'ஹாலிவுட்'டில், தென் மாநில நடிகையர்!
-நடிகை ஸ்ருதிஹாசன், விரைவில், 'ஹாலிவுட் வெப் சீரிஸில்' புலனாய்வுத்துறை அதிகாரியாக நடிக்கிறார். இந்நிலையில், அனுஷ்கா நடித்து வரும், சைலன்ஸ் படம், தமிழ், தெலுங்கு மட்டுமின்றி, ஆங்கிலத்திலும் தயாராகி வருகிறது. தெலுங்கு நடிகர் மோகன்பாபுவின் மகன், விஷ்ணு மஞ்சுவுடன் இணைந்து, 'ஹாலிவுட்' படத்தில் நடிக்கிறார், காஜல்அகர்வால். ஆக, ஒரே நேரத்தில், தென் மாநில நடிகையர் மூவர், 'ஹாலிவுட்' சினிமாவில் கால் பதிக்கின்றனர்.
— சினிமா பொன்னையா
அமலாபாலின் தாரக மந்திரம்!
ஆடை படத்தில், நிர்வாணமாக நடித்ததால், அடுத்தபடியாக நடிக்கயிருந்த படத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளார், அமலா பால். 'அந்த சம்பவம், எனக்கு அதிர்ச்சி கொடுத்தபோதும், அதை நினைத்து வருந்தவில்லை. காரணம், தைரியம் இருந்தால், தோல்வி அடைய மாட்டீர்கள் என்பது தான், ஆடை படத்தின் கதை. அதனால், அதையே என் வாழ்க்கையின் தாரக மந்திரமாக எடுத்து, தைரியமாக போராடி, சினிமாவில் தொடர்ந்து வெற்றி பெறுவேன்...' என்கிறார். பட்டவர்கள் பதத்தில் இருப்பர்!
- எலீசா
விமானம் ஓட்டும், 'மாஜி' நடிகை, மாதவி!
கடந்த, 1980களில் முன்னணி நடிகையாக இருந்தவர், மாதவி. ரஜினியுடன், தில்லுமுல்லு, கமலுடன், காக்கி சட்டை போன்ற படங்களில் நடித்தவர். திருமணத்திற்கு பின், அமெரிக்க குடிமகளாகி விட்டார். மாதவியின் கணவர், சமீபத்தில், ஒரு விமானம் வாங்கியுள்ளார். இதையடுத்து, 'விமானத்தை, நானே ஓட்டுவேன்...' என்று, பயிற்சி எடுத்து, 'லைசென்சும்' வாங்கியுள்ளார், மாதவி. இந்திய நடிகைகளில், விமானம் ஓட்ட, 'லைசென்ஸ்' வைத்துள்ள ஒரே நடிகை, இவர் தான்.
- எலீசா
சிம்புவிடம், 'ஆட்டோகிராப்' வாங்கிய நடிகர்!
நடிகர் சிம்பு, இப்போது வரை, அஜீத்தின் ரசிகராக இருந்து வருகிறார். இந்நிலையில், சிம்புவுடன், முப்தி என்ற கன்னட படத்தின், தமிழ், 'ரீ -- மேக்'கில் இணைந்துள்ள, கவுதம் கார்த்திக், அவரின் வெறித்தனமான ரசிகர். அதனால், இந்த படத்தில் நடிக்க சென்ற முதல் நாளிலேயே, சிம்புவிடம், 'ஆட்டோகிராப்' வாங்கி, அதை, தன் இணைய பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
— சினிமா பொன்னையா
வெற்றியின் ரகசியம்!
சினிமாவில் நடிகர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என, பன்முகம் காட்டி வருகிறார், சிவகார்த்திகேயன். 'இன்னும் எனக்கு, சினிமா பற்றி தெரியாது. அதேசமயம், நான் பெற்ற அனுபவங்கள் தான், என்னை வழி நடத்தி செல்கின்றன. மேலும், என்னைப் பற்றி, பலவிதமான விமர்சனங்கள் வந்தாலும், அதில், நல்ல விஷயங்களை மட்டுமே எடுத்துக் கொள்வேன். தவறான விஷயங்களை, அப்போதே மறந்து விடுவேன். இது தான், சினிமாவில் என்னை வெற்றி பெறச் செய்கிறது...' என்கிறார்.
— சினிமா பொன்னையா
கறுப்புப்பூனை!
திருமணத்திற்கு பிறகும், துகிலுரிந்து நிற்கும், பாணா காத்தாடி நடிகைக்கு, புகுந்த வீட்டில் திடீர் எதிர்ப்பு எழுந்துள்ளதாம். அதனால், சமீப காலமாக, படுகவர்ச்சியான, 'ஆல்பங்'களை வெளியிட்டு வந்த நடிகை, இப்போது, 'கிளாமர்' நடிப்புக்கு தடை போட்டிருப்பதோடு, இப்படி இப்படி தான் நடிப்பேன் என்று, 10 நிபந்தனைகளையும் முன் வைக்கிறார். அம்மணியின் இந்த நிபந்தனைகளை படித்து விட்டு, பின்னாங்கால் பிடறியில் அடிக்க ஓட்டம் பிடிக்கின்றனர், இயக்குனர்கள். காரணம், 'டூயட் பாடல்களில், 'ஹீரோக்'களின் விரல் நுனி கூட, என்னை, 'டச்' பண்ணக் கூடாது...' என்கிறாராம், நடிகை.
'நம் செக் ஷன், கடைசி சீட்ல உட்கார்ந்திருப்பாளே, சமந்தாவை உனக்கு தெரியும் தானே... முன்னெல்லாம் எந்த வேலை சொன்னாலும், மறுப்பு சொல்லாம, செய்து முடிப்பா... இப்பல்லாம் வேலை செய்ய சொன்னா, 'இதெல்லாம் என் வேலை இல்லை. என்னை கட்டாயப்படுத்தினா, மேலதிகாரிகிட்ட சொல்லிடுவேன்...'னு மிரட்டுறாப்பா...' என்றாள், தோழி.
சினி துளிகள்!
* தடாக் தடாக் என்ற இந்தி படத்தில் அறிமுகமான, ஸ்ரீதேவியின் மகள், ஜான்வி கபூருக்கு, மும்பையில் நடந்த விழாவில், 'ரைஸிங் ஸ்டார் ஆப் த இயர்' என்ற விருது வழங்கப்பட்டுள்ளது.
* தமிழில், த்ரிஷா நடித்த, 96 என்ற படத்தின், தெலுங்கு, 'ரீ - மேக்'கில், அவரது வேடத்தில் நடிக்கிறார், சமந்தா.
* விஷ்ணு விஷால் - விக்ராந்த் இணைந்து நடிக்கும் படத்திற்கு, நடிகர் விஜயசேதுபதி, கதை, வசனம் எழுதுகிறார்.
அவ்ளோதான்!