தேசிய வேளாண் நிறுவனத்தின் இலவச பயிற்சி | விவசாய மலர் | Agrimalar | tamil weekly supplements
தேசிய வேளாண் நிறுவனத்தின் இலவச பயிற்சி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2019
00:00

காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர் அருகே இல்லீடு கிராமத்தில் தேசிய வேளாண் நிறுவனம் உள்ளது. இங்கு வேளாண், கால்நடை மற்றும் வேளாண் சார்ந்த பட்டம்/பட்டயம்/சான்றிதழ் படிப்பு பயின்றவர்களுக்கு இரண்டு மாத உறைவிட பயிற்சியை இலவசமாக நடத்தி வருகிறது. வேளாண்மை பயின்றவர்கள் சுய தொழில் துவங்கவும், அவர்கள் மூலமாக விவசாயிகளுக்கு தொழில்நுட்பங்களை வழங்குவதற்கும், இந்த திட்டத்தினை மத்திய அரசின் வேளாண் அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது. பயிற்சியின் போது உணவு, உறைவிடம் மற்றும் பயிற்சிக்கான புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படும். பயிற்சியின் போதே வங்கிக்கடன் பெறுவதற்கான விரிவான திட்ட அறிக்கையும் தயார் செய்து தரப்படும். பயிற்சி முடித்தவர்களுக்கு ஒரு நபருக்கு அதிகபட்ச வங்கிக்கடன் 20 லட்சம் ரூபாய் கிடைக்கும் வாய்ப்புள்ளது. மகளிர், எஸ்.சி., எஸ்.டி., பகுதியினருக்கு 44 சதவீதம், இதர பிரிவினருக்கு 36 சதவீதம் மானியமும் நபார்டு வழங்குகிறது. பட்டதாரி மாணவ, மாணவியரும் திட்டத்தில் சேர்ந்து பயனடையலாம். பயிற்சிக்கான முன்பதிவு நடக்கிறது. தொடர்புக்கு 96262 02756.
- எம்.விஸ்வலிங்கம், இணை இயக்குனர்
தேசிய வேளாண் நிறுவனம், செய்யூர், காஞ்சி.

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X