பத்திரிகையாளர் முருகேசன் எழுதிய, 'கல்வி செல்வம் தந்த காமராஜர்' நுாலிலிருந்து: ஏழை, எளியோருக்கு, வீண் செலவு வைக்கக் கூடாது என்பதில் குறியாக இருந்தார், காமராஜர். முதல்வராக இருந்த சமயம், ஒவ்வொரு நாளும், காமராஜரை சந்திக்க, பொது மக்கள், மனு கொடுக்க, அவருடைய வீட்டிற்கு, 150லிருந்து, 200 பேர் வரை வருவர். அவர்களின் குறைகளை எல்லாம், கவனமாக பரிசீலிப்பார். அதன்பின், உரிய அதிகாரிகளிடம் மனுக்களை கொடுத்து, நடவடிக்கை எடுக்க கூறுவார். அதோடு நிற்காமல், நடவடிக்கைகள் எடுக்கப்பட்டனவா என்றும் கண்காணிப்பார். ஏழைகளின் துயர நிலை பற்றி நன்றாகவே புரிந்து வைத்திருந்தார். ஒரு தடவை இதுபற்றி கூறும்போது, 'வெளியூர்களில் இருந்தோ அல்லது பக்கத்து கிராமங்களில் இருந்தோ, என்னை பார்த்து விட்டு, மதிய சாப்பாட்டிற்கு வீட்டிற்கு போய் விடலாம் என்ற நம்பிக்கையுடன், சென்னைக்கு வந்திருப்பர். 'அவர்களை, நான் பார்க்காமல் திருப்பி அனுப்பி விட்டால், அடுத்த நாளும் தன்னுடைய வேலையெல்லாம் விட்டு, இங்கு வரவேண்டும். அந்த காசு இருந்தால், வீட்டுக்கு காய்கறி வாங்கி போடலாம்...' என்றாராம். காமராஜரின் ஆட்சி பற்றி, மக்கள் குறிப்பிடும்போது, 'பொன்னான ஆட்சி' என்று கூறுவதன் காரணம், இது தான்!
எழுத்தாளர், மெ. ஞானசேகர் எழுதிய, 'சான்றோர் சாதனைகள்' நுாலிலிருந்து: தன் குருநாதராக, தமிழறிஞர், வி.கல்யாண சுந்தரனாரை மதித்தார், எழுத்தாளர், கல்கி. குருவுக்கு மரியாதை செலுத்த எண்ணி, குருநாதர் பெயரான, கல்யாண சுந்தரத்தின் முதல் இரண்டு எழுத்தையும், தன் இயற்பெயரான, கிருஷ்ணமூர்த்தியின் முதல் எழுத்தையும் சேர்த்து, கல்கி என்று வைத்துக் கொண்டார். திரு.வி.க., நோய்வாய்பட்டு, பண நெருக்கடியில் அவதியுறுவதை கேள்விப்பட்டு, உதவ எண்ணினார், கல்கி. தனக்கு வரும், தன் புத்தக வருமானத்தை தவிர, வேறு எதையும் வாங்க மறுத்தார்; அரசு மூலம், மருத்துவ வசதி செய்ய முயன்றபோதும் மறுத்து விட்டார், திரு.வி.க., ஒரு நண்பர் மூலம், '70வது பிறந்த நாளுக்கு நன்கொடை...' என்று, திரு.வி.க.,வுக்கு, பணத்தை மணியார்டர் செய்தார். 'நன்றி! நன்கொடை வேண்டாம்...' என்று, அதுவும் திரும்பி வந்து விட்டது. எப்படியாவது, தன் குருவுக்கு உதவ வேண்டும் என்பது, கல்கியின் ஆவலாக இருந்தது. இறுதியாக, தன் குருநாதர் எழுதிய புத்தகங்களை, அவருக்கு தெரியாமல் வாங்கி, மற்றவர்களுக்கு அன்பளிப்பாக கொடுத்தார், கல்கி.
டாக்டர் சீர்காழி சிவசிதம்பரம் எழுதிய, 'இசைமணி சீர்காழி கோவிந்தராஜன்' என்ற நுாலிலிருந்து: ஒருமுறை, சீர்காழி கோவிந்தராஜனின் சொந்த ஊரான, சீர்காழியில் ஒரு கச்சேரி நடந்தது. திரைப்பட பாடல்களை பாடுமாறு ஏராளமான துண்டு காகிதங்கள், மேடையை நோக்கி பறந்து வந்தன. அவற்றுள் ஒன்றையும் விடாமல் பாடி, ரசிகர்களை மகிழ்ச்சி கடலில் மூழ்கடித்துக் கொண்டிருந்தார், சீர்காழி கோவிந்தராஜன். நள்ளிரவு, 1:00 மணிக்கு மேல் ஆகி விட்டது. ஒரு ரசிகர், சக்கரவர்த்தி திருமகள் படத்தில் வரும், 'ஆட வாங்க அண்ணாத்தே...' என்ற பாட்டை பாடும் படி, துண்டுச் சீட்டு அனுப்பியிருந்தார். அதை பார்த்து சிரித்த சீர்காழி, 'ஆட வாங்க அண்ணாத்தே இல்லே, நான் பாட வந்த அண்ணாத்தே... நேரமாகி விட்டதால், சென்னையை நோக்கி ஓடப்போற அண்ணாத்தே...' என, பாடியபடியே எழுந்து விட்டார்!
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
காமராசர் காலத்தில் ஏழை மாணவர்கள் கல்வியறிவுபெற பல பள்ளிகளை கட்டி மதிய உணவும் அளித்தார்.. அதில் படித்தவர்கள் எவ்வளவோபேர் வாழ்க்கையின் உயர்ந்த நிலைக்கு சென்றனர் .. ஆனால் இன்றோ அரசு பள்ளிக்கு அனுப்புவது கேவலம் என்று தனியார் பள்ளிகளுக்கு லட்சங்களில் கொட்டி சேர்க்கின்றனர் .. இது பத்தாது என்று நுழைவுத்தேர்வு பயிற்சிக்கென்று தனியாக அழவேண்டும் .. கல்வி ஒரு சிறந்த வியாபாரம் ஆகிவிட்டது
காமராஜரை போற்றும் நாம், கருணாவுக்கு கடற்கரையில் மண்டபம் கட்டியதுபோல் ஏன் இதுவரை செய்ய வில்லை. அதனால் என்ன தெரிகிறது என்றால், "கோவணம் கட்டாத ஊரிலே கடடினவன் பைத்தியம்.". அதாவது ஒட்டி விருக்கும் மக்கள் அன்றும் ஏமாந்தார்கள், இன்றும் அதி தவறை செய்கிறார்கள் அவர்கள் திருத்த முடியாத தந்தை (யாருக்கோ) ஈவேரா சொன்ன காடடுமிராண்டிகள்தான். சும்மா இங்கே அவர் பெயரை இழுத்து அவரது ஆத்மாவை துன்புறுத்த வேண்டாம். இனிமேல் எப்போதுமே, "கருணாவின் காலத்தில்.. என்றுதான் எழுதவேண்டும்.
காமராஜரை போற்றும் நாம், கருணாவுக்கு கடற்கரையில் மண்டபம் கட்டியதுபோல் ஏன் இதுவரை செய்ய வில்லை என்பது போல கேள்விகள் கேட்க துவங்கினால் முடிவே கிடையாது. இன்னும் சொல்லப்போனால் கல்வித்துறையில் காமராஜர் செய்ததாக சொல்லியதெல்லாம் மறைந்த சி. சுப்ரமணியம் செய்தது. காமராஜர் முதலமைச்சர் என்ற முறையில் மிகுந்த ஊக்கமும் ஆதரவும் அளித்தார். ஆனால் மூளை சி எஸ் அவர்களது. ஆனால் இன்று வரை நாம் சி எஸ் அவர்களுக்கு எந்த அளவு மரியாதை தந்திருக்கிறோம்? (ம் அதுபோல உணவுத்துறையிலும் சி எஸ் அவர்களின் சாதனை மிக மிக மேலானது.)...
கல்கி என்ற பெயர் தன் தாயார் கல்யாணி என்ற பெயரின் முதல் இரண்டு எழுத்துக்களுடன் தன் பெயரின் முதல் எழுத்தையும் சேர்த்து உருவானது என்றுதான் பல் செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது
ஆகா, இப்போ எனக்கு நிம்மதிதான். சுந்தரம் ஒரு பெரிய உண்மையை கண்டு பிடித்ததால், கல்கி தன மனைவிமேல் பிரியம் வைக்க வில்லை என்று தெரிந்து கொண்டேன். என் மனைவியிடம் இதை சொன்ன போது அவள் ஏன் முறைத்தாள் என்பது தெரியவில்லை. ஒருவேளை சுந்தரதிற்கு தெரிந்திருக்குமோ?...
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.