அன்புடன் அந்தரங்கம்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஏப்
2011
00:00

அன்புள்ள அம்மாவுக்கு —
நான், 41 வயது நடுத்தர தொழிலதிபர். எனக்கு திருமணமாகி, 12 வருடம் ஆகிறது. மிகவும் அழகான, 30 வயது மனைவி; 11 வயதில் அழகும், அறிவும் உடைய மகள் இருக்கின்றனர். இருந்தும், தினமும் இறந்து, இறந்து வாழ்கிறேன்.
என் பிரச்னையை தாய், தந்தையிடம் சொல்ல முடியவில்லை. மனைவியிடம் சொன்னாலும், "நீ கோழை... நீ ஒரு அரவாணி...' என்று, உண்மைக்கு புறம்பாக பேசுகிறாள். எதற்காக என்று தான் தெரியவில்லை.
சற்று ஆழமாக உற்று நோக்கும் போதுதான், எனக்கு சிறு சந்தேகம் எழுந்தது. அவளுக்கு, ஈரல் மற்றும் கர்ப்பபையில் புற்றுநோய் இருப்பதும், அது, இப்போது தீவிரம் அடைந்து, வீடு முழுவதும் துர்நாற்றம் அடிக்கிறது என்றும் தெரிந்தது. அவளின் அந்த முன்று நாளில் வீட்டில் இருக்கவே முடியவில்லை.
அவள் உறவினர்களிடம் கேட்டால், "அவள் தங்கையை அழைத்துச் சென்று, படிக்க வையுங்கள்; எல்லாம் சரியாகி விடும்...' என்கின்றனர். தற்போதெல்லாம் உடல் சுகம், மாதம் ஒருமுறை அல்லது இரண்டு மாதத்திற்கு ஒரு முறைதான். அதனால், ஏற்படும் வேதனையோ, 15 நாட்கள் நரக வேதனை அனுபவிக்கிறேன். மருத்துவ சம்பந்தமான உபாதைகள்.
ஆனால், என் மனைவியை, வெறுக்கவும் முடியவில்லை; மேலோட்டமாக உடல் உறவு கொள்ளவும் முடியவில்லை. அவளை விட்டு, என்னால் ஒரு நாள் கூட பிரியவும் முடியவில்லை.
உடல் நலக் குறைவோடு, 12 வருடம் வீட்டில் சும்மாவே இருக்கிறேன் என்றால் பாருங்கள். ஆனால், என் தொழிற்சாலை, ஊழியர்கள் மூலம் நல்லபடியே ஓடிக் கொண்டிருக்கிறது; பணப்பிரச்னை இல்லை. என் பூர்வீக சொத்துக்காக அண்ணன், தம்பி குடும்பங்கள் மற்றும் உறவினர்கள்; என்னுடைய சுய உழைப்புக்காக மனைவி வகை உறவினர்கள். இதனால், சற்று தள்ளி இருக்கலாம் என்று, என் சொந்த வீட்டை வாடகைக்கு விட்டு, விட்டு, கோவையில் வாடகை வீட்டில் இருக்கிறேன்.
உடல் நிலை சரி இல்லை என்றால், "நடிக்கிறேன்...' என்கிறாள். என் நண்பரிடம் மேலோட்டமாக கூறினேன். அவர், "மனநல மருத்துவரிடம் ஆலோசனை பெறுங்கள்...' என்றார். நானும், என் மனைவியும் மனநல மருத்துவரை அணுகினோம். ஆனால், அவள் மருத்துவரிடம் எந்த உண்மையும் சொல்லவில்லை.
இப்போது என் பிரச்னை என்னவென்றால்...
என் மனம் அலை பாய்கிறது. பெண்களை, வயது வித்தியாசம் பார்க்காமல், உற்று பார்க்க சொல்கிறது; ஆனால், அறிவும், மனமும் தடுக்கிறது. எனக்கு, ஒரு பெண் குழந்தை உள்ளதே... எனக்கு சுய இன்பம், விலை மாது போன்ற சிற்றின்பம் அனுபவிக்கும் பழக்கம் கிடையாது.
தயவு செய்து என் மனைவியை நான் எப்படி பாதுகாப்பது? என் மனைவிக்கு இருக்கும் நோய், என் குழந்தைக்கும் வருமா? ஏன் என்றால், இருவருக்கும் ஒரே வகை ரத்தக் குரூப். என் மனைவியை கட்டாயப்படுத்தி கேட்ட போது, சிறுவயதிலிருந்து, அவளுக்கு இதயத்தில் ஓட்டை உள்ளது என்றாள். உடனே, இதய மருத்துவரை அணுகி, அனைத்து பரிசோதனைகளையும் செய்தேன். அவளுக்கு, இதயநோய் இல்லவே இல்லை என நிரூபணமானது.
மீண்டும் புற்றுநோய் சிறப்பு மருத்துவரிடம் போய் ஆலோசனை கேட்டேன். என்னை வெளியில் இருக்க சொல்லிவிட்டு, என் மனைவியை சோதனை செய்தார். "உங்கள் மனைவிக்கு எவ்வகை புற்று நோயும் இல்லை...' என்றார் மருத்துவர்.
"உங்கள் மனைவியை நல்ல மனநல மருத்துவரிடம் அழைத்து சென்று, இருவரும் ஆலோசனை பெறுங்கள். அதோடு, நீங்கள் புகைபிடிக்கும் பழக்கத்தையும் விடுங்கள்...' என்றார். 15 வருட மதுபழக்கத்தை, என் மனைவிக்காக, நான்கு ஆண்டுகளாக தொடுவதே இல்லை.
அதோடு மட்டும் அல்ல, அதிகம் சந்தேகப்படுகிறாள். என் வீட்டிற்கு அருகிலுள்ள என்னுடைய மற்றொரு நிறுவனத்திற்கு சென்றால் கூட, "இவ்வளவு மேக்கப் தேவையா?' என்கிறாள். சட்டை நன்றாக இருந்தால், அதை கிழித்து விடுகிறாள்; மை ஊற்றி அசிங்கப்படுத்துகிறாள்.
ஆனால், நான், ஏழு ஆண்டுகள் என் மனைவியை அனுபவித்த மாதிரி, எந்த தம்பதியும் இருந்திருக்க முடியாது. இத்தனைக்கும் அவள் போஸ்ட் கிராஜுவேஷன் படித்தவள். வீட்டை விட்டு வெளியே வர மாட்டாள். "வெயிலில் வந்தால், எனக்கு ஒத்துக் கொள்ளாது...' என்பாள்.
தயவு செய்து எங்கள் குடும்பம் நிம்மதியாக இருக்க வழி சொல்லுங்கள்.
பதிலுக்காக காத்திருக்கும்,
உங்கள் மகன்.

அன்புள்ள மகனுக்கு —
உங்கள் கடிதம் கிடைத்தது. கடிதத்தில் முன்னுக்குப் பின் முரணான தகவல்கள். நீங்கள் படித்த நபர். ஆனால், கடிதத்தில் பல எழுத்துப் பிழைகள். உங்களைப் பற்றி தகவல்களை சொல்லாமல், சாமர்த்தியமாக தவிர்த்துள்ளீர்கள்.
உங்கள் கடிதத்தை ஏறக்குறைய, நூறு தடவை திரும்ப, திரும்ப வாசித்தேன்; வாசித்ததில், உங்களைப் பற்றிய சில தகவல்கள் காணக் கிடைத்தன.
நீங்கள், நீண்ட நாள் குடி நோயாளி மற்றும் செயின் ஸ்மோக்கர்; செக்ஸ் அடிக்ட். காமப் பித்து பிடித்து உழல்கிறீர்கள். கல்யாணமான முதல் ஏழு ஆண்டுகள், மனைவியை மிதிமிஞ்சிய செக்சால் கதிகலங்க அடித்திருக்கிறீர்கள். சொந்த தொழிலைக் கவனிக்காமல், 12 ஆண்டுகளாக வீட்டிலேயே இருந்து, வீண் பொழுது போக்கி இருக்கிறீர்கள். உங்களது நடத்தை பற்றி எந்த உறவினரும் உளவறிந்து விடக் கூடாது என்பதற்காக, சொந்த வீட்டை வாடகைக்கு விட்டு, விட்டு, வாடகை வீட்டில் குடியிருக்கிறீர்கள். மனைவியின் தங்கை மீது, உங்களுக்கு ஒரு கண். மனைவிக்கு உடல்நலம் சரியில்லை எனக் கூறினால், எந்த உறவினர், "மனைவியின் தங்கையை கூட்டிப் போய் படிக்க வை. மனைவி சரியாகி விடுவாள்...' என்று கூறுவர்?
உங்களின், 12 வருட துர்நடத்தை, உங்கள் மனைவியை மனநோயாளி ஆக்கிவிட்டது. புற்றுநோய் தனக்கு வந்துவிடுமோ என பயப்படுவதற்கு, கார்சினோபோபியா என்று பெயர்.
ஆணித்தரமாக கூறுகிறேன்... உங்கள் மனைவிக்கு ஈரல் மற்றும் கர்ப்பப்பை புற்றுநோயோ, இதயத்தில் ஓட்டையோ இல்லவே இல்லை. அவளுக்கு, சிறுநீர் பாதை நோய் தொற்று இருக்கலாம் அல்லது அவர் வேண்டுமென்றே, தன் பிறவிப் பாதையை சுகாதாரமில்லாமல் வைத்திருக்கக் கூடும். மனைவியின் மனப் பதட்டமே, மாதவிலக்கு ரத்தத்தில், துர்நாற்றம் ஏற்படுத்தும் காரணி.
உங்களுக்கு வன்புணர்ச்சியில் மட்டுமே ஈடுபாடு. மனைவியை தொடுவதோ<, முத்தமிடுவதோ தாம்பத்யமாகாது என நினைக்கிறீர்கள். "சுய இன்பம் காணுவதற்கும், விலை மகளிடம் போவதற்குமா பேரழகியான இவளை மணந்தோம்...' என, குயுக்தியாக சிந்திக்கிறீர்கள். புற்றுநோய் தொற்று நோயல்ல மகனே...
நீங்கள் இருவருமே தற்சமயம் மனநோயாளிகளாக இருக்கிறீர்கள். உடல்நலம் சரியில்லை என பொய் கூறி, 12 வருடங்களாக வீட்டிலேயே இருந்து, செக்ஸ் பற்றி சிந்திக்கிறீர்கள். உங்களை கண்டிக்க, தண்டிக்க, தனக்கு பல நோய்கள் இருப்பதாக, உங்கள் மனைவி நடிக்கிறார்.
உங்களிருவருக்கும் இடையே கிடந்து, அல்லல்படுவது உங்கள், 11 வயது மகள்தான். அடுத்த சில வருடங்களில், அவள் பெரிய மனுஷி ஆகி விடுவாள். உங்கள் நடத்தை, அவள் நடத்தையை, எதிர்காலத்தை வெகுவாக பாதிக்கும். இந்நிலை தொடர்ந்தால், அவளும் மனநோயாளியாகும் வாய்ப்புள்ளது.
நீங்கள் இருவரும் ஒரு மனநல மருத்துவரிடம் சென்றிருக்கிறீர்கள். உங்கள் மனைவி மருத்துவரிடம் எந்த உண்மையும் சொல்லவில்லை என்றிருக்கிறீர்கள். நீங்கள் இதயத்தை, வாயை திறக்காத போது, அவர் எப்படி திறப்பார்? புற்றுநோய் சிறப்பு மருத்துவர் உங்களிடம் புகைப்பிடிக்கும் பழக்கத்தை விட்டுவிடக் கூறியிருக்கிறார் என்றால், உங்களது மனைவி அதை புகாராக அவரிடம் சொல்லியிருக்கிறார் என்றுதானே அர்த்தம்!
புற்றுநோய் மருத்துவர், "இருவரும் மனநல மருத்துவரிடம் சென்று, ஆலோசனை பெறுங்கள்...' எனக் கூறினார் என்றால், பிரச்னை இருவரிடமும் உள்ளது என்றுதானே அர்த்தம்!
கடந்த, 12 வருடங்களாக வேலைக்கே போகாத நீங்கள், ஒப்பனை செய்து, புத்தாடை உடுத்தி, வெளியே போனால், எந்த மனைவியும் சந்தேகம் தானே படுவார்! அவர் சட்டையை கிழித்தார், சட்டையின் மீது மை ஊற்றினார் என்பதெல்லாம் பொய்.
எல்லாம் சரி... தீர்வு சொல்லுங்கள் அம்மா என்றுதானே கேட்கிறீர்கள்?
நீங்கள் இருவரும் தனியாக அமர்ந்து ஆத்மார்த்தமாக பேசி, அவரவர் நடத்தும் நாடகங்களுக்கு, "முற்றும்' போடுங்கள். "செக்ஸ் டிஅடிக்ஷன்' ஆலோசனை, தனியாக மருத்துவரிடம் பெறுங்கள். காமத்தை கட்டுப்படுத்தும் விதமாக உங்கள் உணவுப் பழக்கத்தை மாற்றியமையுங்கள். தினமும் அலுவலகம் சென்று, தொழிற்சாலை பணிகளை சிறப்பாக நிர்வகியுங்கள்.
மனிதருக்கு சுயநலம் இருக்கலாம்; ஆனால், சுயநலம் மனித உருவில் நடமாடக் கூடாது. உங்களைப் போலவே, உங்களது மனைவிக்கும், மகளுக்கும் மனதிருக்கிறது என உணருங்கள். பிறரது இருப்புகளை அங்கீகரியுங்கள். விட்டுக் கொடுத்து வாழ்ந்தால், புலம்பல்கள் தேவைப்படாது. நிம்மதி வீடு தங்கும். வாழ்த்துக்கள்!
என்றென்றும் தாய்மையுடன்,
சகுந்தலா கோபிநாத்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (11)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சாம் - வாஷிங்டன்,யூ.எஸ்.ஏ
15-ஏப்-201120:12:03 IST Report Abuse
சாம் அது எப்படி தீர விசாரிக்காமல் இவரை குற்றம் சொல்ல முடியும்? அவருக்கு செக்ஸ் ஆசை இருப்பது தவறா? அது இயற்க்கை. அது இல்லாமலும், இருந்து கள்ள தொடர்பும் வைத்திருப்பது தான் தவறு. இருவரும் மனநல மருத்துவரை கலந்து ஆலோசிக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
ராம்குமார் - சென்னை,இந்தியா
14-ஏப்-201119:32:57 IST Report Abuse
ராம்குமார் மிக அருமை... எழுத்துக்களை வைத்தே மனதை படித்து விட்டீர்கள்....
Rate this:
Share this comment
Cancel
Raja - Ramnad,இந்தியா
11-ஏப்-201122:46:09 IST Report Abuse
Raja Super amma
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X