இதப்படிங்க முதல்ல... | வாரமலர் | Varamalar | tamil weekly supplements
இதப்படிங்க முதல்ல...
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

16 ஜூன்
2019
00:00

தமிழ் பாடலை பாலிவுட்டுக்கு எடுத்து செல்லும், பிரபுதேவா!
ஆரம்ப காலத்தில், பாடல்களில் நடனமாடித்தான் புகழ் பெற்றார், பிரபுதேவா. அப்படி அவர் நடனமாடியதில், காதலன் படத்தில் இடம்பெற்ற, 'முக்காலா... முக்காபுலா...' என்ற பாடல், அவரை மிகவும் கவர்ந்த பாடலாம். அதனால், அந்த பாடலை, இந்தியில் நடித்து வரும், ஸ்ட்ரீட் டான்சர் - 3 என்ற படத்தில், 'ரீ - மிக்ஸ்' செய்து, தற்போதைய பாணியில், வித்தியாசமான நடன அசைவு கொடுக்க போவதாக கூறுகிறார்.
- சினிமா பொன்னையா

100 நாள் சவால்!
கைவசமுள்ள படங்களோடு, கல்யாணம் செய்து, சினிமாவுக்கு, 'குட் பை' சொல்லி விடுவார் என்ற தகவல் வெளியான நிலையில், அதிர்ச்சியுடன் அதை மறுக்கிறார், காஜல். அதோடு, 'சினிமா துறையே என்னை வெளியே போக சொன்னாலும், நான் போவதாக இல்லை. காரணம், என் தங்கை, நிஷா அகர்வால், ஒரே படத்தோடு வெளியேறி விட்டார். அதனால், அவருக்கும் சேர்த்து, சினிமாவில் நிறைய சாதிக்க ஆசைப்படுகிறேன். அதோடு, தற்போது, 100 நாள் சவால் என்ற பெயரில், 100 நாட்களாக உடற்பயிற்சி செய்து, உடம்பை, 'ஸ்லிம்' ஆக்கியதோடு, அழகு ஓவியமாக மாற்றியிருக்கிறேன். அதனால், சினிமாவில் இன்னும் நீண்ட துாரம் பயணிப்பேன்...' என்கிறார். உனக்கு ஆச்சு, எனக்கு ஆச்சு; பார்க்கிறேன் ஒரு கை!
எலீசா

பேய் பட இயக்குனர்களை கண்டு அலறும், அஞ்சலி!
கதையின் நாயகியாக, த்ரிஷா நடித்த பேய் படங்கள் எதுவுமே, அவருக்கு கைகொடுக்காதது போல், பேய் கதையில், அஞ்சலி நடித்த, லிசா படமும் வெற்றி பெறவில்லை. அதனால், பேய் பட இயக்குனர்களைக் கண்டாலே, பேயைக் கண்டது போல், அலறியடித்து ஓடுகிறார், அஞ்சலி. அதோடு, தன் கவர்ச்சியும், ரசிகர்களுக்கு கசந்திருக்கும் என்பதால், இனிமேல், காமெடி வழியில் பயணிக்க முடிவெடுத்து, கதை கேட்கத் துவங்கியிருக்கிறார். அடுத்தடுத்து முயன்றாலும், ஆகும் நாள் தான் ஆகும்!
எலீசா

நயன்தாராவின் அடுத்த அவதாரம்!
சினிமாவில், கதாநாயகிகளின் மார்க்கெட் எப்போது வேண்டுமானாலும் வீழ்ந்து போகலாம் என்பதால், சில படங்களில், உதவி இயக்குனராக பணியாற்றிய அனுபவத்தை வைத்து, கதை எழுதி வருகிறார், நயன்தாரா. தன் நடிப்புக்கு, மவுசு குறையத் துவங்கினால், அடுத்தபடியாக, இயக்குனர் அவதாரம் எடுக்கத் திட்டமிட்டுள்ளவர், பெண்களை மையப்படுத்திய கதைகளை, தயார்படுத்திக் கொண்டிருக்கிறார்.
- சினிமா பொன்னையா

கருப்புப்பூனை!
* சாவித்ரியாக நடித்து பெயரெடுத்த, வாரிசு நடிகையை, உடன் நடித்த எந்த, 'ஹீரோ'க்களும் இப்போது கண்டுகொள்ளவில்லை. இதற்கு காரணம், 'நான் பெத்த பேமிலி நடிகை...' என்று அம்மணி கொடுத்து வந்த, 'பில்ட் - அப்' தான். அதேசமயம், தற்போது, பாலிவுட்டில் அடியெடுத்துள்ள நடிகை, அசைவ நடிகையாவதோடு, நள்ளிரவு விழாக்களுக்கும் விஜயம் செய்கிறார். சேதியறிந்த கோலிவுட், 'ஹீரோ'க்கள், 'நாங்கள் அழைத்தால் ஆச்சாரம், பாலிவுட்டில் அழைத்தால், கோச்சாரமா...' என்று, நடிகையை கேலி செய்து, வெறுப்பேற்றி வருகின்றனர்.
'ஏண்டி, கீர்த்தி... கோடி வீட்டுல இருக்கிற, உன் தோழி வீட்டுக்கு போனா, எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டு செய்யறியாம்... நம்ம வீட்டுல, ஒரு துரும்பை கூட நகர்த்த மாட்டேங்கறியே... இது தான், ஊருக்கு இரும்பு இடிக்கிறது; வீட்டுக்கு தவிடு இடிக்க முடியலன்னு சொல்வாங்க...' என்று, புலம்பினார், அம்மா.

சினி துளிகள்!

* ஜெயலலிதா வாழ்க்கை கதையில் உருவாகும், தலைவி படத்தின் கதை, அவர் சினிமாவில் அறிமுகமான, 16 வயதில் இருந்து துவங்குகிறது.
* பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடித்து வரும் படத்தில், பிரபல இயக்குனர், பிரியதர்ஷனின் மகள், கல்யாணி பிரியதர்ஷன் நாயகியாக நடிக்கிறார்.
* கீர்த்தி சுரேஷும், வரலட்சுமியும், ஒரே, 'ஜிம்'மில், உடற்பயிற்சி செய்து வருகின்றனர்.

அவ்ளோதான்!

Advertisement

 



We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X