நாசா வியந்த, மீனாட்சி அம்மன் கோவில்! | வாரமலர் | Varamalar | tamil weekly supplements
நாசா வியந்த, மீனாட்சி அம்மன் கோவில்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

23 ஜூன்
2019
00:00

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை, செயற்கைகோள் மூலம் கண்காணித்த போது, பல அறிவியல் அற்புதங்கள் அங்கு மறைந்திருந்ததை, கண்டறிந்தனர், 'நாசா' விஞ்ஞானிகள்.
வாழ்க்கை ஒரு வட்டம், உலகமும் உருண்டை, கோள்கள் சுற்றுவதும் நீள்வட்டம், இப்படி பிரபஞ்சமே வட்டத்தில் இயங்கும் போது, மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஒன்று மட்டும் தான், சதுர வடிவில் அமைந்துள்ளதை கண்டறிந்தனர்.
கோவில் மட்டுமின்றி, அதை சுற்றியுள்ள தெருக்களும், சதுர வடிவமாக அமைந்துள்ளது, மற்றொரு சிறப்பு. எல்லா பக்கமும் சம அளவு என்பதே சதுரம். அது போல, 'சமூகத்தில் எல்லாரும் சமமே...' என, உணர்த்தும் வண்ணம், உலகிற்கே, இக்கோவில் சான்றாய் விளங்குகிறது.
நீள் வட்டப் பாதையில் சுற்றுகிற, எந்த ஒரு செயற்கைகோளும், சதுர வடிவில் அமைந்திருக்கும் மீனாட்சி அம்மன் கோவிலை முழுவதுமாக படம் பிடிக்க இயலாது. ஏதாவது இரண்டு பக்கமே படம் தெரியும்.
கடந்த, 1984ல், ஜெர்மனியைச் சேர்ந்த, மைக்கேல் கெப்ளர் என்ற விஞ்ஞானி, இதற்காக, சதுர வடிவில் ஒரு சிறிய செயற்கைகோள் செய்து, விண்வெளிக்கு அனுப்பினார்.
அது எடுத்த படத்தில், மீனாட்சி அம்மன் கோவில், வட்ட வடிவில் இருந்தது. உடனடியாக, மதுரைக்கே வந்தார், கெப்ளர். மீனாட்சி அம்மன் கோவிலை, 68 நாட்கள் ஆராய்ச்சி செய்தார். அப்போது தான், விஞ்ஞானத்தின் பல முடிச்சுகள் அவிழ்ந்தன.
சதுரமான கோவில், வட்ட வடிவமாக தெரிய, கோவிலின் மொட்டை கோபுரம் தான் காரணம் என்பதை கண்டறிந்தார். அதாவது, செயற்கைகோள், 'சிக்னல்'களை கிரகிக்கும் மற்ற கோபுரங்கள், அதை மொட்டை கோபுரத்திற்கு அனுப்பும். அந்த மொட்டை கோபுரம், 'சிக்னல்'களை கிரகித்து, குழப்பி அடித்து, புது, 'சிக்னலை' செயற்கைகோளுக்கு அனுப்புகிறது.
பாண்டிய மன்னர்களின், அறிவியல்பூர்வமான கட்டுமானத்தை அறிந்து, வியந்தார், கெப்ளர். அதே போல, மொட்டை கோபுரத்தின் மீது, எந்த, 'ரேடாரும்' வேலை செய்யாததையும் கண்டறிந்தார்.
ஆயிரங்கால் மண்டபம், உண்மையில், 965 கால்கள் உடையது என்பதை அறிந்து, வியப்பின் உச்சிக்கே போனார். காரணம், 965 என்பது, விண்வெளியில் தவிர்க்க இயலாத எண். விண்வெளி மையங்களை நிலை நிறுத்தும் உயரத்தை, '965 ஸ்டாண்ட்' என, குறிப்பிடுவர். வான அறிவியல் வளர்ச்சி பெற்றிருக்கும் இக்காலத்து விஞ்ஞானம் எல்லாம், அன்றே இருந்ததை அறிந்தார்.
அதே போல, மீனாட்சி அம்மன் கோவிலில், பைரவர் சன்னிதியில் இருந்து, வாணியன் கிணற்று சந்துக்கு செல்லும் கிணற்று சுரங்கத்தில் இருந்த கல்லை, புகைப்படம் எடுத்து, பெரிதுபடுத்தி பார்த்த போது, அலறியே விட்டார். அப்பாறையில் இருந்த வரி வடிவங்கள், அச்சு அசலாக, ராக்கெட்டுகளின், 'சர்க்யூட் பேனல்'களின் வடிவத்தில் இருந்தன.
மேலும், பொற்றாமரைக் குளத்தருகே, இரவில், அமாவாசை - பவுர்ணமி இரண்டு நாட்களிலும், ஒரே அளவுள்ள வெளிச்சம் இருப்பதை பார்த்து அதிசயித்தார். அது எப்படி என்று, இன்று வரை, அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை.
மீனாட்சி அம்மன் கோவிலை சுற்ற சுற்ற, அவருக்கு, பல ஆச்சரியங்கள் காத்திருந்தன. சித்தர், தட்சிணாமூர்த்தி மற்றும் முக்குறுணி விநாயகர் சன்னிதிகள் எல்லாம், விண்வெளி வீரர்கள் அமரும், 'சேம்பர்'கள் வடிவில் கட்டப்பட்டிருந்தன. நாயன்மார்கள் மற்றும் 108 லிங்கங்களின் பிரகாரங்கள், விண்கலத்தின் வடிவில் கட்டப்பட்டிருந்ததை கண்டார்.
இறுதியில், தன் ஆராய்ச்சி குறிப்பில், 'உலகின் முதல், 'நாசா' மீனாட்சி அம்மன் கோவிலே... அனேகமாக, பாண்டியர்கள் காலத்தில், சூரியனுக்கே ராக்கெட் விட்டிருக்கலாம்... அது, இன்னும் பயணித்துக் கொண்டிருக்கலாம்... உலகின் மெய்ஞானம் மட்டுமல்ல, விஞ்ஞானத்திற்கும் அடையாளம் இக்கோவில்...' என, எழுதி வைத்தார்.
இவ்வளவு பெருமை வாய்ந்த, நம் நாட்டு பொக்கிஷங்களின் பெருமையை நாமும் உணர்ந்து, சீரழிக்காமல் இருக்கலாமே!
- புஷ்பலதா

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X