என் வயது, 72; தையல் ஆசிரியையாக இருக்கிறேன். வீட்டிலே வகுப்பு நடத்தி, பெண்களுக்கு தையல் கற்றுக் கொடுக்கிறேன். தினமலர் நாளிதழ் துவங்கியது முதல், என் தந்தை சந்தாதாரர். தொடர்ந்து, நானும் சந்தாதாரராக உள்ளேன்.
வெள்ளிக்கிழமைகளில், சிறுவர்மலர் இதழைத் தான் முதலில் படிப்பேன். அதில் வரும் கதைகள், என் தாய் கூறுவது போலவே இருக்கும்.
தையல் கற்க வரும் பெண்களிடம், அவர்களின் குழந்தைகளுக்காக, சிறுவர்மலர் படிக்க சொல்வேன்.
'அட்டை டூ அட்டை!' படங்கள், கதைகள் மிகவும் அருமை. வாழ்க சிறுவர்மலர்! வளர்க அதன் பணி.
- எ.ஆர்.ரங்கநாயகி, ராமநாதபுரம்.