கை கொடுக்கும் தெய்வ நம்பிக்கை!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஜூன்
2019
00:00

மழை பெய்ய வேண்டிய காலத்தில் மழை; வெயில் அடிக்க வேண்டிய காலத்தில் வெயில்; அதுபோல, அருள்புரிய வேண்டிய காலத்தில், தெய்வமும் அருள்புரியும்.
சமஸ்தானம் ஒன்றில், அரசு வைத்தியராக இருந்தார், அடியார் ஒருவர்; தினமும் அதிகாலை எழுந்து நீராடி, வழிபாட்டை முடித்து, தன் கஷ்டத்தை பொருட்படுத்தாமல், ஏழை எளியோருக்கு வைத்தியம் பார்ப்பதில் தலை சிறந்தவர்; அவர் பெயர், ஜண்டு பட்டர்.
ஒருநாள், இஸ்லாமியப் பெண்மணி ஒருவர், 10 வயது பையனுடன் வந்தார்.
'ஐயா... கணவரை இழந்தவள் நான். இவன், என் பிள்ளை, பெயர் அப்துல்கனி. இவனுக்கு மூலநோய் வந்திருக்கிறது. என்ன வைத்தியம் பார்த்தும் சரியாகவில்லை. நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும்...' என, வேண்டினார்.
'அம்மா... கவலைப்படாதே... பையனை இங்கேயே விட்டுப் போ, என் மகன் போல பார்த்துக் கொள்கிறேன். தெய்வ அருளால், இவன் நோய் குணமாகும். நீ காலணா கூட தர வேண்டாம்...' என்று ஆறுதல் சொன்னார், வைத்தியர்.
மகனை அங்கேயே விட்டு, வீடு திரும்பினார், தாயார்.
சிறுவன் அப்துல்கனியும், அடியாரின் வீட்டிலேயே தங்கி, சிகிச்சை பெற்றான். மூன்று மாதங்களுக்கு பின், நோய் முழுவதும் நீங்கி, ஆரோக்கியத்துடன் வீடு திரும்பினான்.
முப்பது ஆண்டுகள் கடந்தன. சமஸ்தான மன்னர், இறந்து விட்டார். சமஸ்தானத்தின் ஆட்சி, ஆங்கிலேயர்களின் கைக்குப் போனது. ஆட்சிப் பொறுப்பை ஏற்றதும், ஆங்கிலேய அதிகாரி, மறைந்த, மன்னருக்கு, ஒரு நினைவுச் சின்னம் எழுப்ப விரும்பினார்.
அதற்காக, ஊரில் உள்ள முக்கியஸ்தர்களை எல்லாம் வரவழைத்து, 'மறைந்த மன்னருக்காக நினைவுச் சின்னம் எழுப்ப விரும்புகிறேன். உங்களால் இயன்றதை தந்து உதவுங்கள்...' என்றார், அதிகாரி.
அந்தக் கூட்டத்தில் பங்கேற்ற வைத்தியர், ஒரு லட்சம் ரூபாய் தருவதாக வாக்களித்தார். விபரமறிந்த ஊர் மக்கள், 'இந்த வைத்தியரால் எப்படி, லட்ச ரூபாய் கொடுக்க முடியும்?' என்று பேசிக் கொண்டனர்.
அந்த ஊருக்கு செல்வந்தராக திரும்பி வந்திருந்தார், அப்துல்கனி. அவர்களின் பேச்சு, அவர் காதில் விழுந்தது. உடனே, தன் காரியதரிசியை அழைத்து, 'அந்த வைத்தியர், மூன்று மாதம் என்னை, தன் வீட்டிலேயே தங்க வைத்து, மருத்துவம் பார்த்தார். அவரால் தான் நோய் நீங்கி, நலமாக இருக்கிறேன்.
'அப்படிப்பட்டவருக்கு, இந்த நேரத்தில், நாம் உதவ வேண்டும். ஒரு லட்ச ரூபாயை, பையில் கட்டி வையுங்கள். இதோ வருகிறேன்...' என்று கூறி, வைத்தியரின் வீட்டிற்குச் சென்றார்.
வைத்தியரின் கணக்குப்பிள்ளையான, சங்கரிடம், 'மன்னரின் நினைவுச் சின்னத்திற்காக, லட்ச ரூபாய் தருவதாக, வைத்தியர் வாக்களித்தாராமே... அவரால் எப்படி முடியும்?' எனக் கேட்டார், செல்வந்தர்.
'அவர், கடவுள் நம்பிக்கை உள்ளவர். தெய்வம் எப்படியாவது உதவும் என்ற நம்பிக்கை, அவருக்கு அதிகமாகவே உண்டு...' என்றார், கணக்குப்பிள்ளை.
'அவருடைய தெய்வ நம்பிக்கை வீணாகவில்லை. சிறு வயதில், என் உயிரைக் காப்பாற்றியவர். என்னுடன் வாருங்கள்... அவர் கொடுக்க வேண்டிய லட்ச ரூபாயை நான் தருகிறேன்...' என்று, தன் வீட்டிற்கு, கணக்குப்பிள்ளையை அழைத்துச் சென்றார், செல்வந்தர். லட்ச ரூபாய் அடங்கிய பையை, அவரிடம் கொடுத்தார்.
விபரமறிந்த வைத்தியரான அடியாரோ, 'நன்மை செய்தால், நன்மை தான் விளையும் என்பதற்கு, இதை விடவா உதாரணம் வேண்டும்?' என்றார்.
நல்லதைச் செய்வோம்; தேடி வந்து அருள்புரியும், தெய்வம்!

பி. என். பரசுராமன்

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X