400 மொழிகளில் அசத்தும் மாணவர்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஜூலை
2019
00:00

ராமநாதபுரம் மாவட்டம், அபிராமத்தை சேர்ந்தவர், அப்துல் அமீது, வயது: 39. தற்போது, சென்னையில் வசிக்கும் இவர், 'ஆன்லைன்' மூலம், மொழிகள் குறித்த வகுப்புகள் நடத்தி வருகிறார். இவரது, 13 வயது மகன், மஹ்மூத் அக்ரம், பல்வேறு உலக மொழிகளில் பேசி, அசத்தி வருகிறான்.
அக்ரமின் மொழி அறிவு திறன் அறிந்து, ஐரோப்பியா நாடான, ஆஸ்திரியாவின், வியன்னாவில் உள்ள, சர்வதேச பள்ளியில், படிக்க அழைப்பு வந்துள்ளது. படிப்புக்கான செலவை, பள்ளி நிர்வாகமே ஏற்பதாக தெரிவித்துள்ளது. அதற்கான ஏற்பாடுகளை செய்ய, அவனது பெற்றோர் முயன்று வருகின்றனர்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, ஹீப்ரு, அரபிக், ஸ்பானிஷ், ஜெர்மன், இத்தாலி, பிரெஞ்சு, ஆர்மீனியன், போர்ச்சுகீசு உட்பட, 46 மொழிகளில் சர்வ சாதாரணமாக பேசுகிறான். மேலும், 400 உலக மொழிகளை தட்டச்சு செய்வதுடன், அவற்றை எழுதவும், படிக்கவும் செய்கிறான்.
இவனது திறமையை அறிந்து, 2014ல், பஞ்சாப் மாநிலத்தில் நடந்த, சிறுவர்களுக்கான தனித்திறன் போட்டியில், 'யூனிக் வேர்ல்டு ரிக்கார்டு' அமைப்பு, 'வேர்ல்டு யங்கஸ்ட் மல்டி லாங்வேஜ்' விருதை அளித்து கவுரவித்துள்ளது.
மேலும், அதே ஆண்டு, தென்னாப்பிரிக்காவில் நடந்த போட்டியில், குரானின் முதல் அத்தியாயத்தை, 180 மொழிகளில், ஆறு மணி நேரத்தில் தட்டச்சு செய்து, வெற்றி பெற்றான். இதையடுத்து, 10 ஆண்டுக்கான குடியுரிமையும், அதன் பிறகு, அவனது பெற்றோருக்கு குடியுரிமை வழங்கவும் முன்வந்தது, தென்னாப்பிரிக்க அரசு. 'அவனது திறமையெல்லாம் இந்தியாவுக்கே பயன்பட வேண்டும்...' என்று, அந்த வாய்ப்பை மறுத்து விட்டனர், பெற்றோர்.
கோவை கல்லுாரி ஒன்றில் நடந்த, அப்துல் கலாம் விருது வழங்கும் நிகழ்ச்சியில், மொழி அறிவிற்காக, இவனுக்கு, உலக சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
கடந்த, டிச., 2018ல், ஜெர்மனி நாட்டு அரசு சார்பில், உலக அளவில் தனித்திறன் கொண்ட சிறுவர், சிறுமியருக்கான, 'க்ளைன் கேகன் கோர்ஸ்' என்ற, தனித்திறன் போட்டி நடந்தது. அந்நாட்டு, 'டிவி'யில் நேரடி நிகழ்ச்சியாக நடத்தப்பட்டது.
அதில் கலந்துகொண்ட, அக்ரம்,
36 நாட்டை சேர்ந்த மொழி அறிவு திறன் நிபுணர்களுடன் போட்டியிட்டு, இந்திய மதிப்பில், 25 லட்சம் ரூபாய் வென்றுள்ளான். எதிர்காலத்தில், எந்த நாட்டில், அக்ரம் படிக்க விரும்பினாலும் செலவிடும் வகையில், இந்த பரிசு தொகை, வங்கி சேமிப்பில் போடப்பட்டுள்ளது.
போட்டிக்காக, அக்ரமை தேர்வு செய்வதற்கு முன், ஜெர்மனி, 'டிவி' நிகழ்ச்சியின், தேர்வு குழுவினர், சென்னைக்கு வந்துள்ளனர். அவர்கள், அக்ரமின் மொழி அறிவுக்கான தனித்திறமை உண்மைதானா என்பதை, ஏழு நாட்கள், பல்வேறு கட்டங்களாக சோதித்த பிறகே, கலந்துகொள்ள அனுமதி வழங்கி உள்ளனர்.
இப்படி இவனது, மொழி அறிவு சாதனை, பல்வேறு பரிசு மற்றும் விருதுகளை பெற்று தந்துள்ளது.
இதுவரை, தமிழகம், கேரள மாநிலங்கள் மற்றும் மலேஷியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் உள்ள, 157 அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்காக, 'மோட்டிவேஷன்' வகுப்புகளை நடத்தி அசத்தியிருக்கிறான்.

ஏ. ஜமால் மொய்தீன்

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (6)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
southindian - chennai,இந்தியா
19-ஜூலை-201911:04:10 IST Report Abuse
southindian தம்பிக்கு வாழ்த்துகள் . மேலும் மேலும் வாழ்க்கையில் உயரவேண்டும். தம்பி இதை தமிழ் நாட்டு மக்களுக்கு நன்றாக உரக்க சொல்லுப்பா. சில கருங்காலிகள் மாணவ செல்வங்களை அதை படிக்காதே இதை படிக்காதே என்று தவறுதலாக சொல்லிக்கொடுக்கிறார்கள்
Rate this:
Share this comment
Cancel
RAMALINGAM.K.R - Chennai,இந்தியா
16-ஜூலை-201918:24:02 IST Report Abuse
RAMALINGAM.K.R நிறைய மொழி கற்க விரும்புகிறேன் . தகவல் தேவை .
Rate this:
Share this comment
Cancel
Gopi - Chennai,இந்தியா
16-ஜூலை-201917:25:35 IST Report Abuse
Gopi இவரை யாரு தமிழ தவிர மற்ற மொழிகளை படிக்க சொன்னது. அதுவும் ஹிந்திய வேற படிச்சி தொலைச்சிருக்காரு ஐரோப்பா போயி பானி பூரி விக்கலாமுன்னு நெனப்பா. யாறெங்க பத்து டஜன் கருப்பு பலூனை ரெடிபண்ணுங்க இந்த பையன் விட்டு முன்னாடி நூறு பெற நிக்க வெச்ஹி திராவிட முழக்கம் விடுங்க கூடவே பறை கூட்டு பட்டறை கும்பலை கூப்பிடுங்க அவங்க தான் கூலிங்கிளாஸ் ஜீன்ஸ் பேண்டு போன்ற திராவிட பாரம்பரிய உடைகளை போட்டுக்கிட்டு உயர் ஜாதி அப்பாவி பெண்களை அவர்களின் பெற்றோர்கள் சம்மதமில்லாமல் "minor corruption " செய்து கடத்தி கொண்டுவந்து வக்கீல் வாய்தா சட்டம் என்று சொல்லி குத்தாட்டம் போடுவார்கள். இவ்வளவு நல்ல செயல் செய்த இந்த பிள்ளையின் செய்தில் இந்த நையாண்டி கருத்துபோடுவது அநாகரீகம் என்றாலும் இன்றைய அரசியல் சூழ்நிலையில் மக்கள் இந்த பிள்ளையின் பெற்றோரிடம் பாடம் கற்று போலி திராவிடம் பேசும் கும்பலிடமிருந்து நம் தலைமுறையை பாதுகாக்கவேண்டும். பன்மொழி வித்தகர் என்பது ஒரு நல்ல விஷயம் அதை அழித்து விடாதீர்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X