திண்ணை!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஜூன்
2019
00:00

எழுத்தாளர், விக்கிரமன் எழுதிய, 'இதழாசிரியர்கள் மூவர்' நுாலிலிருந்து: 'ஆனந்த விகடன்' இதழில், கல்கி பணியாற்றியபோது, கல்கி என்ற பெயரில், எட்டு பக்கம் கதை; இயற்பெயர், ரா.கிருஷ்ணமூர்த்தி என்ற பெயரில், ஆறு பக்கம் கட்டுரை; கர்நாடகம் என்ற புனை பெயரில், நாலைந்து பக்கம் ஆடல், பாடல், விமர்சனம்; பெயர் குறிப்பிடாமல், நான்கு முதல் எட்டு பக்கம் மற்றும் தலையங்கம் என, எழுதி குவித்தார்.
விகடனில், ஆசிரியராக இருந்தபோதே, விடுதலை போராட்டங்களில் பங்கேற்று, இரண்டு முறை சிறை சென்றவர், கல்கி. இச்சூழலில், போராட்டத்தில் பங்கு கொள்ள, மூன்றாவதாக வாய்ப்பு வந்தபோது, யாருடனும் ஆலோசிக்காமல், தன்னை போராட்டத்தில் அனுமதிக்க வேண்டி, காந்திஜிக்கு விண்ணப்பம் அனுப்பினார்.

யாருடனும் ஆலோசிக்காமல் என, கூறியதற்கு காரணம் உண்டு.
ஒன்று: அவருக்கு, கடுமையான ஆஸ்துமா இருந்தது. டாக்டரிடம் ஆலோசனை கேட்டிருந்தால், சம்மதித்திருக்க மாட்டார்.
இரண்டாவது: ராஜாஜி. அவரும், கல்கியின் உடல்நலன் கருதி அனுமதித்திருக்க மாட்டார். ஆனால், அனுமதி வழங்கி, கடிதம் எழுதினார், காந்திஜி.
மனைவியிடம் சொல்லி, நேராக, 'ஆனந்த விகடன்' நிறுவனர், வாசன் அறைக்குள் நுழைந்தார், கல்கி. அங்கு, ஏற்கனவே, எழுத்தாளர், துமிலன் இருந்தார்.
போராட்டத்தில் பங்குகொள்ள, காந்திஜி அனுமதித்துள்ளதை, வாசனிடம் தெரிவித்தார், கல்கி.
அதைக் கேட்டு ஆச்சரியப்பட்டார், வாசன்.
'உங்கள் பெயரை கொடுத்திருப்பதை பற்றி, என்னிடம், முன்கூட்டியே ஒரு வார்த்தை சொல்லவில்லையே...' என்றார்.
'நான் தான், ஒவ்வொரு போராட்டத்திலும் கலந்து கொள்கிறவனாச்சே... அது, உங்களுக்கு தெரியுமே...' என்றார், கல்கி.
'இருந்தாலும், நீங்கள், என்னிடம், முதலிலேயே சொல்லியிருக்க வேண்டாமோ! போராட்டத்தில் கலந்து கொள்ள போய் விட்டால், பத்திரிகை வேலையை யார் பார்ப்பதாம்?' என்றார், வாசன்.
'துமிலன் பார்த்துக் கொள்கிறார்...' என்றார், கல்கி.
'அது, எனக்கு தெரியும். நீங்கள், போராட்டத்தில் ஈடுபடுவது, பத்திரிகையை பாதிக்கும். ஏற்கனவே ஒருமுறை, அச்சாபீசுக்கு ஜாமின் கட்ட நேர்ந்தது, உங்களுக்கு தெரியாதா?'
'பத்திரிகை ஆசிரியராக, என் பெயர் போடப்படவில்லையே...' என்றார், கல்கி.
'இருந்தாலும், உங்கள் தொடர்பு இருக்கிறதென்று, அரசுக்கு தெரியாதா?'
'என்னை என்ன பண்ணச் சொல்கிறீர்கள்...' என்று, நேரடியாகவே கேட்டார், கல்கி.
'நீங்கள், போராட்டத்தில் சேர போவதில்லை என்று, காந்திஜிக்கு கடிதம் எழுதி விடுங்கள்...' என்றார், வாசன்.
'அது, நடக்காத காரியம்...'
'அப்படியானால், பத்திரிகையுடன், தற்காலிகமாக, உங்கள் தொடர்பு இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்...' என்றார்.
'ராஜினாமா செய்யச் சொல்கிறீர்களா?' என்றார், கல்கி.
'ஆம்...' என்றார், வாசன்.
'சரி... சிறை சென்று வந்த பின், பதவியை ஒப்புக்கொள்கிறேன்...' என்றார், கல்கி.
'அதைப் பற்றி அப்போது பார்த்துக் கொள்ளலாம்...' என்றார், வாசன்.
ஐந்தே ஐந்து நிமிடங்களில், தான் உழைத்து உயர்த்திய, 'ஆனந்த விகடன்' இதழின், முன்னாள் ஆசிரியராகி விட்டார், கல்கி.
திறமைக்கு மதிப்பு இல்லாமல் இருக்குமா? இவர் சாய்ந்ததை, டி.சதாசிவம் முட்டுக்கொடுத்து, தாங்கி, 'கல்கி' பத்திரிகையை துவக்க உதவியது, தனிக் கதை!

நடுத்தெரு நாராயணன்

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா
30-ஜூன்-201902:16:13 IST Report Abuse
கதிரழகன், SSLC கல்கி ரொம்ப சீரழிஞ்சு போச்சு, திமுக சப்போர்ட்டா ஆயிடுச்சு
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
23-ஜூன்-201910:49:56 IST Report Abuse
Girija இந்த உண்மை அப்போதே எல்லோருக்கும் தெரிந்திருந்தால் கல்கி பத்திரிகை அபார வளர்ச்சி அடைந்திருக்கும்.
Rate this:
Cancel
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
23-ஜூன்-201905:02:22 IST Report Abuse
 nicolethomson கல்கிக்கு பின்னால் இவ்ளோ இருக்கா ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X