அன்புடன் அந்தரங்கம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஜூலை
2019
00:00

அன்புள்ள அம்மாவுக்கு —
நான், 26 வயது பெண். பெற்றோருக்கு ஒரே மகள். படிப்பு: பி.காம்., என் தந்தை, அரசு பணியில் உள்ளார். கல்லுாரியில் படிக்கும்போது, 'சீனியர்' மாணவரை, ஒருதலையாக காதலித்தேன். படிப்பு முடிந்த போது, என் மனதில் உள்ளதை அவரிடம் சொல்லாமல் பிரிந்தேன். அவ்வப்போது, 'வாட்ஸ் - ஆப்' மற்றும் முகநுாலில் தொடர்பு கொள்வதுண்டு.
அப்பாவின் சிபாரிசில், 'சீனியர்' மாணவர் பணிபுரியும் அதே நிறுவனத்தில், நானும் பணியில் சேர்ந்தேன். சிறிது நாட்களுக்கு பின், என் காதலை தெரிவித்து, அவருக்கு, 'இ - மெயில்' அனுப்பினேன். 'என்னை விட, சிறந்த ஒருவர், உனக்கு கிடைப்பார்...' என்று, பதில் அனுப்பியிருந்தார்.
இதற்கிடையில், பெற்றோரின் வற்புறுத்தலால், பெண் பார்க்கும் படலத்துக்கு சம்மதித்தேன். வரதட்சணை, சீர் என்று, ஏகத்துக்கும் கேட்கவே, தந்தை யோசித்துக் கொண்டிருக்கிறார்.
எங்கள் ஊரை சேர்ந்த, என்னுடன் படித்த மாணவர் ஒருவர், சமீபத்தில் என்னை சந்திக்க வந்தார். 'கல்லுாரியில் உன்னை, ஒரு தலையாய் காதலித்தேன்... உன்னை மணந்து கொள்ள ஆசைப்படுகிறேன். இப்போது, நான் நல்ல நிலையில் இருப்பதால், கண்கலங்காமல் பார்த்துக் கொள்வேன்...' என்கிறார்.
நான் காதலித்தவரை மணந்து கொள்ள மனம் துடிக்கிறது; என்னை நேசிப்பவரையும் உதறி தள்ள, அறிவு மறுக்கிறது; பெற்றோருக்காக, அவர்கள் பார்த்த மாப்பிள்ளையை ஏற்பதா என, மனம் கலங்குகிறது.
குழம்பி போயுள்ள எனக்கு, நல்ல ஆலோசனை தாருங்கள், அம்மா.
இப்படிக்கு,
உங்கள் மகள்.


அன்பு மகளுக்கு —
திருமண வயது ஆரம்பிப்பதில் இருந்து முடிவது வரை, ஆணும் சரி, பெண்ணும் சரி, ஆயிரம் தகுதி வாய்ந்த வரன்களை கடந்து போகின்றனர். எந்த ஆண், எந்த பெண் ஜோடி சேர்ந்தால், அவர்களது வாழ்க்கை வெற்றி பெறும் என்பது புரியாத புதிர்.
நீ ஒரு தலையாய் காதலித்தவனா, உன்னை ஒரு தலையாய் காதலித்தவனா, தந்தை பார்க்கும் வரனா, யாரை திருமணம் செய்து கொள்வது என்ற, திரிசங்கு நிலையில் பரிதவித்து நிற்கிறாய்.
ஒரு தலையாய் காதலித்தவனை ஆராய்வோம்... 'சீனியர்' மாணவர் மீது வரும் காதலை, 'கன்றுக்குட்டி காதல்' எனலாம். 'டீனேஜில்' வரும் பெரும்பாலான காதல்கள், வெறும் இனக்கவர்ச்சியே. இது மாதிரியான காதல்கள், மேகங்கள் போல கலைந்து, நகர்ந்து விடும். அப்பாவின், 'பர்சனாலிட்டி'யை ஒத்துள்ள, 'சீனியரை' ஒரு தலையாய் காதலித்துள்ளாய்.
உன், 'சீனியர்' அனுப்பியுள்ள மின்னஞ்சலின் உள்ளர்த்தம் தெரியுமா? 'மேட்ரிமோனியலில்' மகனுக்கு வரன் பார்த்து விட்டு, வரன் பிடிக்கவில்லை என, நேரடியாக கூறாமல், 'உங்கள் இளவரசியை மருமகளாக்க, எங்களுக்கு அதிர்ஷ்டமில்லை...' என, பதில் அனுப்புவர், மாப்பிள்ளை வீட்டார்.
'சீனியருக்கு' உன்னை அறவே பிடிக்கவில்லை. மேலும் மேலும், அவன் மேல் போய் விழாதே; அவன் மீதான காதலை, நினைவு திரளிலிருந்து அகற்று.
அடுத்து, உன்னை, ஒரு தலையாய் காதலிப்பவனை ஆராய்வோம்... தான் விளையாட விரும்பிய பொம்மை, விற்பனை ஆகாமல், கடையின், 'டிஸ்பிளே'யில் இருக்கிறது. இப்போதாவது அந்த பொம்மையை வாங்கி விளையாடுவோம் என்ற சிறுவனின் மனோபாவத்துடன் உன்னை அணுகியிருக்கிறான், ஒரு தலைகாரன்.
இவ்வகை ஆண்கள், பெரும்பாலும் அதீத கற்பனையும், எதிர்பார்ப்பும் உள்ளவர்கள். பொம்மை கிடைத்து விட்டால், சிறிது நேரம் விளையாடி, அதை போட்டு, அடுத்த பொம்மையை தேடி போய் விடுவர். இவனை, காத்திருப்பு பட்டியலில் வைத்து, தந்தை பார்த்த வரன் பற்றி ஆராய்வோம்...
வரதட்சணையும், சீரும் அதிகம் கேட்கும் வரனோடு, வரன் பார்ப்பதை நிறுத்தி விடுவாரா என்ன... வரிசையாக வரன்களை பார்க்க சொல். வரன்களின், 'பிளஸ், மைனஸ்'களை அலசி ஆராய். தந்தையின் ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் கேள்.
உன் காதலிலும், உன் மீதான காதலிலும் சில பல நிறை குறைகள் இருக்கலாம். இரண்டையும் ஒதுக்கி தள்ளி, அப்பா பார்க்கும் வரனை மணந்து கொள்.
திருமணத்திற்கு பின், நீ காதலித்தவனை, தந்தை பார்த்து மணந்து கொண்ட, கணவனோடு ஒப்பிட்டு பார்க்காதே.
'ஈகோ' இன்மையும், சமரச மனோபாவமுமே, ஒரு திருமணத்தை வெற்றிகரமாக்கும் மந்திரங்களாகும்.
- என்றென்றும் தாய்மையுடன்,
சகுந்தலா கோபிநாத்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (8)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
இந்தியன் kumar - chennai,இந்தியா
13-ஜூலை-201915:49:53 IST Report Abuse
இந்தியன் kumar இப்போது இனிக்கும் காதல் பின்னாளில் கசக்க ஆரம்பித்து விடும்.
Rate this:
Share this comment
Cancel
baalaa - Singapore,சிங்கப்பூர்
11-ஜூலை-201910:29:12 IST Report Abuse
baalaa 'சீனியருக்கு' உன்னை அறவே பிடிக்கவில்லை. மேலும் மேலும், அவன் மேல் போய் விழாதே அவன் மீதான காதலை, நினைவு திரளிலிருந்து அகற்று. இது ரொம்ப ரொம்ப முக்கியம் .. எனக்கு தெரிந்து கல்யாணம் ஆகியும் முன்னாள் காதலித்தவனை மறக்க முடியாமல் அவனிடம்போய் அழுது கவிழ்த்து கூடி தன்னுடைய கணவனை நாசமாக்கிய பெண்கள் உண்டு ... இதற்க்கு குறிப்பிட்ட காலம் கூட கிடையாது ... 20 வருடம் கழித்து தன முன்னாள் காதலனை கண்டு மயங்கி அவன் பின்னால் சென்றவர்களும் உண்டு எனக்கு தெரிந்து ... ஆக கவனம் பெண்ணே ....
Rate this:
Share this comment
Cancel
V.B.RAM - bangalore,இந்தியா
10-ஜூலை-201914:41:18 IST Report Abuse
V.B.RAM நான் காதலித்தவரை மணந்து கொள்ள மனம் துடிக்கிறது என்னை நேசிப்பவரையும் உதறி தள்ள, அறிவு மறுக்கிறது பெற்றோருக்காக, அவர்கள் பார்த்த மாப்பிள்ளையை ஏற்பதா என, மனம் கலங்குகிறது.???? இதில் என்ன கலக்கம் ???
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X