அந்துமணி பா.கே.ப.,
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஜூன்
2019
00:00


அன்று ஞாயிற்றுக்கிழமை.
வெளியூர் சென்று விட்டார், லென்ஸ் மாமா. மற்ற நண்பர்கள் யாருமில்லை. 'திண்ணை' நாராயணன் சாரிடம் வாங்கி வைத்திருந்த, வானொலி புகழ், தென்கச்சி கோ. சுவாமிநாதன் எழுதிய, 'வானொலி தகவல்கள்' என்ற புத்தகத்துடன், சென்னை, எழும்பூரில் உள்ள மியூசியத்துக்கு சென்றேன். மியூசியத்தின் உள்ளே மரங்கள் அடர்ந்து குளிர்ச்சியாக இருக்கும். ஒரு மரத்தடியில் அமர்ந்து, புத்தகத்தை படிக்க ஆரம்பித்தேன். அதில் ஒரு அத்தியாயத்தில், அவர் எழுதியிருந்ததாவது:

ஒரு கணவன் - மனைவி. அவங்க ரெண்டு பேருக்குமிடையே, எப்ப பார்த்தாலும் சண்டை வந்துகிட்டே இருந்தது. இதுல என்ன ஆச்சரியம்ங்கறீங்களா...
அதுக்காக, சொல்ல வரலே... இது, வேற விஷயம்!
அதாவது, சண்டை போடாம இருக்கறதுக்கு வழி சொல்ற தகவல் இது...
நான் சொன்ன, கணவன் - மனைவி எப்படின்னா, கணவன் ஒரு வார்த்தை சொன்னா, மனைவிகிட்டே இருந்து ரெண்டு வார்த்தை பதிலா வரும். இதுக்கு, கணவன்கிட்டேயிருந்து, நாலு வார்த்தை பதிலா வரும். இப்படி, வார்த்தைகள் பெருகி பெருகி, கடைசியிலே வம்புலே முடியும்.
அந்தம்மா, பொறுத்து பொறுத்து பார்த்தாங்க, அவங்களாலே தாக்குப்பிடிக்க முடியலே. பக்கத்து வீட்டிலேயும், ஒரு கணவன் - மனைவி இருந்தாங்க. அவங்களுக்குள்ள சண்டையே வர்றதில்லே. 'அது எப்படி, அவங்களால மட்டும் சண்டை போடாம இருக்க முடியுது...'ன்னு, இந்த அம்மாவுக்கு ஆச்சரியம்.
ஒருநாள், நேரா பக்கத்து வீட்டு அம்மாகிட்ட போய், 'ஏம்மா... நீங்க, எப்படி சண்டை போட்டுக்காம இருக்கறீங்க... அது எப்படி, உங்களாலே முடியுது...'ன்னு கேட்டாங்க.
'அதுக்குன்னு ஒரு மருந்து இருக்கு... அதை சாப்பிட்டா, சண்டையே வராது...'ன்னாங்க.
'சரிங்க... அந்த மருந்தை, அவரு சாப்பிட மாட்டேன்னு சொல்லிபுட்டா என்ன பண்றது...'ன்னு கேட்டாங்க.
'அந்த மருந்து, அவருக்கு இல்லேம்மா... உனக்கு தான்...'ன்னாங்க.
'அப்படியா... அப்படின்னா, ரொம்ப நல்லதுங்க... அதை, எப்படி சாப்பிடறதுங்கற விபரத்தை சொல்லுங்க... எங்கே கிடைக்கும்ங்கறதையும் சொல்லுங்க...'ன்னு, கேட்டாங்க, இவங்க.
'வேற எங்கேயும் போயி வாங்க வேண்டாம். என்கிட்டயே இருக்கு, அந்த மருந்து. அதுலே கொஞ்சம் தர்றேன் வாங்கி வச்சுக்க... வீட்டுக்காரர், சண்டையை ஆரம்பிக்கிற போதெல்லாம், இந்த மருந்துலே நீ ஒரு அவுன்ஸ் வாயிலே ஊத்திக்கணும்...
'அதை, உடனே குடிச்சுடப்படாது; அஞ்சு நிமிஷமாவது வாயிலேயே இருக்கணும். அதுக்கப்புறம் குடிச்சுடலாம்...'ன்னு சொல்லி, ஒரு பாட்டில் மருந்தை, அந்த அம்மாகிட்ட கொடுத்து அனுப்பினாங்க.
மருந்தை எடுத்துக்கிட்டு, வீட்டுக்கு வந்தாங்க.
வீடு பூட்டியிருந்ததால, வாசல்லேயே காத்துக்கிட்டிருந்தான், கணவன்.
மனைவியை கண்டதும், 'வீட்டை பூட்டிட்டு எங்கே போனே... எவ்வளவு நேரமா ஒரு மனுஷன் வாசல்லயே காத்துக் கிடக்கிறது...'ன்னான்.
அந்த அம்மா, பூட்டை திறந்தாங்க. சமையல் அறைக்கு போய், ஒரு அவுன்ஸ் மருந்தை வாயில் ஊத்திக்கிட்டாங்க.
அன்று முதல் சண்டை வளரவே இல்லை.
மருந்து நன்றாக தான் வேலை செய்கிறது என்று நினைத்துக் கொண்டேன்.
அதுக்கப்புறம் பல சந்தர்ப்பங்களில், சண்டை வரும்போல இருந்தால், இந்த மருந்து அதை நிறுத்தியிருக்கு.
'பிரமாதமான மருந்தா இருக்கே இது. இதை கொஞ்சம் அதிகமாகவே வாங்கி வச்சுக்க வேண்டியது தான்...'ன்னு முடிவு பண்ணி, இந்த அம்மா, மறுபடியும் பக்கத்து வீட்டு அம்மாகிட்ட போனாங்க.
'எவ்வளவு விலையானாலும் சரி... நான் காசு கொடுத்து வாங்கி வச்சுக்கறேன்... எந்த கடையிலே இது இருக்கு சொல்லுங்க...'ன்னு கேட்டாங்க.
'இந்த மருந்துக்கு, விலையே கிடையாது. இலவசமாவே கிடைக்கும்...'ன்னாங்க, அவங்க.
'அது எப்படி, விலையில்லாம இதை விக்க முடியுது...'ன்னு கேட்டாங்க, இவங்க.
'மருந்தா இருந்தாத்தானே விலை வைக்க... அது, வெறும் தண்ணீர் தானே...'ன்னாங்க, அவங்க.
'வெறும் தண்ணியா சண்டையை நிறுத்துச்சு...'ன்னாங்க, இவங்க.
'அது, சண்டையை நிறுத்தலே... உன்னோட, மவுனம் தான் சண்டையை நிறுத்துச்சு... நீ வாயிலே தண்ணீரை வச்சிருக்கறதுனால, எதிர்த்து பேசறதில்லே... எதிர்ப்பு இல்லாததால், உன் கணவர் கோபம், சாந்தமாயிடுது...'ன்னாங்க, அவங்க.
இந்த கதையிலேர்ந்து சண்டையை நிறுத்துற மருந்து எதுன்னு தெரிஞ்சுகிட்டீங்களா... இதை நானும் தெரிஞ்சுகிட்டு, என்கிட்ட வர்றவங்களுக்கு சிபாரிசு பண்ணலாம்ன்னு நினைச்சு உட்கார்ந்திருந்தேன்.
ஒரு அம்மா வந்து, 'எனக்கும், எங்க வீட்டுக்காரருக்கும் அடிக்கடி சண்டை வருது...'ன்னாங்க.
'கவலையே படாதம்மா... நான் ஒரு மருந்து தரேன்...'னு சொல்லி, ஒரு பாட்டிலை எடுத்து குடுத்தேன்.
பாட்டில்லே இருக்கறது என்னங்கறதை சொல்லிபுட்டா அது பேர்லே ஒரு மரியாதை வராது என்பதால், சொல்லல.
அந்த அம்மா வாங்கிட்டு போனாங்க; நான்கு நாட்களுக்கு பிறகு திரும்பி வந்தாங்க.
'என்னம்மா... வீட்டுலே சண்டை நின்னு போச்சா...'ன்னு கேட்டேன்.
'அங்கே நின்னு போச்சு... இப்ப, உங்ககிட்ட ஆரம்பம்...'ன்னாங்க.
'என்னம்மா...'ன்னேன், பயந்து போய்.
'பின்னே என்னங்க... நீங்க என்ன மருந்து குடுத்தீங்க...'ன்னாங்க, கோபமா.
'அது, வெறும் தண்ணீர் தானே...'ன்னேன்.
'தண்ணியா இது... நல்லா பாருங்க...'ன்னு பாட்டிலை நீட்டினாங்க.
வாங்கி பார்த்தேன்.
அப்புறம் தான் விஷயம் புரிஞ்சுது. கைத் தவறுதலா, எங்க வீட்டுல இருந்த மண்ணெண்ணெய் பாட்டிலை எடுத்து அவங்ககிட்ட கொடுத்திருக்கேன்.
படித்து முடித்ததும், சிரிப்பை அடக்க வெகு நேரமாயிற்று!
நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தார், டாக்டர். முதல் முறை, 100 ரூபாயும், அடுத்த முறை வந்தால், 30 ரூபாய் வீதம் பணம் பெறுவது என்று, நடைமுறை வைத்திருந்தார்.
முதல் முறையாக அந்த டாக்டரை பார்க்க சென்ற ஒரு நோயாளிக்கு, 100 ரூபாய் கொடுக்க பணம் இல்லை. அதற்காக, இரண்டாவது முறையாக வருகிறவர் போல் ஏமாற்ற விரும்பி, 'என்ன டாக்டர்... சென்ற வாரம் எழுதி கொடுத்திருந்த மருந்தில் குணத்தை காணோமே...' என்றார்.
இவர் சூழ்ச்சியை அறிந்த டாக்டர், 'இன்னும் ஒரு வாரம் அதையே தொடர்ந்து சாப்பிடுங்கள்; குணம் தெரியும்...' என்று கூறி, 30 ரூபாயை வாங்கிக் கொண்டார்.
எங்கோ, எதிலோ, எப்போதோ படித்தது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X