ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஜூன்
2019
00:00

விநாயகரின் கையில் அங்குசம், பாசம், தந்தம் ஆகிய ஆயுதங்கள் இருப்பதைப் பார்த்திருப்பீர். ஆனால், காதல் திருமணங்களுக்கு கை கொடுக்கும் வகையில், பூவை மட்டும் கையில் ஏந்தி காட்சி தரும், விநாயகரை, கடலுார் மாவட்டம், திருப்பாதிரிபுலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் தரிசிக்கலாம். திருப்பாபுலியூர் என்றும், இவ்வூரை அழைப்பர்.
சிவனும், பார்வதியும், சொக்கட்டான் ஆடிக்கொண்டிருந்தனர். தொடர்ந்து, சிவனே ஜெயிக்க, ஊடல் கொண்ட பார்வதி, அவரது கண்களை விளையாட்டாக மூடினாள். சூரிய, சந்திரராக கருதப்படும், சிவனின் கண்கள் மூடப்பட்டதால், உலகம் இருண்டது; உயிர்கள் சற்று நேரம் சிரமப்பட்டன. எனினும், அந்த சிரமம், அளவிட முடியாததாக இருந்தது.
இதனால், பார்வதியிடம், 'விளையாட்டு வினையாகி விட்டது. இந்த வினை தீர்க்க, நீ பூலோகம் சென்று தவமிரு. எப்போது உன் இடது கண்ணும், இடது தோளும் துடிக்கிறதோ, அன்று நான் பூலோகம் வந்து, உன்னை மணந்து கொள்வேன்...' என்றார், சிவன்.
இதன்படி, பார்வதி, பாதிரி மரங்கள் அடர்ந்த ஒரு காட்டில் தங்கினாள். சிவன் சொன்னது போல நடக்கவே, அவரைத் திருமணம் செய்து கொண்டாள். பாதிரி மரங்கள் அடர்ந்த இந்த ஊர், திருப்பாதிரிபுலியூர் எனப்பட்டது.
பிற்காலத்தில், இங்கு கோவில் எழுந்தது. சுவாமி, பாடலீஸ்வரர் என்றும், அம்பாள், பெரியநாயகி என்றும், பெயர் பெற்றனர். சிவன், பார்வதியை காண வரும்போது, ஆயிரம் சந்திர கலைகள் சூடி, பிரகாசமாக வந்தார். அவரது அழகு, அம்பாளை கவர்ந்தது. அழகான கணவனை, யாருக்கு தான் பிடிக்காது... சிவனை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என, பார்வதி, நினைத்தாள்.
இதனால், இந்த கோவிலின், பள்ளியறை பூஜையின் போது, அம்பாளே, அங்கு எழுந்தருளி விடுகிறாள். மற்ற கோவில்களில், சிவன் தான், பள்ளியறைக்கு எழுந்தருளுவார். இது ஒரு வித்தியாசமான நிகழ்வு.
திருநாவுக்கரசருக்கு, நின்ற நிலையிலுள்ள சிலையே, அனைத்து கோவில்களிலும் இருக்கும். இங்கு, அமர்ந்த நிலையில் காண்பது விசேஷம்.
இங்குள்ள கன்னி விநாயகர், ஆயுதங்கள் இல்லாமல், பாதிரி மலர் கொத்துடன் இருக்கிறார்.
காதலர்களின் பொதுவான சின்னம், பூ. மலர் கொத்து கொடுத்து, காதலை வெளிப்படுத்துவர், காதலர்கள். தன் தாய்க்கு கிடைத்தது போல, அழகிய காதல் கணவன், பக்தைகளுக்கும் கிடைக்க வேண்டும் என்று, இவர் நினைக்கிறார்.
எனவே, இவரை, கன்னிப்பெண்கள் வணங்கி வரலாம். காதலர்கள், இவரை வணங்கி, பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடக்க வேண்டலாம்.
புதுச்சேரியிலிருந்து, 24 கி.மீ., விழுப்புரத்திலிருந்து, 52 கி.மீ., துாரத்தில், இவ்வூர் உள்ளது.

தி. செல்லப்பா

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
pattikkaattaan - Muscat,ஓமன்
26-ஜூன்-201917:50:11 IST Report Abuse
pattikkaattaan விநாயகர் காதலர்களை சேர்த்துவைக்கலாம் ... ஆனால் அரிவாளுடன் அலையும் ஆணவக்கொலைக்காரர்களை யார் தடுப்பது ?..
Rate this:
Share this comment
கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா
30-ஜூன்-201903:26:22 IST Report Abuse
கதிரழகன், SSLCஅய்யிருங்கள குறை சொல்லு எல்லாம் சரி ஆயிடும். லயோலா காலேஜுல உக்காந்துகிட்டு நம்ம சாமிகளை முழுக்க நம்பி, சாமியே சரணம் நாங்க திருப்பி அடிக்கமாட்டம், எல்லாம் சிவன் செயல் ன்னு இருக்கிற அய்யிருங்க மேல பழி போடுறானுவ மத மாற்ற பாவாடை கும்பல். அவுங்கள அடிச்சு தூரத்து மொதல்ல. நாட்டுல நடக்குற அத்தினி கொடுமையும் அவிங்க தான் நடத்துறாங்க பின்னணியில் இருந்துகிட்டு, தேசவிரோத கும்பல் அது....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X