழுத எல்லா விபரமும்-டீடெய்ல்டு ஓரியண்டட்- detail oriented -புரிந்தவர்களே தேவை. ஐபிஎம்மின் - IBM- மேனஜர் சொன்னது.
Rate this:
Cancel
Manian - Chennai,இந்தியா
10-ஜூன்-201900:36:30 IST Report Abuse
Manian எல்ல ஆண்களுக்கும்,10 வயதில் ஆரம்பித்து கட்டாய ஹார்மோன் பரிசோதனை வேண்டும். அவர்கள் டெஸ்ட்டிராஸ்டோனின் அளவு அதிகரித்தால் இந்த இயற்கை சேஷ்டை அதிகரித்து விடும். அதற்க்கு தற்போது அதை குறைக்க தடுப்பூசிகள் உண்டு. அதை கட்டாயம் போட வேண்டும்.
Rate this:
Nagarajan Duraisamy - Fremont,California,யூ.எஸ்.ஏ
11-ஜூன்-201904:27:10 IST Report Abuse
Nagarajan Duraisamyபாலியல் குற்றங்களை குறைப்பதற்கு உளவியல் ரீதியாகத்தான் அணுகுமுறை இருக்க வேண்டும். பாட திட்டத்தில் பெண் ஒரு போக பொருள் அல்ல என்பதை விளக்கி கூற வேண்டும். மது அருந்துவது குற்றம் என போதிப்பதை போல பெண்களை வரம்பு மீறி தொடுவதும் குற்றம் என திரைப்படங்களில் குறிப்பிட்ட காட்சிகளில் அறிவிப்பு செய்ய வேண்டும்....
Rate this:
Cancel
Manian - Chennai,இந்தியா
10-ஜூன்-201900:22:53 IST Report Abuse
Manian காந்தி, வினோபாபாவே, போன்றவர்கள் இனிமேல் பிர்கா மாட்டார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X