கார்ன் - மேத்தி புலாவ் | ருசி | Rusi | tamil weekly supplements
கார்ன் - மேத்தி புலாவ்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

09 ஜூன்
2019
00:00

தேவையான பொருட்கள்
வேகவைத்த பாசுமதி அரிசி - 1 கப்
நெய் - 3 டேபிள் ஸ்பூன்
பிரியாணி இலை - 1
கிராம்பு - 3-4
ஏலக்காய் - 3
மிளகு - 1 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் - 1
பிஞ்சு மக்காச்சோள விதை - அரை கப்
கரம் மசாலா 1 டீ ஸ்பூன்
குடைமிளகாய் நறுக்கியது - அரை கப்
பட்டை சிறிது துண்டு
வெந்தயக் கீரை ஒரு கை பிடி அளவு
உப்பு தேவைக்கு

செய்முறை
*வாணலியில் நெய் ஊற்றி, சூடானதும் பிரியாணி இலை, கிராம்பு, பட்டை, ஏலக்காய், மிளகு சேர்த்து வதக்கி, நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும். பொன்னிறமாக வெங்காயம் வதங்கியதும், நறுக்கிய வெந்தயக் கீரையை சேர்க்கவும். கீரை அடர் பச்சையாக மாறியதும், மக்காச்சோளம், குடைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
* கரம் மசாலா, உப்பு சேர்த்து நன்கு கலந்து, 10 நிமிடங்கள் மூடி வேக வைக்கவும். அதன்பின், வேக வைத்த அரிசியை போட்டு, தேவையானால் உப்பு சேர்த்து, மிதமான சூட்டில் 10 நிமிடங்கள் வைக்கவும்.
* இதன் மேல், விரும்பினால், வறுத்த முந்திரி, கிஸ்மிஸ் சேர்க்கலாம்.

Advertisement

 



We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X