நாகேஸ்வரன் என்கிற நாகேஷ்! (2)
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஜூன்
2019
00:00

நாடகத்துக்கு தலைமை வகித்த அந்த நபர், 'மைக்'கை பிடித்து, 'நாடகம் நன்றாக இருந்தது. ஒரே ஒரு காட்சியில் வந்தாலும், அபாரமாக நடித்து, அனைவரையும் கவர்ந்து விட்டார், ஒருவர்... தீக்குச்சி போன்ற ஒல்லியான உருவில், வயிற்று வலிக்காரராக வந்தாரே, அவரை தான் சொல்கிறேன்...' என்று சொல்லி, தன் பக்கத்தில் அமர்ந்திருந்த, இயக்குனரிடம், 'அவர் பெயர் என்ன...' என்று கேட்டார்.
நாகேஸ்வரன் என்று, இயக்குனர் சொல்ல, 'நாகேஸ்வரன் என்ற பெயருடைய அவருக்கு, நடிப்புக்கான முதல் பரிசை கொடுக்கிறேன்...' என்று சொன்னபோது, என்னால் நம்ப முடியவில்லை.
வானில் மிதப்பது போன்ற உணர்வுடன், அவர் கொடுத்த கோப்பையை வாங்கிக் கொண்டேன்.
அன்று, என்னை பாராட்டி, கோப்பையை பரிசளித்த, செக்கச் சிவந்த, முதல் வரிசை சிறப்பு விருந்தினர் யார் தெரியுமா?
எம்.ஜி.ஆர்., தான்.
அதற்கு முன், நான், எம்.ஜி.ஆரை பார்த்தது இல்லை. எனவே, அவரை எனக்கு அடையாளம் தெரியவில்லை. எம்.ஜி.ஆர்., எனக்கு பரிசு கொடுத்த போது, அதை வாங்க சென்ற நான், என் பக்கத்திலிருந்த இன்னொரு நடிகரிடம், 'இவரு யாரு?' என்று கேட்ட, என் அறியாமையை நினைத்து, பலமுறை சிரித்திருக்கிறேன்.
நடிப்புக்காக பரிசு வாங்கி விட்டேனே தவிர, அதற்கும், எனக்கும் துளியும் சம்பந்தமே கிடையாது. பள்ளி நாடகத்தில் நடித்த அனுபவம் அல்லது சினிமாக்கள் நிறைய பார்த்து, நாமும் அதில் நடிக்க வேண்டும் என்ற ஆசை வந்தது கூட இல்லை. என் அப்பா, ரொம்ப கண்டிப்பானவர். நான் நன்றாக படிக்கணும்; நல்ல மதிப்பெண் வாங்கணும் என்று எப்போதும் சொல்வார்.
தாராபுரம் அக்ரஹாரத்தில், கடைசி வீடு எங்களுடையது. எங்கள் வீட்டுக்கு எதிர் வீட்டில், ராமகாந்த ராவ் என்று ஒருவர் இருந்தார்; பள்ளி ஆசிரியர். அவருக்கு, கோபால் என்ற பையன். தினமும், பையனை, விடியற்காலை, 4:30 மணிக்கெல்லாம் எழுப்பி விடுவார். அவனும் எழுந்தவுடன், சத்தம் போட்டு படிக்க ஆரம்பித்து விடுவான்.
நிசப்தமான அந்த நேரத்தில், எதிர் வீட்டு, கோபால் படிப்பது, ஊருக்கே கேட்கும். விடியற்காலை எழுந்து, சத்தம் போட்டு ஒரு பையன் படிக்கிறான் என்றால், மற்ற அப்பாக்கள் சும்மா இருப்பரா... என் அப்பாவும், தினமும், 4:30 மணிக்கு எழுப்பி விடுவார். எழுந்திருக்கா விட்டால் அடி தான்!
எதிர் வீட்டு பையன், அக்பர், அசோகர் என்று உரக்க படிப்பது, எனக்கு, படிக்க தொந்தரவாக இருந்தது, ஒரு பக்கம்; 'மனசுக்குள்ளேயே படிக்காதே... உரக்க வாய் விட்டு சத்தம் போட்டு படி... இல்லைன்னா, நீ முழிச்சுகிட்டு இருக்கியா, துாங்கிட்டியான்னு எனக்கு தெரியாது...' என்ற அப்பாவின் தொல்லை, இன்னொரு பக்கம். எனவே, எதிர் வீட்டு சத்தத்தை விட, அதிக குரலில், நானும் படிப்பேன்.
இந்த மாதிரி கூத்து, பல நாள் நடந்திருக்கிறது. நான், கோபால் உட்பட, எங்கள் தெருவில் இருக்கும் ஏழெட்டு பேர், எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு எழுதினோம்.
தேர்வு முடிவு வெளியானது. விடியற்காலையில் எழுந்து, சத்தம் போட்டு படித்து, ஊரை எழுப்பி, எனக்கு திட்டு வாங்கி கொடுத்த எதிர் வீட்டு பையன், கோபாலை தவிர, அனைவரும் தேர்ச்சி பெற்றோம்.
வகுப்பில், ஆசிரியர் பாடம் நடத்துகிறபோது, கூர்ந்து கவனிப்பேன். மனதில் நான் பதிய வைத்துக் கொள்கிற பாடங்களும் சரி, மற்ற விஷயங்களும் சரி, மறக்கவே மறக்காது. ஆசிரியர்கள் எல்லாரும் அவ்வளவு சுவாரசியமாக, மிகுந்த ஈடுபாட்டோடு பாடம் நடத்தினர் என்பது தான், முக்கிய காரணம்.
கோயம்புத்துாரில், பி.எஸ்.ஜி., ஆர்ட்ஸ் காலேஜில், 'இன்டர்மீடியட்' சேர்ந்தேன். கல்லுாரி வாழ்க்கையிலும், கலகலப்புக்கு பஞ்சமில்லை. பார்க்க நன்றாக இருப்பேன் என்பதால், கல்லுாரியில், மாணவர்கள் மத்தியில் நான் கொஞ்சம் பிரபலம்.
இரண்டாவது ஆண்டு இறுதி தேர்வுக்கு முன், 'செலக் ஷன்' தேர்வு நடத்துவர். அந்த தேர்வுக்கான கால அட்டவணையை அறிவித்தனர். தேர்வுக்கு தயார் செய்து கொண்டிருந்தேன். தேர்ச்சி பெறுவதற்கான மதிப்பெண் வாங்குவது ஒன்றும் கஷ்டமான காரியமில்லை என்ற எண்ணமே, எனக்குள் மேலோங்கி இருந்தது.
தேர்வுக்கு இன்னும் நாலே நாள் தான். அம்மை நோய் கடுமையாக தாக்கியது. ஒருமுறை அல்ல; அடுத்தடுத்து மூன்று முறை தாக்கியதில், முகமெங்கும் தழும்புகள். உடம்பு முழுவதுமே குண்டும் குழியுமாகி விட்டது என்று தான் சொல்ல வேண்டும்.
எனக்கு ஏற்பட்ட துக்கத்தை தாங்கிக் கொள்ள முடியாமல், குமுறி குமுறி அழுதேன். அம்மை போட்டதில், 'செலக் ஷன்' தேர்வும், அதை தொடர்ந்து நடந்த, இறுதி சுற்று தேர்வும் எழுத முடியாமல் போனது.
உடல் ரீதியாக மட்டுமின்றி, மனோரீதியாகவும் வலுவிழந்தேன். அந்த தருணத்தில், எனக்குள்ளே ஒரு வேகம் வந்தது. வேட்டி, சட்டை மாற்றி, அம்மாவிடம் போனேன்.
'நான் போகிறேன். எங்கே போகிறேன், எதற்காக போகிறேன், எப்போ திரும்பி வருவேன் என்றெல்லாம் கேட்காதீர்கள்... ஏனென்றால், இந்த கேள்விகளுக்கெல்லாம் என்னிடம் பதில் கிடையாது...
'ஒரு விஷயத்தை மட்டும் சொல்ல ஆசைப்படுகிறேன். நான் திரும்பி வருவேன். கண்டிப்பாக, நல்லபடியாக திரும்பி வருவேன்...' என்று சொல்லி, அம்மாவை ஆழமாக பார்த்தபடி, சில வினாடிகள் நின்றேன்.
அப்போது, அவர் கன்னடத்தில் சொன்ன வார்த்தைகள், இன்றும் என் காதில் ரீங்காரமிடும்.
'நாகேஸ்வரா... வெளி உலகத்துக்கு போய் விட்டால், பலவிதமான மனிதர்களை நீ சந்திக்க வேண்டியிருக்கும். அவர்கள், வார்த்தைகளால் உன்னை கேவலப்படுத்தலாம். உனக்கு கோபம் வந்து விட்டது என்றால், அவர்கள் ஜெயித்து விட்டதாக அர்த்தம். ஆனால், எப்பவுமே நீதான் ஜெயிக்கணும் என்பது, என் ஆசை...' என்றார்.
வாழ்க்கையை எப்படி எதிர்கொள்வது என்று, மாபெரும் ஞானி ஒருவர் சொன்ன ஆலோசனைக்கு ஈடான வார்த்தைகள். சொல்லி முடித்தபோது, அவரது கண்களில் ஈரம் கசிவதை கவனித்தேன்.
வீட்டை விட்டு புறப்பட்டேன். கிளம்பி விட்டேனே ஒழிய, கையில் காலணா கிடையாது; அடுத்த வேளை சோற்றுக்கு என்ன வழி என்பதும் தெரியாது.
தொடரும்

நன்றி: கிழக்கு பதிப்பகம், சென்னை.

எஸ். சந்திரமவுலி

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (6)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
15-ஜூன்-201912:17:08 IST Report Abuse
Natarajan Ramanathan எனக்கு சில படங்களில் கமலுக்கும் வினீத் என்ற நடிகருக்குமே வித்யாசம் தெரியாது. சென்னையில் சுமார் நாற்பதாண்டுகளாக இருந்தும் கருணாநிதியை ஒருமுறைகூட பார்த்ததே இல்லை. சரோஜாதேவியைவிட அதிக மேக்கப் போடும் நடிகை இருக்கவே முடியாது. உண்மையில் இப்போதுதான் நடிகைகள் மேக்கப் இயற்கையாக இருக்கு
Rate this:
Cancel
சுந்தரம் - Kuwait,குவைத்
09-ஜூன்-201913:12:22 IST Report Abuse
சுந்தரம் எம் ஜி ஆரை பார்த்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் இவர் யாரு என்று கேட்டேன் என்ற வரிகள் நம்பும்படியாக இல்லை. 1950 -1960 கால கட்டத்தில் எம் ஜி ஆர் என்ற மூன்று எழுத்து மந்திரம் ( புகைப்படத்துடன்) மூலை முடுக்குகளில் எல்லாம் பரவி விட்டதே.
Rate this:
வழிப்போக்கன் - Somerville, MA,யூ.எஸ்.ஏ
10-ஜூன்-201906:34:18 IST Report Abuse
வழிப்போக்கன் இன்றைய இணைய காலத்தில், விஜய் சேதுபதி , சிவகார்த்திகேயன் இவர்கள் யார் என்று கேட்கும் பலரை நான் அறிவேன் .. அது அவர்களது ஆர்வம் பொறுத்தது .. அதுவும் ஐம்பதுகளில் எம்ஜிஆர் மற்றும் ஒரு திரைப்பட நடிகர் .. அதுவும் மேக்கப் போட்டு கொண்டு நடித்த சர்வ சாதாரண நடிகர் .. எங்களுடன் தமிழில் பிரபலம் ஆன ஒரு சிவப்பு மலர் தெலுகு அரசியல் நடிகை கூடவே பயணித்தார் .. பிசினஸ் கிளாஸ் .. மேக்கப் இன்றி யாரனென்று தெரியவில்லை என்பதுதான் உண்மை .....
Rate this:
சுந்தரம் - Kuwait,குவைத்
10-ஜூன்-201911:06:32 IST Report Abuse
சுந்தரம் மன்னிக்கவும் நண்பரே, இன்றைய நடிகைகளை அரிதாரம் இன்றி பார்க்கும்போது கண்டுபிடிப்பது சற்று சிரமம் என்பதை ஒப்புக்கொள்கிறேன். முந்நாளைய நடிகைகள் அந்த ரகம் அல்ல, அவர்கள் பயன்படுத்திய அரிதாரம் குறைந்த அளவே. அடுத்து விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் ஆகியோரை எம் ஜி ஆர் சிவாஜியுடன் ஒப்பிடுவது தவறு. எம்ஜி ஆர் திரையில் மட்டுமல்ல அரசியல் மேடைகளிலும் தோன்றியவர். ஒரு காலத்தில் எம் ஜி ஆர் என்ற மூன்றெழுத்து இல்லாமல் அவரது புகைப்படம் இல்லாமல் பத்திரிகைகள் வந்தது இல்லை. இன்னும் உதாரணத்துடன் கூறவேண்டுமானால் கல்கண்டு பத்திரிகை ஆசிரியர் திரு. தமிழ்வாணனுக்கு எம் ஜி ஆரை பிடிக்காது, அதனாலேயே எம் ஜி ஆர் அவர்களை தாக்கி கேள்வி பதில் பகுதியிலாவது எழுதுவார். ஒருமுறை எம்ஜிஆரைத்தான் உங்களுக்கு பிடிக்கவில்லையே எதற்காக அவரை பற்றி எழுதுகிறீர்கள் என்ற கேள்விக்கு எனக்குத்தான் பிடிக்கவில்லை, என் வாசகர்களுக்கு பிடிக்கிறதே என்று பதில் சொல்லி இருந்தார்....
Rate this:
Cancel
Manian - Chennai,இந்தியா
09-ஜூன்-201912:56:49 IST Report Abuse
Manian 1. “ஆசிரியர் பாடம் நடத்துகிறபோது, கூர்ந்து கவனிப்பேன். மனதில் நான் பதிய வைத்துக் கொள்கிற பாடங்களும் சரி, மற்ற விஷயங்களும் சரி, மறக்கவே மறக்காது. ஆசிரியர்கள் எல்லாரும் அவ்வளவு சுவாரசியமாக, மிகுந்த ஈடுபாட்டோடு பாடம் நடத்தினர் என்பது தான், முக்கிய காரணம்.” நாகேஷ் சொன்னது போல் என் சகோதரியும் அங்கும் இங்கும் நடந்து கொண்டு, "பிண்டாரியார்களை தொலைத்த முதல் கவர்னர் ஜெனர்ல் யார், வாரன் ஹெச்டிங்ஸ்" என்று முப்பது தடவை சொல்வதை தூக்கத்தில் கேட்டே சரித்திரம் படித்தேன். மறு நாள் அதை அவளிடம் நடித்துக் காட்டி குட்டு படுவேன். உனக்கு எப்படி தெரியும் கழுதை என்பாள். எல்லாம் நீ மனப்பாடம் செய்ய புலம்பினதை கேட்டுதான் என்பேன். இன்றுவரை அதை மறக்கவில்லை (2) இன்று, அதை விஞ்ஞானம் மூலம் (reinforcement) சங்கீதம் , வாய்பாடு, நர்சரி ரைம் போல் ஆழ்நிலை மூளை சேமிப்பு/பதிவு என்று நிரூபித்திருக்கிறார்கள். ஆபத்துக் காலத்தே அதுதான் வெளியேற உதவுகிறது. அது முடியாதவர்கள் தடுமாரி பலியாகுகிறார்கள்.பல்லால் கடித்து, நாக்கை துண்டித்து துப்பி வன்புணர்ச்சியாள்களை பெண்கள் ஏன் தடுப்பதில்லை? அதை செய்ய ஞாபகம் வராத தடுமாற்றம்'. தினம் ஒரு தடவை பாத்ரூமில் அதை நடித்தால் தானாகவே, அனிச்சை செயலால் தற்காப்பாக மாறுமே. ஔவையார் இதையே "சித்திரமும் கை பழக்கம், செந்தமிழும் நா பழக்கம், வைத்ததொரு கல்வி மனப்பழக்கம் என்றார். அத்தோடு பற்கடிப்பும், நாக்கறுப்பும் பல் பழக்கம் என்று ஏன் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளக்கூடாது? (3) ஒருவர் மற்றவர்க்கு பாடம் சொன்னால் மறக்காது. அப்படி சொன்னால் அவனுக்கு அதிக மார்க் வருமே என்ற பொறாமை அவசியமில்லை. என்னிடம் யார் கேட்டாலும் உடனே விவரிப்பேன். வெவ்வேறு முறையில் (Paraphrasing ) சொல்லுவேன். பரிக்ஷை என்ற பயமே கிடையாது. மன உருப்போட மாட்டேன்,. விதிவிலக்கு-பாடத்தில் நினைவு வைத்து எழுத வேண்டிய பாடல்களை முனுமுனுக்கும் சங்கீதமாக நீனைவில் வைப்பேன். ஸ்லோகங்கள், பக்தி சாஸ்த்ரீய சங்கீதம்(Classical Music, Western and Indian) ) பாடல்கள் -தேவாரம். திருவாசகம், திருப்பாவை என்பவையை தினமும் சொல்வதால் மறதி நோய் (Alzheimer) இந்தியர்களுக்கு பொதுவாக வருவதில்லையாம். கருணா நாயுடு இதை பகுத்தறிவு என்று தள்ளியதை பின் பற்றிய குடும்பங்களே டாஸ்மார்க் வாடிக்கையாளர்கள். ஓட்டை விற்கும் திருடர்கள். அரசாங்கபள்ளி விட்டு ஓடும் அவலங்கள் நீட் தேர்வு தற்கொலையாளர்கள் (4) ஸ்லோகங்கள், பக்தி சாஸ்த்ரீய சங்கீதம் போன்றவவை (pattern recognition, pattern matching ) பேட்டர்ன் மேச்சிங், பேட்டர்ன் ரெகக்னீஷன் உருவக ஒப்புமை, உருவக உணர்வு என்பார்கள். (இந்த தமிழ் சொற்கள் எனது கற்பனேயை). 'ஸ ரி க ப த ஸ..' ஆகா மோகன ராகம் என்று உருவக உணர்வு -பேட்டர்ன் ரெககனிஜன்- என்று கேள்வி ஞானம் மூலம் சொல்கிரோம். ஆனல், அப்படி கண்டுபிடிக்க முயற்சிப்பது பேட்டர்ன் மேசிங்க - உருவக ஒப்புகையாகும். பேசும் போது, நீ எப்போ வந்தே என்பதில் தொண்டை ஒலியின் ஏற்றம் கடைசியில் அதிகமானதால், அதை கேள்வி என்று உருவக உணர்வை இலக்கணம் கற்ற உருவக ஒப்புமை மூலம் அறிகிறோம். வாழ்கையே இந்த இரண்டின் பின்னலே (5) அதே சமயம், இலக்கணம், விஞ்ஞானம், கணிதம் போன்றவை "உருவக ஒப்புமை, உருவக உணர்வை காண உதவி செய்யும் அடிப்படை விதிகள். ஆதால் அவற்றை மொட்டை உருப்போடுவதால், அவற்றை நடைமுறையில் உபயோகிக்க முடியாது. அதற்குத்தான் கட்டுறை எழுதுதல், வீட்டு கணக்கு போன்றவற்றை பலவித சூழ்நிலைகளில் உபயோகிக்க கற்றுக்கொள்கிறோம். ஏராளான வெவ்வேவேறான சூழ்நிலைகளில் பயன்படுத்த கற்று கொள்கிறோம். மொழியை எங்கும் எல்லோரிடமும் நீண்டகாலம் பேசுவதால் நமது உருவக ஒப்புமை,உருவக உணர்வுகள் திரும்ப திரும்ப மூளையில் பதிவதால் (சாதகம் ) மறப்பதில்லை. அதே சமயம் கட்டுறை எழுதுவது, மேடைப் பேச்சு எல்லோருக்கும் தேவை படுவதில்லை. பள்ளி கூடத்தில் பொதுவாக, வெகு குறைவாகவே பயன்படுத்துகிறோம். விஞ்ஞானம், கணிதம் போன்றவை வெளிப்பையாக, தினசரி வாழ்வில் வீட்டிலோ,வெளியிலோ திரும்ப திரும்ப பேசி ஞாபகத்தில் வைப்பதில்லை. ஒருவர் கீழே விழுந்து அடிபட்டு, வீட்டில், "இன்னைக்கு நியூட்டனின் 3-வது விதி வ்வொரு செயலுக்கும் அதே சக்தி உள்ள எதிர்மறை சக்தி உண்டு" என்று புரிந்து விட்டது" என்று மகிழ்ச்சியோடு சொன்னதாக தெரியவில்லை. பௌதீக பரீக்ஷை முடிந்தவுடன் அந்த விதியும் புஸ்தகத்தோடு பழய பேப்பர்காரடனிடம் போய் விட்டது. (6) இன்னொரு உதாரணம்: உடல் முழுவதும் பரவிய வேகாஸ் (vagus nerve ) நரம்பு என்று ஒன்று உள்ளது. "சர்வ வ்யாபி" என்று என் ஆசிரியர் சொல்வார். அதுதான் உடலின் எந்த பாகத்திற்கும் மூளைக்கும் செய்திகளை பரிமாறிக் கொள்கிறது. உலகத்தில் எல்லோருக்குமே காலையில் எழுந்தவுடன் பாத்ரூம்(மூச்சா என்று குழந்தையுடம் சொல்வோம்) போனதும் ஏற்படும் நிம்மதி, மகிழிச்சி அந்த வேகஸ் நரம்பு முலமே - ஆகா,அழுத்தம் குறைந்து விட்டாதே, அப்பாடா நிம்மதியாச்சு என்று உணர வைக்கிறது. நம்மிடம், நாம் எழுந்த உடன் யாராவது: என்ன, வேகஸ் நரம்பு நன்றாக வேலை செய்ததா" என்று கேட்ப்பதில்லை. அல்லது வேகஸ் நரம்பு சௌக்கியுமா என்று கேட்பதில்லை. ஆனால், அப்படி கேட்பதுதான் விஞ்ஞாப்படி சரியானது . அப்படி கேட்க வெட்கம், சை இதென்ன அசிங்கம் என்போம். ஆனால் அப்போது ஏற் படும் மகிஷ்ச்சியை, நிம்மதியை, எதையோ இழந்த உணர்வை மறைக்க முடியுமா? (இதை என் பெரிய மகனிடம் கேட்பேன். ஆமாம் நல்ல வேலை செய்யது என்று சிரித்துக் கொண்டே போவான். மனைவிதான் இப்படி கேக்குறது நல்லா இல்லைங்க என்று சொல்லி சிரித்துக் கொண்டே போய் விடுவாள். அது போவே சைக்கிளில் இருந்து விழுந்தால், என்னப்பா, நியூட்டனின் எந்த விதிகள் உன்னுடன் விளையாடின என்று கேட்பேன்.முறைத்துக் கொண்டே போவான்). அப்படி எல்லோரும் செய்வதில்லை . (7) அதனா லேயே "நான் படித்த படிப்புக்கு வேலை கிடைக்க வில்லை என்று கல்வியை குறை சொல்லி வெளி உலக வாழ்வில் (இயற்கை பௌதீக உலகில்) அந்த கல்வி வாழ்க்கையில் எப்படி அன்றாடம் இணைந்துள்ளது, அதை புரிந்து கொண்டு ஞாபகத்தில் வைத்து நடந்து கொள்ளாவிட்டால் ,சரியானபடி புரிந்து கொள்ளாதவர்கள் அதே இயற்கை விதிகாளால் ஜனநாயக முறையில் தண்டனை கிறார்கள். அதில் உயிர்இழப்பும்- இற்கை மரணதண்டனையும் அடங்கும். லஞ்சம் மூலம் அரசியல், அரசாங்க வியாதிகளாலும்- அமெரிக்க அதிபர் டிரம்ப் முதல் திருடர்கள் கழக தொளபதி நாயுடு வரை எவனாலுமே தடுக்க, மாற்ற முடியாது. (8) ஆளுமைத்திறமைகள் பள்ளியில் கற்காத அனுபவ பாடங்கள் ஒரு சிறந்த வழி காட்டியின் (நாகேஷ் தாய் போல) உதவியுடன், பலனை எதிர்பார்காத முடிந்த அளவு சமூக சேவையால் ஒரு வழிகாட்டி மூலமே கிடைக்கும். ஒரு உயிர் நண்பன், சிறந்த ஆசிரியர் (குரு- லஞ்சத்தில் வந்த பஞ்சபாதக பரமார்த்த வேர்குரு இல்லை), சிறந்த வழி காட்டியும் தேடித் திரிந்தே கண்டு பிடிக்க முடியும். என் வாழ்வில் அது நடந்தது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X