அந்துமணி பதில்கள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஜூன்
2019
00:00

ஆர்.நாராயணசாமி, கோவை: 'வாரமலர்' இதழ் மூலம், இவ்வளவு பரிசுத் தொகையை, வாசகர்களுக்கு கொடுக்க முடிகிறதா?
வாசகர்கள் அனைவரும், 'தினமலர்' இதழுக்கு, முதலாளிகள் அல்லவா... அதனால் தான் என்பதை, ஆசிரியர் சொல்லச் சொன்னார்!

* ஏ.கவுசியா,நெய்வேலி:'டிவி' சேனல்களில் வரும் தொடர்களைப் பார்த்து நிறைய பெண்கள், தம் வாழ்க்கையை வீணடிக்கின்றனரே...
உண்மை தான்! குடும்பத்தை கவனிக்க நேரமில்லாமல் போகிறது! மாமியார், கணவர் உட்பட, அங்குள்ள அனைவரிடமும், சச்சரவு, சண்டைகளை வளர்த்துக் கொள்கின்றனர்! இது போன்றவற்றை பார்க்காமல் இருப்பது நல்லது!

எம்.பாலகிருஷ்ணன், சென்னை: கப்பலில் பயணம் செய்திருக்கிறீர்களா... சிலருக்கு, அதில் பயணம் செய்யும்போது, ஒவ்வாமை ஏற்படுகிறதே ஏன்?
பல நாடுகளுக்கும், கண்டம் விட்டு கண்டமும் சென்றுள்ளேன். சிலருக்கு, 'சீ - சிக்னஸ்' உண்டு... இது, பிராண வாயு பிரச்னையால் வரும்! விமான பயணத்தின்போதும், சிலருக்கு வருவதுண்டு!

எஸ்.துர்கா, மதுரை:ஆங்கிலத்தில்,மட மடவென்று பேசுபவர்களைக் கண்டால், நாலடி தள்ளி நிற்க தோன்றுகிறதே... இது ஏன்?
ஸ்பானிஷ், ஜெர்மன், பிரஞ்ச் மொழியில் பேசுபவர்கள்... ஏன்... நமது, இந்தி, கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாளத்தில், மட மடவென்று பேசுபவர்களைக் கண்டும் பயம் ஏற்படுவதில்லையே!ஆங்கிலம் தெரியவில்லையே என்ற உங்கள் தாழ்வு மனப் பான்மையை துாக்கி எறியுங்கள் - என்னைப் போல்... அப்போது, தள்ளி நிற்க தோன்றாது!

கே.மகாலட்சுமி, திண்டுக்கல்: நான் யாருக்கும் கடன் கொடுப்பதில்லை... இதனால், 'இரக்கமில்லாதவள்' என, உறவினர்கள் புரளி பேசுகின்றனரே...
பேசினால் பேசட்டும்; ஆனால், கொடுங்கள்... இது, திரும்பி வராது என்பதை மனதில் நிறுத்தி வைத்துக் கொள்ளுங்கள்; மன வருத்தம் வராது!

வி.ஜி.கீதா, நெல்லை: கைகள் மற்றும் நெஞ்சில் முடி உள்ள வெளிநாட்டு பயணியரைக் கண்டால், சீன நாட்டு பெண்கள், ஓடி வந்து அணைத்து, அன்பு, 'உம்மா' கொடுப்பார்களாமே... இது, சீனா சென்று வந்த என் நண்பர் சொன்னது... உண்மையா?
சீன பெருஞ்சுவரில் நடந்து சென்றபோது, ஒரு முறையும், அடுத்த சீன விஜயத்தின் போது, ஜவுளிக்கடை ஒன்றிலும், இது போன்ற அனுபவம் எனக்குக் கிடைத்தது. நீங்கள் கூறியது போல், அந்த நாட்டு ஆண்களுக்கு, அங்கெல்லாம் முடி இல்லாததே காரணமாய் இருக்கலாம்!

* டி.ராஜா சார்லஸ், சென்னை: எல்லாவற்றுக்கும், 'கார்டு' தான் என்றால், பண புழக்கத்தில் நாடு தடுமாறாதா?
நிச்சயம் தடுமாறாது! 'கார்டு'களுடன் சேர்த்து, 10 ரூபாய் நோட்டுகளை, வைத்துக் கொள்ளுங்கள்... பீடி வாங்கவோ, பிச்சையிடவோ பிரச்னை வராது!

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X