காய்கறி விளைவிக்க வாடகைக்கு தோட்டம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஜூலை
2019
00:00

மருந்தியல் படிப்பில் முதுகலை பட்டதாரிகளான, சுனில்குமார் மற்றும் அனாமிகா பிஸ்ட் தலைமையிலான குழுவினர், 'ஹேப்பி பார்ம்' என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகின்றனர்.
இதற்காக, பெங்களூரு, ஜங்கிள்பாளையா அருகே, 15 ஏக்கர் நிலத்தை, வாடகைக்கு எடுத்துள்ளனர்.
வீடு, கடை, கார், பைக் வாடகைக்கு கொடுப்பது போல், காய்கறி விளைவிக்க, 'ஹேப்பி பார்ம், சுய விவசாயம், பிரம்ஹினி பார்ம்' என்ற பெயரில், சிறு சிறு தோட்டங்கள் அமைத்துள்ளனர்.
டாக்டர்கள், பொறியாளர்கள், ஓய்வுபெற்ற அதிகாரிகள், ஆசிரியர்கள் என, பல தரப்பினரும், வாடகைக்கு தோட்டம் பெற்று, காய்கறிகளை பயிரிட்டு, வார இறுதி நாட்களில், மகிழ்ச்சியாக பொழுது போக்குகின்றனர்.
முன்பதிவு செய்வோருக்கு, 1,000 சதுர அடி நிலம், குறைந்தபட்சம் நான்கு மாதம் வரை வாடகைக்கு கிடைக்கும். 1 சதுர அடிக்கு, இரண்டு ரூபாய் வீதம், மாதம், 2,000 ரூபாய் வாடகை செலுத்த வேண்டும்.
தங்களுக்கு என்னென்ன காய்கறி, கீரை வேண்டு மென்பதை சொன்னால், தொண்டு நிறுவனத்தினரே விதை துாவி பராமரித்து, விளைவித்தும் கொடுப்பர்.
வார இறுதி நாட்களில், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தோட்டத்துக்கு, குடும்பத்துடன் வந்து களையெடுப்பது, பாத்தி கட்டுவது, காய்கறிகளை அறுவடை செய்வது போன்ற விவசாய பணிகளில் ஈடுபடலாம்.
* இடத்தை பார்த்து முடிவு செய்து, அதற்கான வாடகையை செலுத்திய பின், அடையாளத்துக்காக தோட்டத்தில், வாடகைதாரரின் பெயர் பொறித்த பலகை வைக்கப்படும்
* முட்டை கோஸ், கேரட், பீன்ஸ், பீர்க்கங்காய், தக்காளி, பீட்ரூட், கேரட், சுரைக்காய், பூசணிக்காய், வெண்டைக்காய், காலிபிளவர், காராமணி, முள்ளங்கி, முருங்கை என, பலவிதமான காய்கறிகள் விளைவிக்கப்படுகின்றன. இதுதவிர, மா, பலா, வாழை, பப்பாளி போன்ற பழங்களும், தோட்டங்களுக்கு இடையே தென்னை மரங்களும் நட்டுள்ளனர்
* ஒவ்வொரு தோட்டத்திலும், ஆழ்துளை கிணறு மற்றும் பழங்காலத்து பெரிய கிணறு ஒன்றும் உள்ளது. குறைவான அளவு தண்ணீர் பயன்படுத்தும் வகையில், சொட்டு நீர்ப்பாசன வசதியும் செய்துள்ளனர்
* வாடகைக்கு எடுத்துள்ளோர், உறவினர்கள், நண்பர்களையும் அழைத்து வரலாம். விளைவித்த காய்கறிகளை பறித்து, அங்கேயே சமைத்து சாப்பிட, பாத்திரங்களும் தருகின்றனர்
* தொண்டு நிறுவனமே மாடுகள் வளர்ப்பதால், அவற்றின் சாணத்திலிருந்து இயற்கை உரம் தயாரிக்கப்பட்டு, காய்கறிகள் விளைவிக்கப்படுகின்றன. தோட்டங்களை பராமரிக்க, ஊழியர்களும் உள்ளனர்
'கடந்த, 2015ல் ஒரு வாடிக்கையாளருடன் துவக்கப்பட்டது. தற்போது, 180 பேர் பதிவு செய்து, விவசாயம் செய்கின்றனர். ஒருவரிடம், 300 ரூபாய் வீதம், மாதம், 50 ஆயிரத்துக்கும் மேல் சம்பாதிக்கிறேன்.
'கம்ப்யூட்டர், மொபைல் விளையாட்டுகளில் மூழ்கியுள்ள பிள்ளைகளுக்கு, விவசாயத்தை அறிமுகம் செய்வது; நகரவாசிகளுக்கு, இயற்கையான காய்கறிகளை விளைவித்து கொடுப்பதே நோக்கம்...' என்கிறார், சுனில்குமார்.
அரசும், பெரிய தொழிலதிபர்களும், விவசாய நிலம் வைத்திருப்போரும், வாடகைக்கு தோட்டம் வழங்க முன்வர வேண்டும். விவசாய பணி செய்வதால், மனதுக்கு நிம்மதியும், இயற்கை முறையில் காய்கறிகளும் கிடைக்கும்.
மேலும் விபரங்களுக்கு, www.swayamkrishi.in என்ற இணைய தளத்தையும், சுனில்குமாரை தொடர்பு கொள்ள, 99455 08995 என்ற எண்ணிலும் அழைக்கலாம்.

நிருபர் குழு

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
10-ஜூலை-201916:24:05 IST Report Abuse
Endrum Indian அம்மாடி???? எப்படி எல்லாம் பிசினெஸ் செய்யலாம் என்று தெரிகின்றது????
Rate this:
Share this comment
Cancel
மு.நா.பூங்கொடி செந்தில்குமார்,மதுரை. காய்கறி விளைவிக்க வாடகைக்கு தோட்டம்.. என்னும் புதிய முயற்சிக்கு பாராட்டுக்கள்.....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X