தியாகத்தின் பலன்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஜூலை
2019
00:00

வீடாக இருந்தாலும் சரி, நாடாக இருந்தாலும் சரி, யாராவது ஒருவரின் தியாகத்தாலேயே, அது நிமிர்ந்து நிற்கும்; உயரும். யாரும் தியாகம் செய்யாமல், வீடோ, -நாடோ உயர்ந்ததாக, வரலாறு இல்லை.
கிருத யுகத்தில் நடந்த வரலாறு இது...
நல்லது, -கெட்டது என்பது, எக்காலத்திலும் உண்டு. சத்திய யுகம் எனப்படும், கிருத யுகத்திலும், ஒரு சமயம், கடும் பஞ்சம் நிலவியது.
மனிதர்களுக்கு மட்டுமல்ல, மாடு போன்ற விலங்கினங்களுக்கும், உண்ண எதுவும் கிடைக்கவில்லை. ஏரி, குளங்கள் வறண்டன; தரையெல்லாம் காய்ந்து அங்கங்கே விரிசலைக் காட்டின.
'தெய்வமே... காப்பாற்று எங்களை...' என, கதறினர், மக்கள்.
'நரபலி கொடுத்தால், மழை பெய்யும்...' என்றும், 'அந்த பலியும், யாரையும் பலவந்தப்படுத்தி கொடுத்ததாக இருக்கக் கூடாது; யாராவது, தன் உயிரை, தானே மனமுவந்து தியாகம் செய்து, பலி கொடுத்ததாக இருக்க வேண்டும்...' என்றும், யாரோ கூறினர்.
ஹூக்கும்... யார் முன் வருவர்?
ஊர் மக்கள் அனைவரும் கூடி பேசினரே தவிர, தீர்வு கிடைக்கவில்லை. மவுனம் பரவிய நேரத்தில், 12 வயது சிறுவன் எழுந்தான். அழகாக இருந்த அவன் பெயர், சதமன்யு; கூட்டத்தை வணங்கி பேசத் துவங்கினான்...
'இந்த தீவினையில் இருந்து நாட்டை காப்பாற்றுவதற்காக, மனமுவந்து என் உயிரை கொடுக்கத் தயாராக இருக்கிறேன். இவ்வளவு காலமாக, என்னைக் காப்பாற்றிய இந்த நாட்டுக்காக, நானும் ஏதாவது செய்ய வேண்டாமா... ஒரு நல்ல காரியத்திற்காக, மகிழ்ச்சியாகவே என் உயிரைத் தருகிறேன்...' என்று, ஒரு பிரசங்கமே செய்து விட்டான்.
'சதமன்யு வாழ்க... வாழ்க சதமன்யு...' என்று கூவியபடியே, ஓடி வந்து கட்டிக்கொண்டார், அவனது தந்தை. கூடவே, அவனது தாயும் வந்து, மகனை கட்டித் தழுவினார்; ஆனால், இருவருமே, மகனை தடுக்கவில்லை.
பலியிடுவதற்கான நன்னாளும் குறிக்கப்பட்டது. அன்று, புண்ணிய நதிகள் பலவற்றிலும் இருந்து தீர்த்தம், எடுத்து வந்து, சதமன்யுவிற்கு அபிஷேகம் செய்தனர்; இருந்ததில் நல்ல ஆடைகளாக அணிவித்தனர். எங்கிருந்தோ எடுத்து வந்த சந்தனத்தை பூசி, மாலைகளை அணிவித்தனர்.
யாக சாலையில், யாகத் துாண் அருகில் நின்றிருந்த, சதமன்யு, இந்திரனை நோக்கி, ஆழ்ந்த தியானத்தில் இருந்தான். சடங்குகள் முடிந்த பின், பலி பீடத்தை நெருங்கி, அதில் தலை சாய்த்திருந்தான்.
அனைவர் பார்வையும், அவன் மீதே இருந்தது. அப்போது, திடீரென்று மங்கல இசை கேட்டது; ஆகாயத்தில் இருந்து, பாரிஜாத மலர்கள், சதமன்யு மீது விழுந்தன.
அதே வினாடியில், அங்கே தேவேந்திரன் தோன்றினார்; சதமன்யுவைத் தடவிக்கொடுத்து, 'சிறுவனே... உன் தேச பக்தியும், தியாகமும், என்னை வியக்க வைத்தது. இப்படிப்பட்ட சிறுவர்கள் இருக்கும் நாடு, எந்த விதத்திலும் குறைவுபடாது; ஒரு நாளும் அழியாது.
'உன் தியாகத்தை வாழ்த்தி, இதோ, இப்போதே மழை பொழிய செய்கிறேன்...' என்று தேவேந்திரன் மறைய, அப்போதே மழை கொட்டத் துவங்கியது.
பிறகென்ன... பஞ்சம் நீங்க, அனைவரும் சதமன்யுவை பாராட்டினர்.
தியாகம் செய்ய முடியாவிட்டாலும் பரவாயில்லை; தியாகம் செய்பவர்களை மதிப்போம். தீமைகள் விலகும் தாமே, நன்மைகள் கூடும்!

பி. என். பரசுராமன்

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X