நாங்க இப்படிதானுங்க! - நிறத்தில் இல்லை அழகு! | நலம் | Health | tamil weekly supplements
நாங்க இப்படிதானுங்க! - நிறத்தில் இல்லை அழகு!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

09 ஜூன்
2019
00:00

என் தங்கை பூஜாவுக்கு, அவளைவிட நான் நிறமாக இருப்பது, தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தி இருப்பது எனக்குத் தெரியும்.
கண்ணாடி முன், நாங்கள் இருவரும் நின்றால், என் நிறத்தையும், அவள் நிறத்தையும் ஒப்பிட்டுப் பார்ப்பதை, நான் பல முறை கவனித்து இருக்கிறேன்.
என் தங்கையிடம், பூஜா, நீ கலராக வேண்டும் என்றால், நிறைய பழங்கள், காய்கறிகள் சாப்பிட வேண்டும் என்று சொன்னேன். அவளுக்கு, காய்கறி, பழங்கள் சாப்பிடவே பிடிக்காது; சீஸ், பர்கர் போன்றவற்றையே விரும்பி சாப்பிடுவாள்.
நான் சொன்னதை நம்பி, பிடிக்காது என்றாலும், கலராக வேண்டும் என்ற ஆசையில், சாப்பிடத் துவங்கினாள். சிவப்பழகு கிரீம் விளம்பரங்கள் எல்லாம் இதைத் தான் செய்கின்றன.
நிறம் குறைவாக இருப்பவர்கள், எப்படியாவது சிவந்த தோல் வந்து விடாதா என்று எதிர்பார்ப்போடு அதுபோன்ற கிரீம்களை உபயோகிக்கின்றனர்.
என்னை விட, ஐந்து வயதே குறைந்த பெண்ணிற்கு, இந்த விஷயம் எவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது என்று நினைக்கும் போது, மனதிற்கு சங்கடமாக இருந்தது.
என்னை விடவும், சிவப்பாக இருப்பவர்களைப் பார்த்து, எனக்கும் தாழ்வு மனப்பான்மை வந்ததது உண்டு. ஒவ்வொரு இனத்தவருக்கும், பிரத்யேக நிறத்தை இயற்கை கொடுத்திருக்கிறது.
நிறத்தில் இல்லை உண்மையான அழகு என்பதை புரிந்து கொண்டதால், எத்தனை கோடி கொட்டிக் கொடுத்தாலும், இது போன்ற விளம்பரங்களில் நான் நடிக்க மாட்டேன்.
-சாய் பல்லவி, நடிகை

Advertisement

 



We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X