முதல்வர் பேசுகிறேன்... | கண்ணம்மா | Kannamma | tamil weekly supplements
முதல்வர் பேசுகிறேன்...
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

09 ஜூன்
2019
00:00

நான், எஸ்.முருகேஸ்வரி. கடந்த மூன்று ஆண்டுகளா, திண்டுக்கல், எம்.எம்.கோவிலுார், சி.எஸ்.எம்.ஏ., நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியோட முதல்வர். பள்ளி ஆசிரியை, கல்லுாரி பேராசிரியை, துறை தலைவர், பள்ளி முதல்வர்னு படிப்படியா வளர்ந்த எனக்கு, கல்வித்துறையில இது, 21ம் ஆண்டு.

நான் வந்தபின்...
ஐந்தாம் வகுப்பு வரை இருக்கிற எங்க பள்ளியில, சுட்டித்தனமான குழந்தைகளை வளர்க்கிற முக்கியமான பொறுப்பு எனக்கு. நான் வந்த பிறகு... வாரத்துல ஒருநாள், 'நோ புக் டே'ன்னு ஒரு திட்டம் கொண்டு வந்தேன். அதாவது, ஒவ்வொரு மாத கடைசி வெள்ளிக்கிழமைகள்ல, வகுப்புக்கு புத்தகங்கள் கொண்டு வர வேண்டாம். அன்றைய நாள் முழுக்க, குழந்தைகள் அவங்க இஷ்டம் போல சிரிச்சுப் பேசி சந்தோஷமா இருக்கலாம். இந்த புத்துணர்ச்சியோட பலன், அவங்க கற்றல் திறன்ல வெளிப்படுறதை நான் மனப்பூர்வமா உணர்றேன்.

ஆசிரியர்களுக்கு மத்தியில்...
'வீட்டு விஷயங்களை பள்ளிக்கு கொண்டு வராதீங்க; பள்ளி வேலைகளை வீட்டுக்கு கொண்டு போகாதீங்க!' - இதுதான், என்னோட ஆசிரியைகளுக்கு நான் தர்ற வழக்கமான அறிவுரை. இதை அறிவுரையா எடுத்துக்காம ஒரு ஆலோசனையா எடுத்துக்கிற அளவுக்கு, அவங்களுக்கு என் மேல அன்பிருக்கு!

மாணவச் செல்வங்களிடம்...
குழந்தைகளை சிரமங்களுக்கு பழக்காத பெற்றோரும், குழந்தைங்க கூட மனம்விட்டு பேசாத பெற்றோரும் தான் இங்கே அதிகம். இந்த தவறை, எங்க பள்ளி குழந்தைகள்கிட்டே நான் உட்பட யாரும் செய்றதில்லை.

கொடுத்ததும் பெற்றதும்
என் குடும்பத்திற்கான நேரத்தை பள்ளிக்கு நிறைய கொடுத்துட்டேன். இதை, இழப்பு பட்டியல்ல நிச்சயம் சேர்க்க மாட்டேன். ஏன்னா, வாழ்க்கையில என்ன சாதிச்சுட்டோம்ங்கிற நினைப்பு வரும்போதெல்லாம், என் மாணவர்கள் முகம் எனக்கு ஞாபகத்துக்கு வருது.

கம்பீர கனவுகள்
மதிப்பெண் அடிப்படையில வேறுபடுற மாணவர்கள், நற்பண்புகளால சமமானவர்களா இருக்கணும்; இதுக்கு, இந்த முருகேஸ்வரி காரணமா இருக்கணும்!

என் எதிர்காலம்
சொந்தமா ஒரு கல்வி நிறுவனம் துவக்கி, குறிப்பிட்ட சதவீத இடத்தை ஏழை குழந்தைகளுக்கு ஒதுக்கணும்; இலவச கல்வி வழங்கணும்; திருநங்கை, திருநம்பியருக்கு பணி வாய்ப்புகள் கொடுத்து ஊக்குவிக்கணும்னு மனசுல ஒரு திட்டம் இருக்கு.

என் நாட்டின் எதிர்காலம்
மாணவர்களை காட்டிலும் ஒருபடி மேல ஆசிரியர்கள் நற்பண்புகளை வளர்த்துக்கிறது நாட்டுக்கு நல்லது.

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X