கர்ப்ப காலத்தில் வரும் சர்க்கரை நோய்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஜூன்
2019
00:00

உடல் பருமன், குடும்பத்தில் சர்க்கரை நோய் இருத்தல், முட்டை பையில் நீர் கட்டிகள், உணவுப் பழக்கங்கள், வாழ்க்கை முறை போன்ற காரணிகளால் கர்ப்பிணிகளை சர்க்கரை நோய் தாக்குகிறது. கர்ப்பகாலத்தில் உடம்பில் நடக்கும் ஹார்மோன் மாற்றங்களால் இன்சுலினின் தேவை அதிகமாகிறது.
அந்தத் தேவையை கர்ப்பிணியின் கணையம் பூர்த்தி செய்யவில்லை என்றால் ரத்தத்தில் சர்க்கரை அளவு உடனே கூடிவிடும். சரி, அதனால் அந்தப் பெண்ணுக்கு என்ன பிரச்னை? அவள் நன்றாகத்தானே இருக்கிறாள்.
அவள் நன்றாக இருப்பாள். ஆனால் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவில்லை என்றால் பிறக்கப்போகும் குழந்தை நன்றாக இருக்காது.
* குழந்தையின் வயிற்றின் சுற்றளவு பெரிதாகும்.
* குழந்தையின் எடை கூடும்
* பிரசவ நேரத்தில் குழந்தையின் தோள்பட்டை கர்ப்பப்பையில் சிக்கிக்கொள்ளும். குழந்தையை வெளியில் எடுக்க முடியாமல் போய்விடும்.
* பல நேரங்களில் அவசர அறுவை சிகிச்சை செய்யவேண்டிவரும்.
* பிறந்தவுடன் குழந்தையின் சர்க்கரை அளவு மிகவும் குறைந்து அதனால் குழந்தையின் மூளை வளர்ச்சி பாதிக்கும்.
இதைத் தடுக்க கர்ப்பிணியின் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த வேண்டும்.
சரி, கர்ப்பமுற்றிருக்கும் பெண்ணிற்குச் சர்க்கரை நோய் இருக்கிறதா என்று எப்படிக் கண்டறிவது? மிகவும் சுலபம்,
மகப்பேறு மருத்துவர்களை முதலில் சந்திக்கும்போதே பல்வேறு ரத்தப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். அப்போதே சர்க்கரை அளவையும் பார்த்துவிடுவார்கள். சர்க்கரை இயல்பு நிலையில் இருந்தால் மீண்டும் 24 - 28 வாரங்களில் 75 கிராம் குளுக்கோஸ் பரிசோதனை செய்ய அறிவுறுத்துவார்கள். இதில் கர்ப்ப கால சர்க்கரை நோய் வந்திருக்கிறதா என்பது தெளிவாகத் தெரிந்துவிடும்.
எனக்கு கர்ப்பகால சர்க்கரை நோய் இருக்கிறது. மகப்பேறு மருத்துவரும் உறுதி செய்துவிட்டார். பிறக்கப் போகும் குழந்தைக்கு எந்தப் பாதிப்பும் வரக் கூடாது. நான் என்ன செய்ய வேண்டும்?
நல்ல கேள்வி. ஆனால் கவலை வேண்டாம். சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தால் குழந்தைக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. சர்க்கரை இருக்கவேண்டிய அளவு இதுதான்:
காலை வெறும் வயிறில் : 70 - 90 mg/ dl
1 மணி நேர உணவுக்கு பின் : 70-- - 140 mg/ dl
2 மணி நேர உணவுக்கு பின் : 70- - 120 mg/ dl
இந்த மூன்று எண்களை ஞாபகம் வைத்துக் கொண்டால் போதும். எந்தப் பிரச்னையும் வராது.
ஒரு வேளை என் சர்க்கரை அளவு அதைவிட அதிகமாக இருந்தால்.. .
கவலைப்பட வேண்டாம். மூன்று வழிகள் உள்ளன.
1. உணவுக் கட்டுப்பாடும், உடற் பயிற்சியும்.
2. மெட்பார்மின் என்ற மாத்திரை
3. இருக்கவே இருக்கிறது, இன்சுலின்.
பல சமயங்களில் வெறும் உணவுக்கட்டுப்பாட்டினாலேயே சர்க்கரையைக் குறைக்கலாம். சில தாய்மார்களுக்கு கூடுதலாக மெட்பார்மின் மாத்திரையோ அல்லது இன்சுலின் ஊசியோ தேவைப்படலாம். உங்கள் மகப்பேறு மருத்துவர் அனுமதித்தால் தினமும் அரை மணி நேரம் நடப்பது நல்லது.
இன்சுலின் ஊசியால் அல்லது மெட்போர்மின் மாத்திரையால் தாய்க்கோ குழந்தைக்கோ பாதிப்பு ஏற்படாதா?
இன்சுலினுக்கு ஒரு அபூர்வமான குணம் உள்ளது. அது நஞ்சுக்கொடியைத் தாண்டி குழந்தையிடம் செல்லாது.
அதனால்தான் இன்சுலினை கர்ப்பகால சர்க்கரை நோய்க்கான தரம் வாய்ந்த மருந்து என்கிறார்கள்.
இன்சுலினிலேயே பல வகைகள் உள்ளன. எந்த வகை உங்களுக்கு ஏற்றதென்று மருத்துவரைக் கலந்தாலோசித்து முடிவு செய்யுங்கள்.
மெட்பார்மின் மாத்திரையால் கர்ப்ப காலத்தில் ஆபத்தான பக்கவிளைவுகள் எதுவும் இல்லை என்று பல ஆராய்ச்சிகள் ஒருமுகமாகச் சொல்கின்றன.
பிரசவத்திற்கு பிறகும் சர்க்கரை நோய் நீடிக்குமா ?
கருவுற்று 20 வாரங்களுக்குப் பின் வரக்கூடிய சர்க்கரை நோய் பிரசவத்திற்குப் பின் குணமாகிவிடும். பிரசவமாகி ஆறு வாரங்களுக்குப் பிறகு இதை உறுதி செய்து கொள்வது நல்லது.
கருவுற்றிருக்கும் போது சர்க்கரை நோய் வந்தால் அந்தப் பெண்ணிற்கு வயதாகும்போது இரண்டாம் வகை சர்க்கரை நோய் வர வாய்ப்பு அதிகம். அடுத்த முறை கர்ப்பமாகும்போது சர்க்கரை அளவு கொஞ்சம் சீக்கிரமாகவே வந்துவிடும்.
உணவுப் பழக்கம், ஒழுங்கான உடற்பயிற்சி ஆறு மாதத்திற்கு ஒரு முறை சர்க்கரை நோய் பரிசோதனை செய்துகொள்ளுதல் அவசியம்.
-டாக்டர்.கிருஷ்ணன் சாமிநாதன்
கோவை
85264 21150

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X