அந்துமணி பதில்கள்! | வாரமலர் | Varamalar | tamil weekly supplements
அந்துமணி பதில்கள்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

14 ஜூலை
2019
00:00

பா. பிரதாப், பெண்ணாடம், கடலுார் மாவட்டம்: தண்ணீர் பிரச்னைக்கு காரணம், பருவ நிலை மாற்றமா, மக்களின் கவனக்குறைவா, அரசின் பொறுப்பின்மையா?
மூன்றாவதே முதல் காரணம்! திராவிட கட்சிகள், ஆட்சிக்கு வந்த பின், ஏரி, குளங்களை துார் வாருவதில்லை; அதன் ஆக்கிரமிப்புகளுக்கு ஆதரவு கொடுத்தனர்; அந்துடன், ஆறுகளை கவனிக்கவில்லை.
இதனால், பருவ மழை காலங்களில், 147 டி.எம்.சி., தண்ணீர் வீணாக, கடலில் கலக்கிறது. ஆளுவோர், புனரமைப்பிற்கு, பல கோடி செலவு செய்வதாக கூறினாலும், அப்பணம், அவர்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் மற்றும் ஒப்பந்ததாரர்களிடமே சென்று சேர்கிறது!

கு.அழகிரி, புவனகிரி: அந்துமணியாரே... உங்களது நெருங்கிய நண்பர்களாக, யார், யாரை கருதுகிறீர்கள்?
இரண்டே இரண்டு பேர் தான்! அவர்களுக்கு தனிப் பெயர் கிடையாது; உலகில் அனைத்து மொழிகளிலும் பொது பெயர் கிடையாது!
முதலாமவர், கொசு; இரண்டாவர், மூட்டைப்பூச்சி!
இருவரும் தான், 'டேய்... துாங்காதே... எழும்பி வேலையை பார்...' என, அவரவர் மொழிகளில் கூறுவர்!

* எஸ்.கருணாகரன், மதுரை: நான், கடுமையாக உழைக்கிறேன்... என்னால், பணத்தில் முன்னேற முடியவில்லை!
கருத்துடன் உழைத்தால், 'லட்சுமி' வருவாள். கரத்தால் மட்டுமே வேலையை செய்தால், வயிறு மட்டுமே நிறையும்!

ஆர்.கோகிலா, சென்னை: பொய்யே பேசாதவர்களை பார்த்து இருக்கிறீர்களா?
பார்த்து இருக்கிறேனே... அவர்களால் வாயே பேச முடியாது... அப்புறம் எப்படி, பொய் பேச முடியும்... அப்பேர்பட்டவரை, 'ஊமை' என, அழைக்கின்றனர்!

மதுரை முருகேசன், தஞ்சாவூர்: 'வாரமலர்' இதழின், 'திண்ணை' பகுதியை ஒருங்கிணைத்து, புத்தகமாக தயாரிக்க வேண்டும் என்ற, என் ஆர்வம் குறித்து...
மிக்க மகிழ்ச்சியானது தான்! ஆனால், அந்த சிரமம் உங்களுக்கு வேண்டாம் என்பதாலேயே, 'தாமரை பிரதர்ஸ்' என்ற புத்தக வெளியீட்டாளர்கள், அப்பணியில் ஈடுபட்டுள்ளனர்; விரைவில் அது வெளியாகிவிடும்.

டி.ஜே.தனபாலன், கோவை: 'டாஸ்மாக்' கடைகளை, மாலை, 5:00 மணிக்கு திறந்து, இரவு, 10:00 மணிக்கு மூடினால் என்ன?
முதலில் சந்தோஷப்படுபவர், திருமணமான, 'குடி' மக்களின் மனைவியர்... அடுத்து, அக்கடையின் ஊழியர்! ஆனால், நம் உற்சாகபான பிரியர்கள், முன்னெச்சரிக்கை கொண்டவர்கள் என்பதை மறந்து விடாதீர்!

* மு. கருணாநிதி, திருவாரூர்: இந்தியா முழுவதும், காங்கிரசார், இன்று எப்படி இருக்கின்றனர்?
தண்ணீர் ஊற்றி வைத்த பழைய சோற்றில், எருமைத் தயிரை ஊற்றி சாப்பிடுவது போல், தொய்ந்து போய் கிடக்கின்றனர்.

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X