* பீரோ தட்டில், பச்சை கற்பூரத்தை பரப்பி, அதன்மேல் துணிகளை வைத்தால், பூச்சிகள் வராது; வாசனையுடனும் இருக்கும்
* மாதுளம் பழத்தின் உள் தோலால் பல் தேய்த்தால், பல் பளிச்சென்றும், உறுதியாகவும் இருக்கும்
* அசைவம் சமைத்த பாத்திரம், துர்நாற்றம் வீசாமலிருக்க, சிறிது புளியை தடவி ஊற வைத்து, பின் தேய்க்கவும்
* எள் வைத்திருக்கும் பாட்டிலில், சிறிது நெல்லை போட்டு வைத்தால், எவ்வளவு நாளானாலும் பூச்சி வராது.
* உளுந்து வடைக்கு மாவு அரைக்கும்போது, தண்ணீர் அதிகமாகி விட்டால், ஒரு ஸ்பூன் நெய் சேர்த்தால், மாவு கெட்டியாகி விடும்.
* பூசணிக்காய் அல்வா செய்யும் போது, தோல் சீவி, காயை 'பிரிஜ்'ஜில் சிறிது நேரம் வைத்து எடுத்தால், சீவல் சீராக விழும்.
* முட்டைக்கோஸ் வேக வைத்த நீரை, தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால், குடல்புண் ஆறும்.