நாகேஸ்வரன் என்ற நாகேஷ்! (3)
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஜூன்
2019
00:00

அம்மை போட்டதில், 'செலக் ஷன்' தேர்வும், அதைத் தொடர்ந்து நடந்த இறுதி தேர்வும் எழுத முடியாமல் போனது. மனம் வெறுத்து, சொந்தமாக உழைத்து சம்பாதித்து வருவதாக, பெற்றோரிடம் சொல்லி, வீட்டை விட்டு கிளம்பி விட்டேன். ஆனால், எங்கு போவது, என்ன செய்வது என்று தெரியவில்லை. உள்ளூரிலேயே சில நாட்கள் சுற்றினேன். பசி வயிற்றை கிள்ளியது. என்ன செய்வதென்று யோசித்தேன்.
ஊரில், ஓரிடத்தில், இலவசமாக ஒருவர் சாப்பாடு போடுவார். அங்கே, சாப்பிட்டேன். 'வீட்டை விட்டு வீராப்பாக வெளியேறி, இப்படி, 'ஓசி'யில் சாப்பிடுகிறாயே...' என்று மனதுக்குள் ஒருவித குற்ற உணர்வு ஏற்பட்டது. இப்படியே இரண்டு, மூன்று நாட்கள் இலவச சாப்பாட்டில், வயிற்றை கழுவினேன்.
'நாலு காசு சம்பாதித்து, அதில் சாப்பிட வேண்டும். அதற்கு என்ன செய்யலாம்?' என்ற கேள்வி, என் மனதை குடைந்தது. யோசித்தபடியே, 'சப் - ரிஜிஸ்டிரார்' அலுவலகம் பக்கம் போன போது, கால் வலிக்கு சற்று இளைப்பாறலாம் என்றெண்ணி, ஒரு மரத்தடியில் உட்கார்ந்தேன்.
வயதான ஆசாமி ஒருவர், தயங்கி தயங்கி, என்னிடம், 'ஐயா... ஒரு மனு எழுதி தரணும். எனக்கு எழுத தெரியாது. கொஞ்சம் எழுதி தந்தீங்கன்னா, மவராசனா இருப்பீங்க...' என்றார், பணிவான குரலில்.
என்ன விஷயம் என்று கேட்டு, அவரது மனுவை எழுதி கொடுத்தேன். நன்றி சொல்லி, தன் இடுப்பில் கட்டியிருந்த வேட்டியின் முடிச்சை அவிழ்த்து, அதிலிருந்து கொஞ்சம் சில்லரையை எடுத்து நீட்டினார். நாகரிகம் கருதி, முதலில் மறுத்தேன். அவர் வற்புறுத்தினார்.
அவர் சென்ற பின், சில்லரையை எண்ணி பார்த்தேன். இரண்டு ரூபாய்! 'கால் மணி நேர உழைப்புக்கு, இரண்டு ரூபாய் சம்பளமா... சபாஷ்... நாகேஸ்வரா... உனக்கு, பிழைக்க ஒரு வழி காட்டி விட்டான், ஆண்டவன்!' என்று, என் முதுகில் நானே தட்டிக் கொடுத்து கொண்டேன்.
அன்று முதல், தினமும் காலை, அலுவலகம் திறக்கிற நேரத்தில், அங்கே போய் மரத்தடியில் உட்கார்ந்து விடுவேன். மனு எழுதி தரச்சொல்லி, ஐந்தாறு பேராவது வருவர். தினம், 10 - 12 ரூபாய் தேறியது. இதேபோல், சில நாட்கள் ஓட்டியிருப்பேன். வேலை போரடித்து விட்டது.
ஒரு நாள் காலை, சற்று துணிச்சலாக, அந்த அலுவலகத்தின் உள்ளேயே போய் விட்டேன். அங்கே, 'சப் - ரிஜிஸ்டிரார்' அறையில், காற்றோட்டத்துக்காக தொங்க விடப்பட்டிருந்த, 'பங்கா'வை, வயதான பெரியவர், உட்கார்ந்து ஆட்டிக் கொண்டிருப்பதை பார்த்தேன். சட்டென்று ஒரு யோசனை வந்தது.
'பங்கா' ஆட்டும் ஆசாமியிடம் சென்று, 'கொஞ்சம் நகர்ந்து கொள்ளுங்கள்...' என்று, சற்றே அதிகார தோரணையில் சொல்லி, நானே, பங்காவை வேகமாக ஆட்ட, காற்றோட்டத்தில் இருந்த வித்தியாசத்தை உணர்ந்து, 'ரிஜிஸ்டிரார்' குரல் கொடுத்தார்.
அவர் முன் போய் நின்றேன். 'நீ யாரு, புதுசா இருக்கே?' என்றார்.
'வேலை கிடைக்கவில்லை. பங்கா ஆட்டலாமே என்று, ஆட்டிக்கொண்டிருக்கிறேன்...' என்றேன். உடனே அவர், 'பங்கா ஆட்டுவதற்கென்று அரசே ஒருவரை வேலைக்கு வைத்திருக்கு. நீ போகலாம்...' என்றார்.
அங்கு வேலைக்கு வாய்ப்பில்லை என்று தீர்மானித்து, வெளியே வந்த எனக்கு, தாலுகா அலுவலகம் போய் முயற்சி செய்தால் என்ன என்று தோன்றியது.
தாலுகா அலுவலகத்துக்குள் நுழைந்து, சுற்றும் முற்றும் பார்த்தேன். ஒரு நாற்காலி காலியாக இருந்தது. அதில் உட்கார்ந்து கொண்டேன். அங்கிருந்த யாருமே, நான் யார் என, கவலைப்பட்டதாக தெரியவில்லை.
கொஞ்ச நேரம் சும்மா உட்கார்ந்து கொண்டிருந்த பின், 'டைப்' செய்ய ஆரம்பித்தேன்.
அப்போது, 'ஹலோ மிஸ்டர்...' என்று, பெண் குரல் கேட்டு, நிமிர்ந்தேன்.
பார்க்க லட்சணமாக, ஒரு இளம் பெண் நின்றிருந்தாள். அவளுடைய கையில் சில பேப்பர்கள். அவற்றை என்னிடம் நீட்டி, 'இதை, 'டைப்' செய்து கொடுங்கள்...' என்றாள், சற்று அதிகார குரலில்.
'ஐயம் சாரி... நான் கொஞ்சம் பிசி...' என்றேன்.
'இது, ரொம்ப அவசரம்... 'டைப்' செய்து தர முடியுமா... முடியாதா?'
'முடியாது...'
'நான் யார் தெரியுமா?'
'நீங்கள் யாராக இருந்தாலும் சரி, எனக்கு கவலை இல்லை!'
அந்த பெண், கோபத்துடன் விடுவிடுவென்று போய் விட்டாள். அடுத்த சில நிமிடங்களில், கண்ணியமான தோற்றமுள்ள ஒருவர் வந்தார்; கூடவே, என்னை மிரட்டிய பெண்.
'நான் யார் தெரியுமா... தாசில்தார்! என் பெண், 'டைப்' செய்வதற்கு உன்னிடம் கொடுத்தாளாம்... நீ, முடியாது என, திமிருடன் பதில் சொன்னியாமே...' என்றார், அதிகார தோரணையில்.
'உங்க பெண், 'டைப்' செய்ய சொன்னது, அவங்களோட சொந்த வேலை போலிருக்கு... அதை நான் ஏன் அடித்து தரவேண்டும். அதனால் தான் மறுத்தேன்...' என்றேன்.
'உனக்கு, ரொம்ப திமிர்... உன் மீது நடவடிக்கை எடுக்கப் போகிறேன் பார்...' என்றார்.
'நீங்கள், என்ன என் மீது நடவடிக்கை எடுப்பது?' என்று கேட்டு, படபடவென்று நாலு வரி 'டைப்' செய்து, 'டைப் ரைட்டர்' மிஷினிலிருந்து காகிதத்தை உருவி, அவரிடம் நீட்டினேன்.
நான் கொடுத்தது, ராஜினாமா கடிதம். தாசில்தார் அலுவலகத்தில் எனக்கு வேலையே கிடையாது. ஆனால், ராஜினாமா கடிதத்தை கொடுத்தவுடன், தாசில்தார் உட்பட எல்லாரும் குழம்பிப் போயினர்.
ஆக... இல்லாத வேலைக்கு, ராஜினாமா கொடுத்த விசித்திரமான ஆசாமி, நான் ஒருத்தனாகத்தான் இருப்பேன்.
தொடரும்.
நன்றி : கிழக்கு பதிப்பகம், சென்னை.

எஸ். சந்திரமவுலி

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X