நாகேஸ்வரன் என்ற நாகேஷ்! (4)
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஜூன்
2019
00:00

உள்ளூர், தாசில்தார் அலுவலகத்தில், வேலைத் தேட போய், அங்கு ஏற்பட்ட அனுபவத்தால், இல்லாத வேலைக்கு, ராஜினாமா கடிதம் கொடுத்து வெளியேறினேன்.
ஐதராபாத்தில், அக்கா கணவரின் சகோதரர், நல்ல செல்வாக்குடன் இருந்தார். என் மீது பரிதாபப்பட்டு, 'எப்படியும் ஒரு வேலைக்கு ஏற்பாடு செய்கிறேன்...' என்றார்.
உடனே, ஐதராபாத்துக்கு சென்றேன். யாரிடமோ சொல்லி, ரேடியோ விற்பனை செய்கிற கடையில் வேலை வாங்கிக் கொடுத்தார். கொஞ்ச நாளில், ரேடியோ வியாபாரமும் போரடித்தது; அந்த வேலையையும் விட்டேன்.

ஐதராபாத்தில் வேலையும் வாங்கிக் கொடுத்து, வீட்டிலேயே தங்கவும் அனுமதித்தார், உறவுக்காரர். ரேடியோ கடை வேலையை விட்டு விட்டதாக சொன்னதையடுத்து, ஊறுகாய் கம்பெனியில், வேலை வாங்கிக் கொடுத்தார். சிறிது நாளில் அதுவும் சலித்தது.
சாப்பாட்டு தட்டின் முன் உட்காரும்போது, 'உனக்கு, இந்த சாப்பாட்டை சாப்பிடுவதற்கு தகுதி இருக்கிறதா... இந்த சாப்பாட்டை சன்மானமாக பெறும் அளவுக்கு, உருப்படியாக ஏதாவது இன்று நீ செய்திருக்கிறாயா?' என, கேட்பது போல் தோன்றும்.
அந்த நாட்களில், ஐதராபாத் நகரத்தின் உசைன் சாகர் ஏரியை சுற்றி வந்தபோது, ஒரு முதியவரை சந்தித்தேன். அவரிடம், 'நீங்க எங்கேயாவது வேலை பார்க்கறீங்களா?' என்றேன்.
'ஆமாம்... இங்க ஒரு மில் இருக்குதில்ல... அதுல தான்!'
அவர் வழி காட்ட, மில் முதலாளியை சந்தித்தேன்.
ஐதராபாத்தில் தொழில் நடத்தும் தமிழர் என்பதால், எனக்கு உதவி செய்ய விரும்பினார். 'ஆபீசில் வேலை ஏதும் காலியில்லை. தொழிற்சாலையில், 300 தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். விரும்பினால், நீயும் அவர்களில் ஒருவராக வேலை பார்...' என்றார்.
அந்த தொழிற்சாலையில் விதவிதமான பருமன்களில், பல நுாறு மீட்டர் நீளத்துக்கு கேபிள்கள் இருந்தன. தொழிற்சாலை வளாகத்துக்கு உள்ளேயே, ஓர் இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு கேபிள்களை இழுத்துச் செல்ல வேண்டும்.
கேபிள்களின் முனைகளை சீவி, அதன் மீது காய்ச்சிய ஈயத்தை ஊற்ற வேண்டும். சிறு பல்பு போன்ற உருவில் அது இறுகிய பின், சிறு பெட்டியை பொருத்தி, அதற்குள் வேறு உலோகத்தை காய்ச்சி ஊற்ற வேண்டும்; ரொம்ப கஷ்டமான வேலை தான்.
வேலை களைப்பு தெரியாமல் இருக்க, தொழிலாளர்கள் சேர்ந்து, 'லஷ்கர் லச்சி ஜவானு புட்டே. ஐ சா மாரே லகாரே லச்சி...' என, 'கோரஸ்' பாடியபடி வேலை செய்வோம். பின்னாளில், சினிமாவில் பிரபலமான போதும், அப்பாடலை மறக்காமல் அவ்வப்போது பாடிக்கொண்டே இருப்பேன்.
ரொம்ப ஆபத்தான அந்த வேலையில், காய்ச்சிய ஈயத்தை ஊற்றும்போது, கவனப் பிசகால் உடம்பில் பட்டு விட்டால், தீப்புண் ஏற்பட்டு விடும்.
ஒருநாள், 16 அடி உயரமுள்ள ஏணி மீது ஏறி, ஒரு குழாயில் ஈயக் கலவையை ஊற்ற வேண்டியிருந்தது. ஒரு கையில், கலவை நிரம்பிய பக்கெட், இன்னொரு கையில், ஸ்குரூ டிரைவர் போன்ற உபகரணங்களுடன் மேலே ஏறினேன்.
காய்ச்சிய ஈயத்தை ஊற்ற வேண்டிய குழாயின் அடிப்பகுதியில், பெரிய நட்டுகளை திருகி மூடியிருக்க வேண்டும். அப்படி செய்ய மறந்து விட்டேன். விளைவு, சரசரவென்று காய்ச்சிய ஈயம் வழிந்து, என் காலில் பட்டு விட்டது. எரிச்சல் தாங்க முடியாமல், அலறியபடி காலை உதற, ஏணி ஆட்டம் கண்டு சாய்ந்தது.
நான் துாக்கியெறியப்பட்டு, போய் விழுந்த இடம்... வேகமாய் ஓடிக்கொண்டிருந்த ஓர் இயந்திரத்துக்கு, அரை அடி அப்பால். கொஞ்சம் தள்ளி, இயந்திரத்தின் மீது விழுந்திருந்தால், நாகேஷ் என்ற நடிகன், உருவாகி இருக்கவே மாட்டான்.
அடிபட்டு விழுந்த என்னை துாக்கி போய், மருத்துவமனையில் சேர்த்தனர். 16 நாட்கள் சிகிச்சை தரப்பட்டது. தொழிற்சாலையில் வேலை பார்க்க கூலியாக கொடுத்த தொகையை விட, சிகிச்சைக்காக செலவழித்தது அதிகம். மருத்துவமனையிலிருந்து, 'டிஸ்சார்ஜ்' செய்த பின், முதலாளி என்னை கூப்பிட்டு அனுப்பினார்.
'நாகேஸ்வரன்... நீங்க படிச்சிருக்கீங்க... உங்களுக்கு ஏன் இந்த தினக்கூலி வேலை... வேறு நல்ல வேலை நிச்சயமாக கிடைக்கும். வாழ்த்துக்கள்!' என்று, அழகாக பேசி, என் சீட்டை கிழித்தார்.
மறுபடியும் வேலை தேடும் படலம். ஒரே ஆறுதல், கையில் கொஞ்சம் பணம் இருந்தது. வாழ்க்கையில், சின்ன வயசிலேயே இத்தனை கஷ்டங்களை அனுபவித்ததை பார்த்து, ஆண்டவனுக்கே என் மீது கொஞ்சம் இரக்கம் வந்து விட்டது போலும். ஆம்... அந்த சமயம் பார்த்து, ரயில்வே சர்வீஸ் கமிஷன் தேர்வுக்கான அறிவிப்பு வெளியானது; விண்ணப்பித்தேன்.
ரயில்வே சர்வீஸ் கமிஷன் தேர்வு எழுத அழைப்பு வந்தது. ரயிலில், திருவனந்தபுரம் போய் தேர்வு எழுதி, மறுபடி ஐதராபாத் திரும்பினேன்.
தேர்வில் நிறைய கேள்விகள் இருந்தாலும், ஒரு குறிப்பிட்ட கேள்வியை பற்றி சொல்லியே ஆக வேண்டும். ஒரு விரிவான கட்டுரை எழுதச் சொல்லி கேட்டிருந்தனர். 'ரயில்வேயில் பணிபுரிய வாய்ப்பு கிடைக்குமானால்...' இது தான் கட்டுரைக்கான தலைப்பு.
ஸ்டேஷன் மாஸ்டர் மகனாயிற்றே. சொல்ல வேண்டுமா? 40 பக்கத்திற்கு கிடுகிடுவென்று விரிவான ஒரு கட்டுரையை எழுதினேன்.
தேர்வு எழுதி, சில வாரங்கள் தான் இருக்கும். ரயில்வே வேலைக்கு நான் நியமிக்கப்பட்டதாக கடிதம் வந்தது. ஐதராபாத்துக்கு ஒரு சலாம் அடித்து, விடைபெற்று, சென்னைக்கு ரயில் ஏறினேன்.
வேலை நியமன கடிதத்துடன், சம்பந்தப்பட்ட ரயில்வே அதிகாரியை சந்தித்து, வேலையில் சேர்ந்தேன்.
அப்போது தான், நாடகத்திலும் நடிக்க ஆரம்பித்தேன்.
- தொடரும்.
நன்றி: கிழக்கு பதிப்பகம், சென்னை.

எஸ். சந்திரமவுலி

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X