அமேசான் நிறுவனத்தின், 'எக்கோ' ஸ்மார்ட் ஸ்பீக்கர், இந்தியாவில் அதிகளவு வரவேற்பு பெற்றிருக்கிறது. இந்திய ஸ்மார்ட் ஸ்பீக்கர் சந்தையில் அது, 59 சதவீதத்தை கைப்பற்றி உள்ளது.
இத்தகைய வரவேற்பை அடுத்து, பிராந்திய மொழிகளிலும் ஸ்மார்ட் ஸ்பீக்கர் செயல்படும் வகையில் தயாரிக்க இருக்கிறது, அமேசான். முதற்கட்டமாக, ஹிந்தியில் குரல் வழி உத்தரவுகளை ஏற்கும் வகையிலான, ஸ்மார்ட் ஸ்பீக்கர் தயாரிப்பில் இறங்கி உள்ளது.
குரல் வழி உத்தரவுக்கான, 'அலெக்ஸா' மென்பொருள் இப்போதே ஓரளவு, 'இங்லிஷ்' உச்சரிப்பை புரிந்து கொள்கிறது. ஏற்கனவே பல பிரபல தயாரிப்புகள், அலெக்ஸா மென்பொருளை உபயோகிக்க துவங்கியுள்ளன. அப்படி கிட்டத்தட்ட, 13 சாதனங்கள் இந்திய சந்தையில் உள்ளன. ஆக, விரைவில் அலெக்ஸாவிலும் ஹிந்தி திணிப்பை எதிர்பார்க்கலாம்!