வெங்கியை கேளுங்க!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஜூலை
2019
00:00

மாணவர்களின் கேள்விக்கு பதில் அளிக்கிறா த.வி. வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானி

பசு சாணத்தின் மீது மின்னல் விழுந்தால் தங்கமாக மாறும் என்று கூறப்படுவது உண்மையா?
த. சூரியகுமார், 10ஆம் வகுப்பு, அரசு நடுநிலைப் பள்ளி, ஏரிக்கரை, சென்னை.

தங்கம் என்பது ஒரு தனிமம். அதன் கருவில் 79 புரோட்டான்கள் மற்றும் 118 நியூட்ரான்கள் உள்ளன. பசு சாணம் என்பது செரிக்கப்பட்ட இலை, தழைகளின் கலவை. அதில் பெருமளவு கரிமப்பொருள் (கார்பன்) உள்ளது. கார்பனின் கருவில் 6 புரோட்டான்கள் மற்றும் 6 நியூட்ரான்கள் மட்டுமே உள்ளன. இந்த அணு தங்கமாக மாற கூடுதலாக 73 புரோட்டான், 112 நியூட்ரான்கள் தேவை.
மின்னல் என்பது மின்சாரம்தானே தவிர, மின்னல் அதில் புரோட்டான்கள், நியூட்ரான்கள் இல்லை. எனவே, இடி, மின்னல் வழி தங்கத்தைப் பெறமுடியாது என்பதை அறிவியல் வழியில் மட்டுமே புரிந்துகொள்ள முடியும். அறிவியல் அறியாமை கொண்டவர்களே, இயற்கையுடன் அறிவியலை இணைத்துத் தவறான செய்திகளைப் பரப்புகிறார்கள்.

இணை பிரபஞ்சம் (Parallel universe) இருக்கிறதா?
ஆகாஷ், மின்னஞ்சல்.

இது ஓர் ஊகக் கருத்து மட்டுமே; முடிவான அறிவியல் கோட்பாடு இல்லை. உதாரணமாக, கேரம் விளையாட்டில் காயைச் சுண்டிவிடும்போது அது செல்லும் திசை, பலகையின் விளிம்பில் பட்டுத் தெறிக்கும் கோணம், மொத்தம் எவ்வளவு தொலைவு செல்லும் என்பதெல்லாம் உறுதிநிலை (Deterministic) வினை. நடைமுறையில் முன்கூட்டியே துல்லியமாகக் கணித்தல் எளிதல்ல என்றாலும், கோட்பாட்டு ரீதியில் அந்தக் காயின் நகர்வு அந்தப் பலகையின் தன்மை, அடித்த திசைக்கோணம், வேகம், காயின் நிறை முதலியன சார்ந்து மட்டுமே அமையும்.
இயற்கை கதிரியக்கப் பொருளை எடுத்துக் கொள்வோம். இரண்டு அணுக்கள் கொண்ட அந்தப் பொருளின் அரைவாழ்நாள் (Half-life) ஓராண்டு எனவும் கொள்வோம். ஓராண்டுக்குப் பின்னர், முதலில் இருந்த இரண்டு கதிரியக்க அணுவில் ஒன்றுதான் இருக்கும். ஆனால் இரண்டில் எந்த அணுவில் கதிரியக்கச் சிதைவு ஏற்பட்டு இருக்கும், எது ஓராண்டு கடந்த பின்னரும் அப்படியே இருக்கும் என்பதைக் கோட்பாட்டு ரீதியாகக் கண்டுபிடிக்கவே முடியாது. இத்தகைய இயற்கை வினைகளை மீநிகழ்தகவு (Stochastic) வினை என்கிறோம்.
இயற்பியல் கருத்துகளில் ஒன்றுதான் இணை பிரபஞ்சம் (Parallel universe) என்கிற கோட்பாடு. இதன்படி, ஒரு பிரபஞ்சத்தில் இந்த அணு சிதைந்துபோக, மற்றொரு இணை பிரபஞ்சத்தில் இன்னோர் அணு சிதைந்து போகிறது. இவ்வாறு ஒவ்வொரு மீநிகழ்தகவுக்கு ஏற்ப ஒவ்வொரு கணமும் பல்வேறு பிரபஞ்சங்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றன. இந்தக் கோட்பாடு மெய்தானா என்பதற்கு இதுவரை எந்த ஆதாரமும் இல்லை.

வறண்டுபோன குளத்துக்கு தண்ணீர் வரும்போது தவளை, மீன் போன்ற உயிரினங்கள் எங்கிருந்து வருகின்றன?
கே.ரம்யா, 9ஆம் வகுப்பு, வேலம்மாள் வித்யாலயா, சென்னை.

ஒரு பாத்திரத்தில் நீரை எடுத்து பத்து நிமிடங்கள் கொதிக்கவைத்து பிறகு, மூடி வைத்து ஆறவிடவும். இரண்டு கண்ணாடி பாட்டில்களையும் நீரில் கொதிக்க விடவும். கொதித்த நீரிலும், கண்ணாடி பாட்டிலிலும் இப்போது எந்த நுண்ணுயிரியும் இருக்காது.
இரண்டு பாட்டில்களிலும் நீரை நிரப்பி, ஒரு பாட்டிலைக் காற்றுப் புகாதபடியும் மற்றொன்றை காற்றுப் புகும்படியும் வைக்கவும். ஒரு வாரம் கழித்துப் பார்த்தால், மூடிய பாட்டிலில் எந்த உயிரியும் இருக்காது. திறந்து வைத்துள்ள பாட்டிலில் பாசி உட்பட பல்வேறு உயிரிகளைப் பார்க்கலாம். மிக நுண்ணிய தாவர விதைகள் காற்றால் அடித்துச் செல்லப்பட்டு பரவும். அதே போல பூஞ்சை, பாக்டீரியா உள்ளிட்ட நுண்ணுயிரிகள் போன்றவையும் காற்றில் இருக்கும். இதன் காரணமாகவே திறந்த பாட்டிலில் உயிரிகள் காணப்படுகின்றன. இது போலவே, வறண்ட ஏரி, குளம் போன்றவற்றில் மழைக்குப் பின்னர் நீர் வந்ததும் காற்றில் மிதக்கும் நுண்ணுயிர்கள், விதைகள், கருக்கூடுகள் சேர்ந்து உயிர்மயம் ஆகிறது. காலப்போக்கில் தவளை, மீன் போன்ற உயிர்களும் குளத்திற்கு வருகின்றன.

பிளாஸ்டிக் இல்லாத உலகம் எப்படி இருக்கும்?
வி.ஆனந்த், 10ஆம் வகுப்பு, அரசு மேல்நிலைப் பள்ளி, கோவை.

நாம் ஏற்படுத்தும் கழிவில் சுமார் 10 சதவீதம் பிளாஸ்டிக்தான். அதேபோல, கடலின் அடியில் குவிந்து கிடக்கும் கழிவுகளில் சுமார் 90 சதவீதம் பிளாஸ்டிக் தான் என்கிறார்கள். தற்போதுள்ள பிளாஸ்டிக் கழிவுகளை எல்லாம் ஒரே இடத்தில் குவித்தால், அதன் உயரம் எவரஸ்ட் சிகரத்தைவிட உயரமாக இருக்கும். இதே சதவீதத்தில் பிளாஸ்டிக் குப்பைகள் பெருகினால், 2050இல் கடலில் உள்ள மீன்களின் எடை அளவில் பிளாஸ்டிக் குப்பைகள் பூமியில் சேர்ந்துவிடும் அபாயம் உண்டு.
தினசரி நாம் பயன்படுத்தும் மின்னணுப் பொருட்கள், செயற்கை உறுப்புகள், நீர்க்கசிவு மற்றும் வெப்பத்தடுப்பு ஆடைகள், குழாய்கள், மேஜை, நாற்காலி ஆகிய பல்வேறு பொருட்கள் பிளாஸ்டிக்கினால் ஆனவை. 'பிளாஸ்டிக் இல்லாத உலகம் எப்படி இருக்கும்' என்பதைக் கற்பனை செய்து பார்ப்பது எளிதல்ல. ஆனால், அது எவ்வளவு தூரம் நடைமுறை சாத்தியம் என யோசித்து மாற்று ஏற்பாடுகளைக் கூறுவதும் எளிதல்ல. மனித இனம் விடைகாண வேண்டிய ஒரு முக்கியமான சிக்கலாக தற்போது பிளாஸ்டிக் மாறி இருக்கிறது.

Advertisement

 

மேலும் பட்டம் செய்திகள்:



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X