மஞ்சள் நிற கோடு! | வாரமலர் | Varamalar | tamil weekly supplements
மஞ்சள் நிற கோடு!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

14 ஜூலை
2019
00:00

தென் அமெரிக்காவில் உள்ள ஈக்வடார் நாட்டில், ஒரு மஞ்சள் கோட்டில் நிற்க ஏராளமான சுற்றுலா பயணியர் வருகின்றனர். அப்படி என்ன சிறப்பு என்றால், அது தான் பூமியின் மையப்பகுதி - நில நடுக்கோடு.
துல்லியமாக, கோணம் அடிப் படையில் கூற வேண்டுமானால், 0 டிகிரி அட்ச ரேகை, 0 டிகிரி நிமிடம், 0 டிகிரி வினாடி. இதில் நின்று, காலை ஒரு பக்கம் வைத்தால், உலகின் மையத்திலிருந்து தென் பகுதி துவங்குகிறது. மறுபக்கம் வைத்தால், வடபகுதி துவங்குகிறது.
ஆக, அந்த கோட்டில் நின்று, சிலர் விளையாட்டாக, 'பேலன்ஸ்' செய்வதுண்டு. மேலும் சிலர், ஒரு முட்டையை நிற்க வைத்து கண்காணிப்பதும் உண்டு.
இந்த மஞ்சள் கோட்டில் சென்று, 'செல்பி'யும் எடுத்துக் கொள்கின்றனர். அங்கிருந்து கொஞ்ச துாரம் நடந்தால், நினைவுச்சின்னம் மற்றும் அருங்காட்சியகம் உள்ளது.
இந்த கோடு தவறு என்கிறது, ஒரு ஆய்வுக்குழு. மஞ்சள் கோட்டிலிருந்து வடக்கே, 240 மீட்டர் தள்ளி தான், நிஜமான மையக்கோடு உள்ளதாக, அக்குழு கூறுகிறது.
ஆனால், ஈக்வடார் நாடும், சுற்றுலா பயணியரும் அதை லட்சியம் செய்யவில்லை!
ஜோல்னாபையன்.

Advertisement

 



We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X