அந்துமணி பா.கே.ப.,
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஜூன்
2019
00:00

கே
சமீபத்தில், ஒருவரின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள, மயானத்திற்கு சென்றிருந்தேன். அங்கு, இறந்தவரின் இறுதி சடங்கை நடத்தி கொண்டிருந்தர் வைதீகர். சற்று தள்ளி நின்று, இருவர் உரக்க சிரித்து, பேசிக் கொண்டிருந்தனர்.
இதை கவனித்த, சடங்கை நடத்தி வைக்கும், வைதீகர், 'சற்று தள்ளி போய் பேசுங்கள்... எந்த இடத்தில், எதை செய்வது என்ற வெவஸ்தை கிடையாதா...' என, கோபித்துக் கொண்டார்.
'இது என்னப்பா பெரிய விஷயம். பல நுாறு கேமராக்கள் சூழ, மீடியாகாரர்கள் கண்கொத்தி பாம்பாக கவனிக்கும், வி.ஐ.பி.,க்கள் கலந்து கொள்ளும் நிகழ்வுகளிலும் இத்தகைய கூத்து நடந்து, அசடு வழிந்துள்ளனரே...' என்று கூற ஆரம்பித்தார், திண்ணை நாராயணன் சார்:
* அமெரிக்காவில், செனட்டர் உறுப்பினராக இருக்கும், மெக்கலின் இறந்து போனார். இறுதிச் சடங்கு நடந்து கொண்டிருந்தது. நிகழ்ச்சிக்கு வந்த, வி.ஐ.பி.,க்கள், ஒருபுறம் அமர்ந்திருந்தனர். பத்திரிகை மற்றும் ஊடகங்களின் கேமரா, வி.ஐ.பி.,க்களின் பக்கம் திரும்பியிருந்தன.
இதையறியாமல், முன்னாள் அமெரிக்க அதிபர், ஜார்ஜ் புஷ், தன் அருகிலிருந்த, முன்னாள் அதிபர், ஒபாமாவின் மனைவியிடம், மிட்டாய் ஒன்றை ரகசியமாய் தள்ளிக் கொண்டிருந்தார். புகைப்படக்காரர்கள் விடுவரா... விளைவு, அப்புகைப்படம், 'சோஷியல் மீடியா'வில் பரவி, பெரும் சர்ச்சைக்குள்ளாகி விட்டது
* இரண்டாவது, உலக மகா யுத்தத்தின்போது, பிரான்ஸ் நாட்டின் பாதுகாப்பு படையினர் நடத்திய சாகசங்களை நினைவு கூறும் வகையில், ஒரு நினைவு விழா நடந்து கொண்டிருந்தது. அதற்கு, பிரான்ஸ் நாட்டின் தற்போதைய அதிபர், இமானுவேல் மக்ரோன் வந்து கொண்டிருந்தார். அப்போது, பள்ளி மாணவன் ஒருவன், அவரை, செல்ல பட்டப் பெயரில் அழைத்து, கிண்டல் செய்தான்.
இதனால், கடுப்பான, அதிபர், சுற்றுச் சூழலை மறந்து, அந்த மாணவனை அழைத்து திட்டியதுடன், ஆலோசனையும் வழங்கினார். நினைவு விழாவுக்கு வந்திருந்த கூட்டம், இதை, வேடிக்கை பார்த்ததோடு, சமூக வலைதளங்களில் பதிவும் செய்தன
* தென் ஆப்ரிக்க முன்னாள் அதிபர், நெல்சன் மண்டேலாவுக்காக, ஒரு நினைவேந்தல் நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. அதில், அமெரிக்காவின், முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, பிரிட்டன் பிரதமர் மற்றும் டென்மார்க் பிரதமர் கலந்து கொண்டனர். நினைவேந்தல் நிகழ்ச்சியை கவனிக்காமல், மூவரும், 'செல்பி' எடுத்து மகிழ்ந்தனர். இது, சமூக வலைதளத்தில் பரவி, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது
* தமிழக முன்னாள் முதல்வர், ஜெயலலிதா காலமானதற்கு அடுத்த நாள், அவருக்கு இறுதிச் சடங்கு நடந்து கொண்டிருந்தது. இதில் பங்கேற்ற ராகுல், காங்., மூத்த தலைவர்களில் ஒருவரான, குலாம்நபி ஆசாத்துடன் சிரித்து பேசிக் கொண்டிருந்தார். இது, சமூக வலைதளத்தில் பரவி, 'எங்கள் தலைவியை, ராகுல், அவமதித்து விட்டார்...' என, அ.தி.மு.க., தொண்டர்கள் முணுமுணுத்தனரே... நினைவிருக்கிறதா
* இந்த ஆண்டு, ஏப்ரல் மாதம், அமெரிக்க முன்னாள் அதிபர், ஜார்ஜ் டபிள்யு புஷ்ஷின் மனைவி, பார்பரா புஷ்ஷின் இறுதிச் சடங்கு நடந்தது. அதில், இன்றைய அமெரிக்க அதிபர், டிரம்ப், அவர் மனைவி மெலனியா டிரம்ப் மற்றும் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
டிரம்ப் ஒரு இடத்திலும், அவர் மனைவி, மெலனியா மற்றொரு இடத்திலும் உட்கார்ந்திருந்தனர். நிகழ்ச்சியில், திருமதி டிரம்ப்புடன், சிரித்து பேசிக் கொண்டிருந்தார், ஒபாமா. இது, சமூக வலைதளத்தில் வேகமாக பரவி, மெலனியாவை வறுத்தெடுத்து விட்டனர்.
- கூறி முடித்தார், நாராயணன் சார்.
இந்த விஷயத்தில், பிரபலமானவர்களும், சாதாரண மக்களும் ஒரே மாதிரியாக தான் இருக்கின்றனர் என்று நினைத்துக் கொண்டேன்.


எஸ்.குழந்தைசாமி எழுதிய, 'அமைதிக்கு 1,000 வழிகள்' புத்தகத்தில் படித்தது:
மகிழ்ச்சியாக இருக்கக் கூடிய, அனேகர்களிடம் கீழ்க்கண்ட நான்கு குணங்கள் இருக்கும்...
சுயமரியாதை: தங்கள் குறைகளை பெரிதுபடுத்திக் கொள்ளாமல், அவைகளை ஏற்று, தம்மை பற்றிய சுய மதிப்பு கொண்டிருப்பர். தம்மைப் போல் உண்டா என்ற கர்வத்திற்கும், இதற்கும் சம்பந்தம் கிடையாது.
சுய கட்டுப்பாடு: தங்களை ஒரு கட்டுப்பாட்டுக்குள் வைக்க கற்றுக்கொண்டவர்கள். தங்கள் தலைவிதியை தாங்களே நிர்ணயிக்க முடியும் என்ற உறுதி கொண்டவர்கள்.
நம்பிக்கையின் உறைவிடம்: இயலாத ஒன்றை நினைத்து, தம்மை தாழ்வாக எண்ணி குலையாமல், இயலும் ஒன்றை முன்னிலைப்படுத்தி, நம்பிக்கை ஒளியை உள்ளத்தில் ஏற்றி வைத்திருப்பர். இதனால், இப்படிப்பட்டவர்களை, ஜலதோஷம் போன்ற நோய்கள் தாக்காதவாறு, எதிர்ப்பு சக்தி உண்டாகி விடுகிறதாம்.
வலிய சென்று உறவாடுதல்: தங்களை ஒரு வட்டத்துக்குள் அடைத்துக் கொள்ளாமல், பலருடன் பழகுவர். சமூக அளவில் பலருக்கும் பயன் தரக்கூடிய பணிகளில் பங்கேற்று, பலருடைய பிரியத்தையும் பெற்று விடுவர்.

கார் விபத்தில், ஒருவனின் கால் முறிந்தது. பெரிய வக்கீலை அமர்த்தி, நஷ்டஈட்டுக்கு வழக்கு தொடுத்தான்.
'கால் முறிவுக்கு, நஷ்டஈடு, 10 ஆயிரம் ரூபாய்...' என, சாதகமான தீர்ப்பு கிடைத்தது.
வக்கீல், 9,000 ரூபாயை எடுத்து, மீதி, 1,000 ரூபாயை வாதியிடம் நீட்டினார்.
அதை, அவன் வாங்கிக் கொள்ள மறுத்து, திருதிருவென்று விழித்தான்.
'எனக்கு சேர வேண்டிய, 'பீஸ்' போக மீதம் இது. ஏன் விழிக்கிறாய்...' என்று கேட்டார், வக்கீல்.
'ஒன்றுமில்லை... எனக்கு ஒரு சந்தேகம்... காரில் அடிபட்டது நீங்களா... நானா...' என்று கேட்டான், அவன்.
எங்கோ, எதிலோ, எப்போதோ படித்தது.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
16-ஜூன்-201908:01:35 IST Report Abuse
Natarajan Ramanathan எனது வங்கியின் படிக்காத கஸ்டமரின் மகன் லாரியில் அடிபட்டு இறந்துவிட்டான். கேஸ் நாலைந்து ஆண்டுகள் நடந்து சுமார் நான்கு லட்சம் நஷ்ட ஈடு வங்கி கணக்கில் வந்தது. கஸ்டமரோடு வங்கிக்கு வந்த வக்கீல் கஸ்டமரிடம் கைரேகை வாங்கி பணத்தை எடுத்து தனது பீஸ் இரண்டரை லட்சம் எடுத்துக்கொண்டு மீதியை மட்டுமே அந்த கஸ்டமரிடம் கொடுத்தான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X