எல்லையில்லா அழகை காண எவரெஸ் சென்று வந்தேன்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஜூலை
2019
00:00

சென்னையைச் சேர்ந்தவர், ஹரிணி நாராயணன். சார்ட்டர்டு அக்கவுன்ட், கம்பெனி செகரட்டரி, காஸ்ட் அக்கவுன்ட், எஸ்.ஏ.பி., நிதி மற்றும் பொருளாதாரத்தில் முதுகலை என்று, கணக்கியல் துறை படிப்பில் மிச்சமின்றி உச்சம் தொட்டவர். இதன் காரணமாக, 24 வயதிலேயே, இந்தியாவிற்கான வெளிநாட்டு வங்கியில், உயர் பொறுப்பில் உள்ளார்.
ஒரு நிமிடம் கூட வீணடிக்காமல், ஏதாவது செய்தபடி இருப்பார்.
'கஜா' புயல் தாக்குதலுக்கு உள்ளாகிய கிராம மக்களை, வாரந்தோறும் நிவாரண பொருட்களுடன் சந்தித்து உதவியுள்ளார். அடுத்து என்ன செய்யலாம் என்று ஓயாமல் சிந்திப்பவர். இதை எல்லாம் தாண்டி, 'என்னால் எதையும் சாதிக்க முடியும்...' என்ற தன்னம்பிக்கையுடன், சமீபத்தில், 15 நாட்கள், எவரெஸ்ட் சிகரம் சென்று வந்துள்ளார்.
அண்டை நாடான, நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இருந்து, உலகின் சிறிய விமான நிலையமான, 'லுக்லாவில்' காலடி எடுத்து வைத்தது முதல், இவரது எவரெஸ்ட் பயணம் ஆரம்பமானது.
எவரெஸ்டின் அடிவாரத்தில் அமைந்துள்ளது, கோலாபத்தர் கிராமம். எவரெஸ்டுக்கு மூன்று மணி நேரத்தில், ஹெலிகாப்டரில் சென்று விடலாம்; ஆனால், நடந்து செல்ல, 10 நாட்களாகிறது.
கொடைக்கானல் மலையின் உயரம், 6,998 அடி. இவர் சென்ற, எவரெஸ்ட் சிகரத்தின் உயரம், 29 ஆயிரத்து, 29 அடி; ஐந்து மடங்கு அதிக உயரமானது.
சில இடங்களுக்கு சென்றதும், அங்குள்ள சீதோஷ்ணம் உடலுக்கு ஒத்துக்கொண்டால் தான், அடுத்த அடி எடுத்து வைக்க முடியும். ஆகவே, சில கிராமங்களில் ஒன்றிரண்டு நாள் தங்கி செல்ல வேண்டும்; அதுதான் மலையேறும் முறையும் கூட.
இங்குள்ள கிராமங்களில் உணவு, தண்ணீருக்கு அதிக கட்டணம் செலுத்த வேண்டும். ஒரு ஆம்லெட், 800 ரூபாய் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். உயரத்தில் ஏற ஏற, கட்டணம் இன்னும் அதிகமாகும்.
இந்த கிராமங்களில், 'சேட்டிலைட்' போன் வசதி உள்ளது. ஆனால், கட்டணம் மிக அதிகம். மலையேறுபவர்களில் யாருக்காவது உடல் நலம் பாதிக்கப்பட்டால் அவர்களை மீட்டு வர, ஹெலிகாப்ட்டருக்கு தகவல் சொல்ல, இது பயன்படுகிறது.
இமயத்தில் காணப்படும் ஆறுகளும், ஏரிகளும், பனி மலையும், தாவரங்களும், நீர்வீழ்ச்சிகளும், காலை சூரிய உதயம், மாலை சூரிய அஸ்தமனமும், நிலவொளியும் வேறு எங்கும் காண முடியாதது; எத்தனை முறை பார்த்தாலும், ரசித்தரலும் சலிக்காதது.
இப்படிப்பட்ட இமயத்தின் அழகைக் காண எவ்வளவு வேண்டுமானாலும் சிரமப்படலாம்.
'மலையேறுவதற்கு தான், 10 நாட்கள். ஐந்தே நாட்களில் இறங்கி விட்டோம். அமைதியும், அழகும் பொங்கி வழியும் இமயத்தை விட்டு வர மனமில்லை. அடுத்த ஆண்டு போக, இப்போதே தயாராகி விட்டேன்...' என்கிறார், ஹரிணி நாராயணன்.

எல்.எம். ராஜ்

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X