விஞ்ஞானியாக விரும்பும் ஏழை மாணவியின் கனவு!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஜூலை
2019
00:00

தேனி மாவட்டத்தை சேர்ந்தவர், தாமோதரன். கடைகளுக்கு விளம்பர பலகை எழுதி வரும் வருமானத்தில், மனைவி அமுதா மற்றும் மகள் உதயகீர்த்திகாவுடன் வாடகை வீட்டில் வசிக்கிறார்.
இவ்வளவு சிரமத்திலும், உதயகீர்த்திகாவை நன்றாக படிக்க வைத்தார். ஒவ்வொருவரும், 'டாக்டர், இன்ஜினியர், ஐ.ஏ.எஸ்., படிப்பேன்...' என, கூறும் நிலையில், தாமோதரனின் மகள் மட்டும், 'விண்வெளி ஆராய்ச்சி படிப்பு படித்து, ராக்கெட் விஞ்ஞானியாக, ஆய்வாளராக வருவேன்...' என்று, சிறு வயது முதலே சொல்லி வந்தார்.
இத்துறையில் சாதித்த, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், சுனிதா வில்லியம்ஸ், கல்பனா சாவ்லா போல, தானும் சாதிக்க வேண்டும் என்பதே, இவரது லட்சியம்.
எட்டாம் வகுப்பு படிக்கும்போதே, இது தொடர்பான புத்தகங்களை தேடி தேடி படித்தார். திருநெல்வேலி மாவட்டம், மகேந்திரகிரியில் உள்ள, 'இஸ்ரோ' விண்வெளி ஆராய்ச்சி மையம் சார்பாக, மாநில அளவில், மாணவர்களுக்கிடையே நடந்த போட்டியில் பங்கேற்று, 10ம் வகுப்பில் ஒருமுறை, பிளஸ் 2வில் ஒருமுறையும் முதல் பரிசு பெற்றார்.
இதன் காரணமாக, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு ஆராய்ச்சி கூடங்களுக்கு, சிறப்பு விருந்தினராக அழைத்துச் செல்லப்பட்டார். அந்த இடங்களை சுற்றிப் பார்த்ததும், விஞ்ஞானிகளை சந்தித்து பேசியதும், இவருக்குள் இருந்த கனவை மேலும் துாண்டியது.
பிளஸ் 2 முடித்தவுடன், விண்வெளி தொடர்பான படிப்பு படிக்க, உலகில் சிறந்த இடம் எது என்று தேடியதில், கிழக்கு ஐரோப்பிய நாடான, உக்ரைனில் உள்ள, 'கார்கிவ் யூனிவர்சிட்டி' என, தெரிய வந்தது.
அங்கு, இடம் கிடைப்பது சிரமம் என்றாலும், 'இஸ்ரோ'வில் வாங்கிய சான்றிதழ், இவருக்கான இடத்தை பெற்றுத் தந்தது. 'இன்ஜினியரிங் இன் ஏர்போர்ஸ்' என்பது, நான்கு ஆண்டு படிப்பு. முதல் ஆண்டு, எட்டு லட்சம் ரூபாய்; அதற்கடுத்த ஆண்டுகளுக்கு, நான்கு லட்சம் கட்டணம் என்ற விபரம் தெரிய வந்தது.
லட்சத்திற்கு எத்தனை சைபர் என்று தெரியாத, தாமோதரன், முதலில் திகைத்தவர், படிப்பிற்கான உதவி தொகையை கேட்க, ஊரில் உள்ள நல்லவர்களை தேடி கிளம்பினார். பல நாட்கள் அலைந்து, பல்வேறு அமைப்புகள், தனி நபர்கள் நன்கொடையாக வழங்கியதில், நான்கு ஆண்டு படிப்பை முடித்தார், உதயகீர்த்திகா.
மேலும், பல்கலை நிர்வாகத்திடமும், சிறந்த மாணவி என்று பெயர் எடுத்துள்ளார். ரஷ்ய மொழி தெரிந்தால், இன்னும் முன்னேறலாம் என்பதால், கிடைத்த நேரத்தை வீணடிக்காது, ரஷ்ய மொழியும் கற்றார்.
தன் படிப்பு செலவில், பலரது, 10 ரூபாய் கூட நன்கொடையாக கலந்திருக்கிறது என்பதை உணர்ந்ததால், விடுதியிலேயே சமைத்து சாப்பிட்டு, 'மெஸ்' கட்டணத்தையும் குறைத்துக் கொண்டார்.
நன்கொடை வழங்கியோருக்கு, அவ்வப்போது, தன் படிப்பு மற்றும் சாதித்து வரும் விபரங்களை, மின்னஞ்சலில் தெரிவித்து விடுவார்.
நான்கு ஆண்டு படிப்புக்கு தேவைப்படும் பணத்தை விட, கூடுதலாக கிடைத்தபோதும், 'எனக்கு தேவையான பண உதவி கிடைத்து விட்டது; வேண்டாம்...' என்று, வந்த பணத்தை திருப்பி அளித்த நேர்மையாளரும் கூட.
படிப்பை முடித்து, 'ஸ்பெஷல் டெக்னிகல் ஏர்கிராப்ட் மெயின்டெனன்ஸ் இன்ஜினியர்' ஆக, நாடு திரும்ப இருந்தார்.
இந்நிலையில், இவரது மதிப்பெண், பயிற்சி மற்றும் ஒழுங்குகளின் அடிப்படையில், மத்திய ஐரோப்பிய நாடான போலந்தில், அனலாக் விண்வெளி வீரர்களுக்கான பயிற்சி மையத்திலிருந்து, சிறப்பு படிப்பு படிக்க, அழைப்பு விடுத்துள்ளனர். எப்படியும் தமிழகத்திலிருந்து உதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையில், உக்ரைனில் தங்கியுள்ளார், உதயகீர்த்திகா.
உலகம் முழுவதில் இருந்தும் தேர்வு செய்யப்பட்டோரில், இந்தியாவை சேர்ந்த, உதயகீர்த்திகாவும் ஒருவர்.
இப்பயிற்சி முடித்து, தாயகம் திரும்பும்போது, இந்தியாவிலிருந்து விடப்படும், சந்திராயன் ராக்கெட்டில் பயணிக்கும் தகுதிபெற்ற விண்வெளி வீராங்கனையாக மிளிர்வார்.
எல்லாம் சரி தான்... ஆனால், போலந்து நாட்டிற்கு சென்று பயிற்சி பெற, இவருக்கு, 7.26 லட்ச ரூபாய் தேவைப்படுகிறது. பெயின்டரான, தாமோதரன், மீண்டும் பண உதவி கேட்டு, பலரது வீட்டு கதவை தட்டி வருகிறார்.
ஏழை பெண், உதயகீர்த்திகாவின், விண்வெளி வீராங்கனை கனவை நனவாக்க விரும்புவோர், தேனியில் உள்ள, அவர் தந்தை தாமோதரனுடன் தொடர்பு கொள்ள, அலைபேசி எண்: 96268 50509.

எல். முருகராஜ்

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
veera - Tenkasi,இந்தியா
10-ஜூலை-201914:08:54 IST Report Abuse
veera சகோதரிக்கு எனது பாராட்டுக்கள். உங்களது குறிக்கோள் வெற்றியடைய வாழ்த்துக்கள். I do not understand why she did not apply for scholarships because there are plenty of scholarships available like university scholarships, eramus program, industrial scholarships etc. in Europe to pursue masters or diploma. She can get easily one of these scholarships because her degree is from well-known university. But she is still expecting donors. Also, here in europe, you can see a lot of tamil students got admitted for masters with scholarships (they work very hard to get it) and more important, their parents are from middle class and low middle class. They receive good scholarships and send money to the family to move into the next level. "விடுதியிலேயே சமைத்து சாப்பிட்டு, 'மெஸ்' கட்டணத்தையும் குறைத்துக் கொண்டார்." In abroad or European countries, there is no mess for the food. The european university normally provides a student room with or shared kitchen. We have to cook ourselves for the food.This line is like over exaggerating.
Rate this:
Cancel
Saravanan Raman - Neyveli ,இந்தியா
08-ஜூலை-201911:53:59 IST Report Abuse
Saravanan Raman 07.07.2019 தேதியிட்ட வாரமலரில் வெளியான, ‘விஞ்ஞானியாக விரும்பும் ஏழை மாணவியின் கனவு’ என்னும் கட்டுரை, வாரமலர் இதழுக்கு பெருமை சேர்க்கின்றது இப்போது, உக்கிரைனில் இருக்கும் உதயகீர்த்திகா, இக்கட்டுரையின் மூலமாக, போதுமான பொருளாதார உதவி கிடைத்து, படிப்பில், அடுத்த உயரத்திற்கு செல்லப்போவது மட்டுமின்றி, விண்வெளி வீராங்கனையாக உலா வரப்போவதும் உறுதி இவ்வாறான தொண்டு மூலம், தினமலர் - வாரமலர் மக்கள் மனதில், ராக்கெட் வேகத்தில் உயர்ந்து விடுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரையை எழுதிய கட்டுரையாளர், திரு எல். முருக ராஜ் அவர்களையும், வெளியிட்ட பொ. ஆ,, (இது அண்ணன் அந்துமணி அவர்களின் பாணி) அவர்களையும் பாராட்டுகின்றேன். நன்றி என்றென்றும் அன்புடன், இராதா ராமன், நெய்வேலி
Rate this:
Cancel
மு.நா.பூங்கொடி செந்தில்குமார்,மதுரை. தேனி மாவட்டத்தை சேர்ந்தவர், தாமோதரன். கடைகளுக்கு விளம்பர பலகை எழுதி வரும் வருமானத்தில், மனைவி அமுதா .... விஞ்ஞானி..யாக....நினைப்பது சாத்தியமே......முயற்சிக்கவும் பாராட்டுக்கள்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X