விளையாட்டு வீரர்களும்... இடுப்பு வலியும்...!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஜூன்
2019
00:00

* இரு ஆண்டுகளாக மூட்டு வலியால் அவதிப்படுகிறேன். அடுத்த வாரம் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்ய உள்ளேன். அதன்பின் என்னால் அன்றாட செயல்பாடுகளுக்காக முழங்காலை மடக்க இயலுமா?
மூட்டு மாற்று சிகிச்சைக்கு பின்பு நன்றாகவே முழங்காலை மடக்க இயலும். பொதுவாக அன்றாட நடவடிக்கைகளான நடப்பது, நாற்காலியில் அமர்வது, மாடிப்படி ஏறி, இறங்குவாது போன்ற செயல்பாடுகளுக்கு 110 டிகிரி கோணத்தில் மூட்டு மடக்கினாலே போதும். இருப்பினும் சீரான முறையில் சரியான தொழில்நுட்பத்தில் மூட்டு மாற்று சிகிச்சை செய்யப்பட்டால் அனைத்து செய்கைகளும் செய்யக்கூடிய அளவிற்கு முழங்காலை மடக்கலாம்.

* ஐம்பது வயதான என் மனைவிக்கு OSTEOPOROSIS இருப்பது கண்டறியப் பட்டது. இளம் வயதில் கர்ப்பப்பையில் ஏற்பட்ட ஒரு பிரச்னையால் கர்ப்பப்பை மற்றும் கருமுட்டை எடுக்கப்பட்டது. மாதவிடாய் இளம் வயதில் நின்றது. இதனால் எலும்பின் அடர்த்தி குறையுமா?
பெண்களின் எலும்பின் தன்மையை காக்க ESTROGEN என்கிற ஹார்மோன் உதவி செய்கிறது. மாதவிடாய் நின்ற பின் இந்த ஹார்மோன் அளவு குறைந்தால் எலும்பின் அடர்த்தி குறையத் துவங்கும். இளம் வயதிலேயே மாதவிடாய் நிற்பது OSTEOPOROSISக்கு முக்கிய காரணம் ஆகும். மருத்துவரிடம் ஆலோசித்து அதற்கு உள்ள சிகிச்சை முறைகளை எடுத்துக் கொள்ளுங்கள்.

* எனக்கு வயது 32, பல விளையாட்டுகளில் சுறுசுறுப்பாக செயல்படும் எனக்கு 4 மாதங்களாக வலது இடுப்பினில் வலி உள்ளது. காரணம் புரியாமல் தவித்த எனக்கு கடந்த வாரம் ஒரு சிறப்பு மருத்துவரிடம் ஆலோசித்து எம்.ஆர்.ஐ., ஸ்கேன் எடுத்ததில் அது FEMORO ACETABULAR IMPINGEMENT என்று தெரியவந்தது. இதற்கு தீர்வு உண்டோ?
இளம் வயதில் ஏற்படும் இடுப்பு, மூட்டு வலிக்கு FEMORO ACETABULAR IMPINGEMENT ஒரு முக்கிய காரணம் ஆகும். குறிப்பாக இது விளையாட்டு வீரர்களிடம் சற்று அதிகமாக காணப்படும். தற்போது இதற்கு உள்ள ஒரே தீர்வு இடுப்பு மூட்டு நுண்துளை சிகிச்சையாகும். தேர்ந்தெடுக்கப்பட்ட சில நிபுணர்கள் இந்த சிகிச்சையை மேற்கொள்கின்றனர்.

* கடந்த வாரம் நடந்த சாலை விபத்தில் தோள்மூட்டு எலும்பு முறிந்தது. மருத்துவர் தோள்மூட்டு மாற்று சிகிச்சையை பரிந்துரைத்தார். மூட்டு தேய்மானத்திற்குத் தான் மூட்டு மாற்று சிகிச்சை என நினைத்திருந்தேன். எலும்பு முறிவுக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை சரியா?
மூட்டில் எலும்பு முறிவு மோசமாக ஏற்பட்டால் சில சமயங்களில் அதை சேர்த்து வைக்க முடியாது. அவ்வாறு உள்ளவர்களுக்கு அந்த மூட்டினில் முறிந்த எலும்புகளை அகற்றி செயற்கை மூட்டு பொருத்தப்பட்டால் நற்பயன்கள் அளிக்கும். தற்போது உள்ள நவீன தொழில்நுட்பத்தில் நல்ல அசைவுகளுடன் செயல்படக்கூடிய அளவிற்கு தோள்மூட்டின் செயற்கை மூட்டு விஞ்ஞானம் வளர்ந்துள்ளது. இப்படிப்பட்ட சகிச்சை தேள்மூட்டில் மட்டுமின்றி முழங்கை, முழங்கால் மற்றும் இடுப்பு மூட்டிலும் உண்டு.

கே.என். சுப்பிரமணியன்
எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை நிபுணர்,
மதுரை. 93442 46436

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X