இதப்படிங்க முதல்ல... | வாரமலர் | Varamalar | tamil weekly supplements
இதப்படிங்க முதல்ல...
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

23 ஜூன்
2019
00:00

ஐந்தாம் வகுப்பு பாடப் புத்தகத்தில், ரஜினி!
நடப்பு, 2019ம் ஆண்டின், ஐந்தாம் வகுப்பு பாடப் புத்தகத்தில், நடிகர் ரஜினி பற்றிய தகவல் இடம் பெற்றுள்ளது. அதாவது, ஏழையாக பிறந்து, கடின உழைப்பு, முயற்சியால் உலகமே வியக்கும் வகையில் முன்னேறிய பிரபலங்களின் தகவல்களில், அவர் இடம்பெற்றுள்ளார். இந்த பட்டியலில், ரஜினி, சார்லி சாப்ளின், ஸ்டீவ் ஜாப் உள்ளிட்ட, உலக அளவிலான, சில பிரபலங்களின் தகவல்களும் இடம்பெற்றுள்ளன.

- சினிமா பொன்னையா

வெறியுடன் தாக்கும், வரலட்சுமி!
சில படங்களில் அதிரடி வில்லியாக மிரட்டிய, வரலட்சுமி, தற்போது, ஒரு படத்தில், கதையின் நாயகியாகி இருக்கிறார். அதோடு, சண்டை காட்சிகளில், தன்னுடன் மோதும் நபர்களை, அலாக்காக துாக்கி, சுழற்றியடித்து பந்தாடுகிறார். அவரது, 'வீடியோ'க்கள், இணையத்தில் வெளியானதை அடுத்து, வரலட்சுமியின், வெறிகொண்ட தாக்குதலைப் பார்த்து, கோலிவுட்டின் சில இளவட்ட நடிகர்கள், மிரண்டு போய் உள்ளனர். அந்த, 'வீடியோ'வை பார்த்த, வரலட்சுமியின் தந்தையும், நடிகருமான, சரத்குமார், பாராட்டியதோடு, 'இன்னும், உன்னிடம் நிறைய எதிர்பார்க்கிறேன்...' என்றும் கூறி உள்ளார். கோபுரம் தாண்டுகிற குரங்குக்கு, குட்டி சுவர் என்ன பிரமாதம்!
- எலீசா

டாப்சியின் உருக்கம்!
ஆடுகளம் படம் மூலம் தமிழுக்கு வந்தவர், டாப்சி. சமீபகாலமாக, தமிழில் பெரிய அளவிலான படங்கள் இல்லை. அதனால், பாலிவுட் படங்களில் நடித்து வரும் அவர், அடிக்கடி கோலிவுட்டுக்கு வந்து, சில மெகா, 'ஹீரோ' மற்றும் இயக்குனர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து, படவேட்டை நடத்துகிறார். அதோடு, 'எந்த மொழி படங்களில் நடித்தாலும், தமிழ் மொழி படங்களில் நடித்தது போன்ற மனநிறைவு எனக்கு கிடைக்கவில்லை. ரசிகர்களின் நெஞ்சை உருக வைக்கும் வகையிலான கதைகளில் என்னை நடிக்க வையுங்கள்...' என்று, கேட்டு வருகிறார். அடுத்தடுத்து சொன்னாலும் ஆகும் காலம்தான் ஆகும்!
எலீசா

ஜாக்கிசானாக மாறும், சந்தானம்!
கதாநாயகனான பின், நடனத்தில் அதிக கவனம் செலுத்திய, சந்தானம், இப்போது, 'ஆக் ஷ'னிலும் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார். அதிலும், 'ஜாக்கிசான் பாணியில், சண்டை காட்சிகளில் நடித்து, ஒரு தனித்துவத்தை ஏற்படுத்துவேன்...' என்கிறார். இதற்காக, சந்தானம் நடிக்கும், டகால்டி படத்தில், ஜாக்கிசான் நடித்த, 'ஆக் ஷன்' படங்களில் இடம்பெற்ற சண்டை காட்சிகள் பாணியில், அவருக்கு காட்சிகள் அமைக்கப்பட உள்ளன.
- சினிமா பொன்னையா

கறுப்புப்பூனை!
* மெரினா நடிகர், கடைசியாக நடித்த படம், தோல்வி அடைந்து விட்டதால், மனதளவில் சோர்ந்து காணப்படுகிறார். அதேசமயம், தன், 'கெத்'தை, 'மெயின்டெய்ன்' செய்ய, எந்த படவிழாக்களுக்கு சென்றாலும், அங்கு, தன் ரசிகர் படையை வரவழைத்து, தான் பேசும் ஒவ்வொரு பேச்சுக்கும், பலத்த கைதட்டல் கொடுக்க சொல்கிறார். நடிகர், இப்படி வெட்டி பந்தா செய்து திரிவதை, அவரது முதுகுக்குப் பின் நின்று, நண்பர்களே கிண்டல் செய்கின்றனர்.
டீக்கடையில் நண்பர்கள் குழு:
'டேய் மச்சி... தல நடிகர் ஒரு படத்துல, பைக் ரேஸ் வீரராக நடிக்கப் போறாராம்டா...'
இதைக் கேட்ட நண்பர் ஒருவர், பலமாக கைத்தட்ட...
'இப்ப என்ன பெரிசா தகவல் சொல்லிட்டான்னு கைத் தட்டுற... நீ என்ன சிவகார்த்திகேயன் ஆளா... போங்கடா போய் வேலைய பாருங்க...' என்றார், டீக்கடை பெரிசு ஒருவர்.

சினி துளிகள்!
* 'திருமணம் செய்து கொண்ட போதும், நான் இன்னும் அம்மாவாகவில்லை. இருப்பினும், அம்மா வேடங்களில் நடித்து, அதன் மகத்துவத்தை உணர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்...' என்று கூறி வருகிறார், ஸ்ரேயா.
* தன் காதலர் விக்னேஷ் சிவனுடன், தேனிலவு நகரம் என்று அழைக்கப்படும், கிரேக்க நாட்டிலுள்ள, சாண் டேரிப் நகருக்கு சுற்றுலா சென்றுள்ளார், நயன்தாரா.
* மிஸ்டர் லோக்கல் படம் தோல்வியடைந்ததை அடுத்து, தான் நடித்து வரும் படங்களின் கதைகளில் சில திருத்தங்களை செய்ய சொல்லியிருக்கிறார், சிவகார்த்திகேயன்.
* விநாயகர் சிலை முன், கவர்ச்சிகரமாக, 'போஸ்' கொடுத்த, யாஷிகா ஆனந்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

அவ்ளோதான்!

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X