அந்துமணி பதில்கள் | வாரமலர் | Varamalar | tamil weekly supplements
அந்துமணி பதில்கள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

23 ஜூன்
2019
00:00

ஆர். பிரகாஷ், பொன்மலை, திருச்சி: கடன் வாங்கும் விஷயத்தில் நீங்கள் எப்படி?
வாங்கும் சம்பளத்தில், மாத செலவை நிர்ணயித்துக் கொள்வேன்; மீதமாகும் பணத்தை, என் வீட்டில் உள்ள உண்டியலில் போட்டு விடுவேன். இதனால், கடன் வாங்கும் நிகழ்வே ஏற்பட்டதில்லை!

ப. காளிதாசன், வேட்டனுார், புதுக்கோட்டை: இப்போதும் வானொலி கேட்கிறீர்களா?
இல்லை! இப்போதெல்லாம், அரசு மற்றும் தனியார் வானொலி நிலையங்களில், 'ரேடியோ ஜாக்கி'களை வைத்து, நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. சிலவற்றை கேட்க முடிகிறது; சில, முடியவில்லை. எனவே, இப்போதெல்லாம், 5,000 பாடல்கள் தொகுப்பாக உள்ள, 'கார்வான்' பெட்டி தான், எனக்குத் துணை!

* கி. வாசுதேவன், வந்தவாசி: தோல்வியே தன்னை தொடர்ந்து கொண்டிருப்பதாக, என் நண்பன் கூறி வருத்தம் அடைகிறானே...
வருத்தமடைய வேண்டாம் என, அறிவுரை கூறுங்கள்... தொடர்ந்து முயற்சி செய்யச் சொல்லுங்கள்!
ஒரே ஒரு உதாரணம் சொல்கிறேன்...
அமெரிக்க அதிபராக இருந்தாரே, ஆப்ரகாம் லிங்கன், அவர், ஏழு முறை - அதாவது, 28 ஆண்டுகள் போட்டியிட்டு, தோல்வியையே தழுவினார். ஆனால், 29வது ஆண்டு அதிபராகி விட்டாரே! ஒரு நொடியும், உங்கள் நண்பரை, தளர வேண்டாம் என, இந்த சம்பவத்தைக் கூறி, உற்சாகப்படுத்துங்கள்!

* சா. சொக்கலிங்கம், ரோஸ்மியாபுரம், நெல்லை: இனி, ஈ.வெ.ரா., போல் வாழப் போகிறாராமே, வைகோ...
தமிழக மக்கள் மிகவும் சந்தோஷப்படுவர்! ஆனால், அவரது சொத்தை பாதுகாத்து கொள்ளட்டும்... நிறைய, வீரமணிகள் சுற்றி உள்ளனர் என்பதை, அவர் உணர வேண்டும்!

எல். சுரேஷ், மதுரை: வெளிநாட்டு நான்கு சக்கர வாகனங்களின் விலை, இன்று, நம் நாட்டில் எப்படி உள்ளது?
தலை சுற்றும் அளவில்! மிகப்பெரிய கார்களின் ஆரம்ப விலை, 1.5 கோடி! அதைவிட பெரியது, 5 கோடி. எனக்கு, 'அட்லஸ்' மிதி வண்டி போதுமே!

* ஜி. கண்ணாத்தாள், திருச்சுழி, விருதுநகர்: கூட்டுக் குடும்பம், தனிக் குடும்பம்... இதில் எது சிறந்தது?
சொந்தங்களை தெரிந்து கொள்ள, அவர்களின், அன்பையும், ஆதரவையும் குழந்தைகள் பெற்று, நல்ல குடிமகன், மகளாக வளர, நீங்கள் கேட்ட, முதல் குடும்பம் தான் சிறந்தது!

ஏ. ஹரிகரன், கோவை: உங்களுடன், பள்ளி, கல்லுாரிகளில், உடன் படித்தவர்களுடன் இன்றும் தொடர்பில் இருக்கின்றீர்களா?
ஏன் இல்லாமல்... இரண்டு முதல் நாலாம் வகுப்பு வரை உடன் படித்த ராஜா, ஐந்து, ஆறாம் வகுப்பு, அலாவுதீன் ஆகியோரிடமும் தொடர்பில் தானே இருக்கிறேன்... அலாவுதீன் தான், கோழி கழுத்தறுப்பை, தங்கள் மத குருக்கள் எப்படி செய்வர் என, ஐந்தாம் வகுப்பு படிக்கும்போதே, காட்டிக் கொடுத்தவர். !

Advertisement

 



We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X