இது உங்கள் இடம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஜூலை
2019
00:00

கண்ணீர் வடித்த வெளிநாட்டு பயணி!
சுற்றுலா வழிகாட்டியாக இருக்கும் நண்பர், சமீபத்தில், சில வெளிநாட்டினரை, மதுரைக்கு சுற்றுலா அழைத்து வந்திருந்தார். மதுரை மீனாட்சியம்மன் கோவில், திருமலை நாயக்கர் மகால் போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களை பார்த்து மெய்மறந்தனர், வெளிநாட்டினர். வைகை ஆற்றை பார்த்ததும், ஆச்சரியத்தோடு, 'இது என்ன, இவ்வளவு நீளமாக இருக்கிறதே...' என்று, வினவினர்.
'இதுதான், புகழ்பெற்ற வைகை ஆறு...' என்று, அதன் வரலாற்றை எடுத்துரைத்தார், நண்பர்.
அதைக் கேட்ட வெளிநாட்டினர் முகத்தில் திகைப்பு. உடனே, அதில் ஒரு பெண்மணி, 'பாரம்பரியமான ஆற்றில், இன்று, ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லையே... ஏன்? இந்தியர்களுக்கு, இயற்கையின் மீது ஏன் இவ்வளவு வெறுப்பு... நிலம், நீர், காற்று, ஆகாயம் மற்றும் நெருப்பு ஆகிய ஐம்பூதங்களை, இந்தியர்கள் மதிப்பதே இல்லை.
'நிலத்தில் விவசாயம் செய்யாமல், மரங்கள் வளர்க்காமல், ஆறு, குளங்கள் வெட்டி நீரையும் சேமிக்காமல். கழிவுநீரை விட்டு பாழ்படுத்துகின்றனர். காற்றையும் மாசுபடுத்தி, புகையால், ஆகாயத்தை கருமையாக்கி, இப்படி, இயற்கைக்கு தீங்கு செய்தால், நல்ல குடிநீர் மற்றும் சுகாதாரத்தோடு, உங்களின் வருங்கால சந்ததியினர் எப்படி வாழ முடியும். உங்கள் தலைமுறையினருக்காக, நான் அனுதாபப்படுகிறேன்...' என்று கூறி, வருத்தப்பட்டார்.
இதைக் கேட்ட நண்பரும், நானும் அவமானத்தால், வெட்கி தலை குனிந்தோம். இயற்கை குறித்து, நமக்கு விழிப்புணர்வு வருவது எப்போது?
- சி.டி. பழனியப்பன், மதுரை.

மறுமணம் செய்யப் போகிறீர்களா?
வரதட்சணை கொடுமையால், தோழியின் முதல் திருமண வாழ்க்கை, சில நாட்களிலேயே முறிந்தது. சில ஆண்டுகளுக்கு பின், அவள் விரும்பியபடி, வேறு மதத்தை சேர்ந்த, ஒருவரை திருமணம் செய்தாள்.
அவரும், முதல் திருமண வாழ்க்கையில் தோல்வி அடைந்தவர். அவரது பெற்றோர், சகோதர, சகோதரிகளின் சம்மதத்துடன், நண்பர்கள் முன்னிலையில், இவர்களது திருமணம், சில ஆண்டுகளுக்கு முன் நடைபெற்றது.
சமீபத்தில், அவளை சந்தித்து, 'எப்படி இருக்கிறாய்...' என்று கேட்டேன்.
'இந்த திருமணமாவது, எனக்கு நிம்மதியை தரும் என்று நினைத்தேன். என் கணவருக்கு, அனைத்து கெட்ட பழக்கங்களும் உள்ளன; ஏகப்பட்ட கடன் வாங்கியதை சொல்லாமல் மறைத்து விட்டார். மேலும், வேலைக்கும் செல்வதில்லை. வாழ்க்கையில் நிம்மதியே இல்லை.
'எட்டு வயதில், ஒரு பெண் குழந்தை. நான் வேலைக்கு சென்று தான், குழந்தையை பராமரிக்கிறேன். அதுமட்டுமல்ல, கணவரின் அக்கா மற்றும் அண்ணன்கள், 'அவன் வேலைக்கு போக மாட்டான்; நீ தான் எல்லாம் செய்யணும்...' என்று வற்புறுத்துகின்றனர்...' என்றாள்.
இதுபோன்ற ஆண்களை நினைத்தால், கோபம் தான் வருகிறது. ஏற்கனவே ஏமாற்றத்தோடு, இன்னொரு மண வாழ்க்கையை எதிர்கொள்ளும் பெண்ணுக்கு, இரண்டாவது திருமணமும் இவ்வாறு அமைந்தால், அவளும், குழந்தையும், மீதி காலத்தை எப்படி வாழ முடியும்?
ஆண்களே... உங்களின் உண்மை சுபாவத்தை மறைத்து, இரண்டாவது திருமணம் செய்து கொள்ள வேண்டுமா? பெண்களின் வாழ்க்கையில் விளையாடாதீர்கள்; இனியாவது திருந்துங்கள்.
பெண்களே... நன்கு விசாரித்து, இரண்டாவது திருமணம் செய்வது நல்லது.
- ஆர். எம். எஸ்., கோவை.

துாய்மை காப்போம்!
தஞ்சாவூரில் நடந்த உறவினர் இல்ல திருமணத்திற்கு சென்றிருந்தேன். திருமணம் முடிந்தவுடன், உறவினர்களுடன் எல்லா இடங்களையும் பார்த்துவிட்டு, அங்குள்ள ஒரு கோவிலுக்கு சென்றோம்.
நாங்கள் சென்றபோது, அந்த ஊரைச் சேர்ந்த மாணவ - மாணவியர், கோவில் சுவர்களில் ஆங்காங்கே எழுதி வைத்திருந்த தேர்வு எண்களை அழித்துக் கொண்டிருந்தனர், நற்பணி மன்ற இளைஞர்கள்.
அங்கு, ஒரு பேனர் வைத்தனர்; அதில், 'தேர்வில் வெற்றி பெறவும், மதிப்பெண் அதிகம் பெறவும், இங்கே வைக்கப்பட்டுள்ள நோட்டு புத்தகத்தில், தேர்வு எண்களை எழுதுங்கள். நோட்டு புத்தகத்தை சுவாமியிடம் வைத்து, பூஜை செய்து, பிரசாதம் தருவோம்...' என்று எழுதியிருந்தது. அதோடு, கோவில் சுவருக்கும் வெள்ளையடித்து சுத்தமாக்கினர்.
இரண்டு நாட்களுக்கு பின், மீண்டும் அக்கோவிலுக்கு சென்றோம். என்ன ஆச்சரியம்... சுற்றுச் சுவரில் எழுதாமல், அங்கிருந்த நோட்டு புத்தகத்தில் தேர்வு எண்களை எழுதியிருந்தனர்.
குறிப்பிட்ட நாளில், அந்த நோட்டு புத்தகத்தை, சுவாமி முன் பூஜையில் வைத்து, அனைவருக்கும் பிரசாதத்துடன், பேனா, பென்சில் போன்றவற்றை வழங்கிக் கொண்டிருந்தனர், நற்பணி மன்ற இளைஞர்கள்.
அவர்களது நற்செயலை பாராட்டி, வந்தேன்.
- எஸ்.பிரேமாவதி, சென்னை.

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (14)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Yezdi K Damo - Chennai,இந்தியா
19-ஜூலை-201905:04:43 IST Report Abuse
Yezdi K Damo இரண்டாவது கடிதம் தனிப்பட்ட நபர்களை பற்றியது . முதல் கடிதமும் ,மூன்றாவது கடிதமும் சமுதாய மாற்றத்துக்கு தேவையானது . முதல் கடிதம் மிகவும் பாராட்டுக்கு உரியது . நல்ல விழிப்புணர்வு கடிதம் எழுதிய பழனியப்பன் அவர்களுக்கு என் நன்றிகள் .
Rate this:
Share this comment
Cancel
Giridharan Srinivasan - Chennai,இந்தியா
14-ஜூலை-201914:45:19 IST Report Abuse
Giridharan Srinivasan ஆர். எம். எஸ்., கோவை, அது என்ன "ஆண்களே... உங்களின் உண்மை சுபாவத்தை மறைத்து, இரண்டாவது திருமணம் செய்து கொள்ள வேண்டுமா? பெண்களின் வாழ்க்கையில் விளையாடாதீர்கள் இனியாவது திருந்துங்கள்." ? அப்படியானால் பெண்கள் தங்களின் உண்மை சுபாவத்தை மறைத்து, இரண்டாவது திருமணம் செய்து கொண்டு ஆண்களின் வாழ்க்கையில் விளையாடலாமா? நீங்கள் முதலில் உங்கள் அறிவை வளர்த்துக்கொண்டு திருந்துங்கள் ஒருதலை பட்சமாக பேசுவதை, எழுதுவதை, நடந்து கொள்வதை நிறுத்தி திருந்துங்கள்.
Rate this:
Share this comment
Cancel
Girija - Chennai,இந்தியா
14-ஜூலை-201912:20:09 IST Report Abuse
Girija @ஆர்.எம்.எஸ்., கோவை, உங்கள் தோழி ஆண்டவன் கொடுத்த வழிகளை பயன்படுத்தாமல் கசாப்பு கடைக்கு சென்ற ஆடு போல் சிக்கியுள்ளார். அந்த, இந்நாள் கணவனின் முதல் மனைவியை அல்லது அவர்களது உறவினர்களை , அல்லது அவன் வேலை செய்த நிறுவனத்தில், குறைந்த பட்சம் அவன் குடி இருந்த இடத்தில் அவனை பற்றி அல்லது அவன் குடும்பத்தை பற்றி விசாரித்திருக்க வேண்டும். இதற்க்கு தான் நான் மீண்டும் மீண்டும் சொல்வது பெண்கள் சுயமாக இருக்கவேண்டும் மறந்தும் இரண்டாதாரமாக மறுமணம் செய்யக்கூடாது என்று. நமக்கு என்ன குறைச்சல் என்ற தன்னம்பிக்கை வேண்டும். அதற்கும் மேலாக இந்த காதல் திருமணத்தில், இரண்டாம் திருமணத்தில் குழந்தை பிறப்பை, குறைந்தது ஒரு வருடம் தள்ளி போடவேண்டும், அதற்குள் கணவனின் அகம் பொருள் இன்பம் எல்லாம் உங்களுக்கு தெரிந்துவிடும் மீண்டும் டூப்ளிகேட்டிடம் சிக்கி விட்டீர்கள் என்றால் விலகிவிட சவுகரியமாக இருக்கும். கூடியவரை பெற்றோர்கள் பார்த்து நடத்தும் திருமணமாக இருந்தாலும் பையனை பற்றி நன்கு விசாரிக்கவேண்டும் பயப்படக்கூடாது திருமணம் நின்றுவிடுமோ என்று? அப்படி ஒருவன் செய்தால் திருமணம் ஆனா பிறகு என்னவெல்லாம் செய்வான்? நல்லவேளை தப்பித்தோம் என்று நிம்மதியடைய வேண்டும். இன்னொரு விஷயம் நீங்கள் பையனை பற்றி குறிப்பாக வெளியிடத்து கவுரவமான நபர்களிடம் விசாரிக்கும் போது அவர்கள் பொய் சொல்லமாட்டார்கள், போட்டு கொடுக்கமாட்டார்கள், இதை பெண்ணை பெற்றவர்கள் நினைவில் கொள்ள வேண்டும். இரண்டாம் தாரம் எப்போதுமே வேண்டாம் அப்படி செய்தால் வேலை, வருமானம், சொத்து, கடன், ஏற்கனவே சுமக்கும் பொறுப்புகள், திருமணத்திற்கு பிறகு குடும்பத்தை நடத்தும் பொறுப்பு, குழந்தைகள் பேறு குறைந்தது ஒருவருடத்திற்கு பிறகு, குழந்தைகளுக்கு பொறுப்பு, விருப்பு வெறுப்பு ஆகியவற்றை தெளிவாக பேசி புரிந்துகொண்ட பிறகுதான் ஏற்றுக்கொள்ள வேண்டும். இப்பொழுது ஆதார் கார்டு எண்ணை பயன்படுத்தி கூட விசாரிக்கலாம் ஆரம்பத்தில் ஆனால் நேரில் சென்று வாய் வார்த்தையாக விசாரித்து அறிவது மிகவும் அவசியம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X