இது உங்கள் இடம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஜூன்
2019
00:00

நண்பரின் வியாபார யுக்தி!
சமீபத்தில், அரிசி கடை ஒன்றை துவக்கினார், நண்பர். ஆரம்பத்தில், அவ்வளவாக வாடிக்கையாளர் இன்றி சிரமப்பட்டவர், அரிசி கடையை ஒட்டி, சிறு உணவகத்தையும் ஆரம்பித்தார்.
அதில், அரிசி வகை உணவுகளை மட்டும், சுகாதாரமான முறையில் தயாரித்து தருவதாக விளம்பரப்படுத்தினார். அதன்படி, தன் கடையிலுள்ள அரிசியிலிருந்து செய்யப்படும், இட்லி, தோசை, இடியாப்பம், ஆப்பம் மற்றும் புட்டு என, பல வகை சிற்றுண்டிகளை செய்து, விற்பனை செய்ய ஆரம்பித்தார்.
அவரின் வியாபார யுக்தியில், உணவகத்திற்கு சாப்பிட வருவோர், அரிசி கடைக்கும் வாடிக்கையாளர்களாக மாறினர்.
வருமானமின்றி தவித்த நண்பர், தற்போது, 10 பேருக்கு மேல், சம்பளத்திற்கு ஆள் வைத்து, படு ஜோராக, வியாபாரம் செய்து வருகிறார்.
எந்த தொழிலானாலும், கொஞ்சம் மாற்றி யோசித்தால், வெற்றி பெறலாம் என்பதற்கு, நண்பரே சிறந்த உதாரணம்!
- எஸ். விஜயன், உளுந்துார்பேட்டை.

வீடு கட்டுவோர் கவனிக்க...
நண்பனின் புதுமனை புகு விழாவிற்கு சென்றிருந்த எனக்கு, வீடு கட்டிய இடத்தை பார்த்தவுடன், மனம் படபடக்க ஆரம்பித்தது. 'சென்ற ஆண்டு, நான் வாங்கிய மனையாயிற்றே. இதில் எப்படி, நண்பனின் அப்பா வீடு கட்டினார்...' என, புரியாமல் தவித்தேன்.
இதுபற்றி, இப்போது பேசுவது முறையல்ல, விழாவிற்கு வந்திருக்கும் நண்பர்கள், உறவினர்கள் சென்றபின், நண்பனின் அப்பாவிடம் விவாதிப்போம் என்று, அமைதி காத்தேன். எல்லாரும் சென்ற பின், அவனிடம், என் ஐயத்தை தெரிவித்தேன்.
'இது, என் அப்பா வாங்கின மனையில் வீடு கட்டியிருக்கார். பத்திரத்தை எடுத்து காட்டட்டுமா...' என்றான்.
நாங்கள் பேசிக் கொண்டிருக்கும்போதே வந்தார், நண்பனின் அப்பா. நண்பன், விஷயத்தை சொன்னதும், பத்திரத்தை என்னிடம் கொடுத்து, படிக்கச் சொன்னார். நான் நினைத்தபடியே, என் மனையில் தான் கட்டப்பட்டிருந்தது, வீடு.
அவர் வாங்கிய மனை, என் மனைக்கு அடுத்தது என்று, நான் சொன்னதை கேட்டு, அவரும், பத்திரத்தை படித்தார்.
'தம்பி... நீ சொல்றது தான் சரி. எங்கோ தப்பு நடந்து போச்சு...' என்றவர், சில நிமிட மவுனத்திற்கு பின், 'உனக்கு ஆட்சேபனை இல்லைன்னா, நான் சொல்றதை கேப்பியா தம்பி... தெரியாத்தனமா, சரியா பாக்காம, உன் இடத்துல, வீடு கட்டிட்டேன். அது, என் தப்பு தான்.
'என் மனை, 4 சென்ட்; உன்னுடையது, 3.5 சென்ட். உன் மனையை, எனக்கு எழுதிக் கொடுத்துடு, என் மனையை, உனக்கு எழுதிக் கொடுத்துடறேன். பத்திர செலவு முழுவதையும் நானே ஏத்துக்கறேன். என்னப்பா சொல்றே...' என்றார்.
அவர் சொன்னபடியே, பத்திரப் பதிவு அலுவலகத்தில், வீட்டு மனைகளை பரிமாறிக் கொண்டோம்.
வாசகர்களே... புது வீடு கட்டும்போது, உங்களின் மனை தானா என்று உறுதியாக தெரிந்த பின், வீடு கட்டுங்கள். இல்லையேல், பெரும் விபரீதங்களை சந்திக்க வேண்டி வரும்.
— எஸ்.ஏ. மாரப்பன், கோவை.

நெகிழ வைத்த முதியவர்!
எங்கள் பகுதியில், வயதான ஒருவர், தோட்ட வேலை கேட்டு வந்தார். மாதம் இருமுறை தோட்டத்தை சுத்தப்படுத்துவது, கூட்டி பெருக்குவது போன்ற வேலை கொடுத்து, காலை - மதியம் சாப்பாடு போட்டு, வேலைக்கு அதிகமாகவே பணமும் கொடுத்து அனுப்புவாள், என் மனைவி.
'ஏன் அவருக்கு வேலை கொடுத்து, பணம் தருகிறாய்... சும்மாவே தரலாம் அல்லவா...' என்றேன்.
'சும்மா கொடுத்தால் சங்கடப்படுவார். எனவே, சிறு வேலை கொடுத்து, சாப்பாடும், பணமும் கொடுத்து அனுப்புகிறேன். ஏதோ நம்மால் ஆன உதவி...' என்பாள்.
சமீபத்தில், வெளியூர் சென்று, ஒரு வாரத்திற்கு பின் திரும்பினோம். வீட்டு வாசல், தோட்டம் எல்லாம் கூட்டி சுத்தமாக இருந்தது. எங்களுக்கோ ஆச்சரியம். அடுத்த நாள், தோட்டகாரர் வந்ததும், விசாரித்தோம்.
'பக்கத்து தெருவில், ஊருக்கு போன, ஒருவரது வீட்டில், திருட்டு நடந்ததா சொன்னாங்க... உங்க வீட்டிலும் ஆள் இல்லைன்னு தெரிஞ்சது... அதான் ஆள் இருப்பது போல, தோட்டத்தை சுத்தப்படுத்தினேன்...' என்றார்.
எங்களுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. உடனே, என் மனைவி, 'பணம் வாங்கிக்கோ...' என்று கொடுத்தாள். அதற்கு அவர், 'வேண்டாம்மா... நான் வயதானவன் என்று நீங்கள் ஒவ்வொரு முறையும் நிறையவே கொடுத்துள்ளீர்கள்; அந்த பணமே போதும்...' என்று, வாங்க மறுத்து விட்டார்.
நெகிழ்ந்து போன நாங்கள், 'தர்மம் வீட்டையும் காக்கும்'ன்னு தெரிந்து கொண்டோம்.
- கி.ரவிக்குமார், நெய்வேலி.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (11)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Girija - Chennai,இந்தியா
22-ஜூன்-201913:53:37 IST Report Abuse
Girija நீங்கள் ஒரு ஏழை குழந்தையின் இந்த வருட கல்வி செலவை ஏற்றுக்கொள்ளக்கூடாது? யாரை தொடர்புகொள்வது என்று தெரியவில்லையா? ஈரநெஞ்சம் கோவை தொடர்புகொள்ளுங்கள்
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
20-ஜூன்-201900:22:59 IST Report Abuse
Girija வீட்டில் அடங்காதது தெருவில் தான் அடங்கும் அல்லது அடக்கிவைப்பார்கள். கருத்து சொல்பவர்களை நக்கலடிக்க, வகைதொகை இல்லாமல் எழுதும் , தான் சேர்ந்திருக்கும் கூட்டத்திற்கு ஸலாம் என்ற லைக் போட என்று அலையும் சொந்த அடையாளமில்லாமல் மறைந்து செயல்படும் கூட்டம் ஒருநாள் அடங்கும், அடக்கப்படுவார்கள்.
Rate this:
Cancel
Yezdi K Damo - Chennai,இந்தியா
18-ஜூன்-201914:54:26 IST Report Abuse
Yezdi K Damo இந்த மூணு கடிதமும் ஜஸ்ட் ஆவெரேஜ்தான் . நம்ம இளைய தளபதி விஜய் எழுதின கடிதம்தான் டாப் டக்கர் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X