அன்புடன் அந்தரங்கம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஜூன்
2019
00:00

அன்புள்ள அம்மாவுக்கு —
என் வயது, 24. என் பெற்றோருக்கு, நானும், தங்கையும் தான். காதல் திருமணம் செய்த பெற்றோர், ஒரு கட்டத்தில், கருத்து வேறுபாட்டால், பிரிந்து விட்டனர். நானும், தங்கையும் அப்பாவிடம் இருக்கிறோம். அம்மா, அவரது பெற்றோர் வீட்டில் வசிக்கிறார்.
சிறிய ஓட்டல் வைத்துள்ளார், அப்பா. என்னையும், தங்கையையும் கண்ணும், கருத்துமாக பார்த்துக் கொள்கிறார். நான் பட்டப்படிப்பு முடித்து, தற்சமயம், வங்கியில் வேலை செய்கிறேன்.
உடன் படித்த தோழன் ஒருவன், போட்டி தேர்வு எழுதவும், வங்கி வேலை கிடைக்கவும் உதவி செய்தான்; சி.ஏ., படித்து வரும் அவன், விரைவில் முடித்து விடுவான்.
நாளடைவில், நானும், அவனும் காதலிக்க ஆரம்பித்தோம். இந்நிலையில், எனக்கு ஒரு வரன் வந்தது, அப்பாவுக்கு பிடித்து விட்டது. என் காதலை அப்பாவிடம் சொல்ல, 'எங்களுடைய காதல் - திருமண வாழ்க்கை தான் தோல்வி அடைந்து விட்டது... அந்த நிலைக்கு நீயும் ஆளாகாதே...' என்கிறார்.
இதை அவனிடம் கூறியபோது, 'உன் அப்பா சொல்வதும் சரி தான்... முடிவு எடுக்க வேண்டியது நீ தான்...' எனக் கூறி விட்டான்.
அப்பாவா, என்னை வெற்றிப் படியில் ஏற்றி விட்ட காதலனா... யார் பக்கம் இருப்பது. இந்த குழப்பத்துக்கு, நல்ல தீர்வை சொல்லுங்கள் அம்மா.
இப்படிக்கு,
உங்கள் மகள்.


அன்பு மகளுக்கு —
காதல் திருமணமோ, பெரியோர் பார்த்து வைத்த திருமணமோ, ஒரு திருமணம் ஜெயிக்க, அதில் அங்கம் வகிக்கும், ஆண் - பெண்ணின் அணுகுமுறையே முழு முதற்காரணம். காதல், சுத்த தங்கம் என்றால், காமம், செம்பு போல. சுத்த தங்கத்துடன் செம்பு கலந்தால் தான், திருமண வாழ்க்கை எனும் நகை செய்ய முடியும். செம்பு மிகுந்து விட்டால், செய்த தங்க நகைக்கு மதிப்பிருக்காது.
இன்னுமொரு உதாரணம்... பேருந்தில் இரண்டு பேர் பயணிக்கும் இருக்கை தான், திருமண வாழ்க்கை. ஜன்னலோர இருக்கை வேண்டும் என எதிர்பார்ப்போம். ஆனால், ஏற்கனவே ஒன்றரை ஆள் இருக்கையை, சக பயணி கைப்பற்றியிருப்பார். மீதி அரை இருக்கையில் நாம் அமர வேண்டும்.
பயணத்தின் போது, அரை இருக்கையில் இருந்தும், நம்மை தள்ளுவார், சக பயணி. நுனி இருக்கை வழுக்கும். பேருந்தின் வேகத்தில் விழுந்து விடாமலும், சக பயணியின் ஆக்கிரமிப்பை சகித்தும், சில மணி நேரம் பயணிக்கிறோம்.
'நல்லவேளை பேருந்தை தவற விடவில்லை. பேருந்தின் இருக்கை நிரம்பி, நாம் நின்று வரும் நிலை ஏற்படவில்லை. குறித்த நேரத்தில், விரும்பிய இடத்திற்கு போய் கொண்டிருக்கிறோம்...' என, நம்மை நாமே சமாதானப்படுத்திக் கொள்கிறோம். அந்த சில மணி நேர சகிப்பு தன்மையை, ஆயுட்காலத்திற்கு நீட்டித்து கொள்வதே, திருமண வாழ்க்கை.
தாயை பிரிந்தவுடன் மறுமணம் செய்து கொள்ளாமல், நல்ல தந்தையாய் இருந்து, உன்னையும், தங்கையையும் பராமரித்து வருகிறார். காதல் திருமணம் நல்லதல்ல என, தன் அனுபவத்திலிருந்து கூறுகிறார்.
'நான் போட்டி தேர்வு எழுதவும், வங்கி பணிக்கு போகவும் உதவினான்... நன்றிக்கடனாய் காதலிக்கிறேன்...' என்கிறாய்.
தேர்வு எழுத, பணிக்கு போக உதவியமைக்கு, 'சர்வீஸ் சார்ஜ்' கொடுக்கலாம். அதற்காக, மனதை கொடுக்கலாமா?
உன் அப்பா சொல்வதை, அவன் மறுதலித்து, 'நம் காதல் அமரத்துவமானது. வார்த்தைகளில் சொல்ல முடியாத அளவிற்கு உன்னை காதலிக்கிறேன். திருமண வாழ்க்கை, தந்தையின் வாழ்க்கையை போலல்லாது, மிகப்பெரிய வெற்றி பெறும். தொடர்ந்து பேசி, தந்தையின் சம்மதத்தை பெறுவோம்...' என, உன் காதலன் கூறியிருக்க வேண்டும்.
அதை விடுத்து, தந்தையின் கருத்தை ஆமோதிப்பது, உன் காதலை, அவன் சீரியசாக எடுத்துக் கொள்ளவில்லை என்றே அர்த்தம். உன்னைப் போன்றே பல பெண்களுக்கு தேர்வு எழுத, பணிக்கு போக உதவி இருப்பான். நன்றி உணர்வை காட்ட, உன்னைப் போன்று பல பெண்கள், அந்த, சி.ஏ., வாலிபனிடம் காதலை தெரிவித்திருக்கலாம்.
தந்தையின் காதலையும், அவரின் திருமண வாழ்க்கையையும் ஆய்வு செய். காதலின் வெற்றியை திருமண வாழ்க்கையில் சவ்வூடு பரவல் செய்ய தெரியாமல், உன் தாய் தோற்றாளா, தந்தை தோற்றாரா அல்லது மனப்பொருத்தம் இல்லாத இருவரை இணைய செய்து, காதல் தோற்றதா என, தெளிவு பெறு.
உனக்கும், காதலனுக்கும் இடையே ஆன காதலை ஆய்வு செய். எந்த அடிப்படை காரணத்தால், இருவருக்குள்ளும் காதல் பூத்தது... காதலும், இதன் பின்னான திருமண வாழ்க்கையும் வெற்றி பெற எத்தனை சதவீதம் வாய்ப்பு உள்ளது என அலசு.
கால அவகாசம் எடுத்துக் கொள். நன்றி உணர்வுக்கு அப்பாற்பட்டு உன் காதல் ஜீவிக்கிறதா, காதலில், உன் காதலன் விசுவாசமாக இருக்கிறானா, காதலை பற்றிய அபிப்ராயத்தை தந்தை மாற்றிக் கொள்கிறாரா, சி.ஏ., வாலிபனை விட சிறப்பானவனை சந்திக்கிறாயா என பார்.
குழப்பத்திலிருந்து தெளிவான மனநிலைக்கு மாறுவாய். அப்போது, சிறப்பான முடிவை எடுப்பாய். வாழ்த்துக்கள் மகளே!

என்றென்றும் தாய்மையுடன்,
சகுந்தலா கோபிநாத்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (6)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SIVAKUMAR - TIRCUHIRAPPALLI,இந்தியா
20-ஜூன்-201913:01:48 IST Report Abuse
SIVAKUMAR ப்ளீஸ் ,,, அப்பாவின் சொல் பேச்சை மதிக்கவும்...இரண்டு பெண் பிள்ளைகளை வளர்ப்பது சாதாரண வேலை இல்லை .உன் தந்தை எவ்வளவு கஷ்டம் தாங்கி இருப்பர் . உன்னுடைய காதலால் உன் தங்கைக்கு வரன் தள்ளிப்போகலாம் .காதலன் செய்த உதவியை விட உன் தந்தையின் தியாகம் பலமடங்கு உயர்ந்தது .
Rate this:
Girija - Chennai,இந்தியா
21-ஜூன்-201900:16:42 IST Report Abuse
Girijaநீங்கள் சொல்வது மிகவும் உண்மை தந்தையின் தியாகம் மிக பெரியது ஆனாலும் கையில் இருப்தைவிட்டு பறப்பதற்கு ஆசை படக்கூடாது. தங்கையின் திருமணம் பற்றி இப்போது குழப்பிக்கொள்ள முடியாது....
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
20-ஜூன்-201910:40:42 IST Report Abuse
Girija சகோதரி நீ செய்த முதல் தவறு உன் காதலனிடம் உனக்கு இன்னொரு கதவு திறந்திருக்கிறது என்று சொன்னது, இதை எந்த ஆண்மகனும் ஏற்றுக்கொள்ள மாட்டான் அதுதான் உன்னையே முடிவு எடுக்க சொல்லிவிட்டான். வெறும் இந்த நிகழ்வை பார்க்கும்போது உன்காதலனுக்கு கவுரவம் உள்ளது. அவன் உன் வருமானத்தை சார்ந்து இருக்கமாட்டான் என்று தெரிகிறது. மேலும் அவன் சி ஏ விரைவில் முடித்துவிடுவான் என்று நீ சொல்வதை நன்றாக உறுதிசெய்துகொள். உனக்கு ஏற்கனவே நன்கு தெரிந்தவன் உன் குடும்பத்தை பற்றி அறிந்தவன் என்பதால் உன்னை புரிந்து நடந்துகொள்வான். வரன் பார்த்து கல்யாணம் நடந்தாலும் பல பிரச்சனைகள் கேள்விகள் வரும் உன் அம்மாவை பற்றி, ஓடி போனாளா? எப்போ? எங்கே? கடைசியா எப்போ பார்த்தே? என்று அதையும் நினைவில் வைத்துக்கொள். உன் காதலன் நல்ல பழக்கவழக்கங்கள் உடையனவாக இருந்தால், உதவி செய்கிறேன் என்று எப்பொழுதும் பெண்கள் பின்னால் அலையாதவனாக இருந்தால், சி ஏ படிப்பையும் முடித்துவிடுவான் என்றால் நீ அவனிடம் உன் அப்பா சொன்னதாக கூறியது தவறு என்று சொல்லி மன்னிப்பு கேள், திருமணத்திற்கு வாழ்த்துக்கள். ஒன்றை கவனமாக நினைவில் கொள், பெரிய நிறுவனங்களில் நேர்முக தேர்வில் சிலர் ஆர்வக்கோளாரின் காரணமாக எனக்கு ஏற்கனவே வேறு இடங்களில் இருந்து ஆபர் உள்ளது என்று சொல்லி வரப்போகிற நல்ல வாய்ப்பை நழுவவிடுவர். அதனால் உங்கள் சக்தி எவ்வளவு என்பதை எப்போதும் வெளியே சொல்லக்கூடாது.
Rate this:
Cancel
Valaikuda Vallal - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
20-ஜூன்-201910:04:23 IST Report Abuse
Valaikuda Vallal காதல் திருமணத்தை விட, பெற்றோரால் செய்து வைக்கப்படும் திருமணமே சால சிறந்தது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X