மத்திய அரசில் வாய்ப்பு | வேலை வாய்ப்பு மலர் | Jobmalar | tamil weekly supplements
மத்திய அரசில் வாய்ப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

11 ஜூன்
2019
00:00

இந்தியாவின் இரும்பு உற்பத்தியில் பிரசித்தி பெற்ற ஸ்டீல் அதாரிடி ஆப் இந்தியா (செய்ல்) நிறுவனத்தில் மேனேஜ்மென்ட் டிரெய்னி - அட்மினிஸ்ட்ரேஷன் பிரிவில் காலியாக உள்ள 60 இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வயது: 14.6.2019 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 28 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அதாவது 14.6.1991க்கு பின்னர் பிறந்தவர்களாக இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பை முடித்துவிட்டு, இரண்டு வருட கால எம்.பி.ஏ., அல்லது முது நிலை டிப்ளமோ படிப்பை எச்.ஆர்., பெர்சானல் மேனேஜ்மென்ட் அண்டு இண்டஸ்ட்ரியல் ரிலேஷன்ஸ், மார்க்கெட்டிங், மெட்டீரியல்ஸ், லாஜிஸ்டிக்ஸ், சப்ளை செயின் மேனேஜ்மென்ட் போன்ற ஏதாவது ஒரு பிரிவில் குறைந்த பட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும்.

இதர தேவை: விண்ணப்பதாரர்களுக்கென்று சில குறைந்த பட்ச உடல் தகுதிகளும் தேவைப்படும். குறைந்த பட்ச உயரம் 150 செ.மீ., குறைந்த பட்ச எடை 45 கிலோ, கண்ணாடி அணிவதில் நிபந்தனைகள் உள்ளிட்ட சில தேவைகள் உள்ளன. முழுமையான தகவல்களை இணையதளத்தில் பார்த்து அறியவும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.700/-ஐ இந்தப் பதவிக்கான விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

தேர்ச்சி முறை: ஆன்லைன் முறையிலான எழுத்துத் தேர்வு வாயிலாக தேர்ச்சி இருக்கும். தமிழகத்தில் சென்னை, திருச்சி ஆகிய மையங்களில் இந்த தேர்வை எதிர்கொள்ளலாம்.

விண்ணப்பிக்க:
ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

கடைசி நாள்:
18.6.2019

விபரங்களுக்கு
: https://www.sailcareers.com/media/uploads/Final_English_detailed_advt_for_MT_Admn_-2019_2.pdf

Advertisement

 



We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X