பாம்புகளின் காவலர்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஜூலை
2019
00:00

பெங்களூருவில் உள்ள, வேளாண் அறிவியல் பல்கலைக்கழகத்தில் சரவணன் பணியாற்றி வந்தார். பல்கலைக்கழக வளாகத்தில் ஏராளமான பாம்புகளைக் கண்டார். அதை அங்கிருக்கும் காவலாளிகள் பயத்துடன் அடித்துக் கொல்வதைக் கண்டு மனமுடைந்தார். இதற்கான மாற்று வழிகளை யோசித்தவர், பாம்புகளைக் கொல்லவிடாமல் தடுத்து, அவற்றைக் கைப்பற்றி பாதுகாத்து வனத்துறையிடம் ஒப்படைக்கத் தொடங்கினார்.
பாம்புகள் மீது மிகுந்த அக்கறை கொண்ட சரவணன், 2000ஆம் ஆண்டு முதல் பாம்புகளின் இரட்சகரானார். இதுவரை 1000க்கும் அதிகமான பாம்புகளை பத்திரமாக மீட்டு, வனத்துறையினரிடம் ஒப்படைத்துள்ளார்.
மக்கள் பாம்புகள் பற்றிய விழிப்புணர்வு இன்றியும், அறியாமையாலும்தான் பாம்புகளைக் கொல்கின்றனர் என்பதை உணர்ந்தார். எனவே, பாம்புக்கடி, விஷமற்ற/விஷமுள்ள பாம்புகளைக் கண்டறிதல் போன்றவற்றை விளக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தத் தொடங்கினார்.
கல்லூரி/பள்ளி மாணவர்களுக்குப் பாம்புகள் பற்றிய விழிப்புணர்வுப் பாடங்களை எடுத்து வருகிறார்.

கையாளும் முறை
பாம்பு பிடிக்கும் நபர்கள் பலருக்கும், அதனை முறையாகக் கையாளத் தெரிவதில்லை. இதன் விளைவாக, நச்சுப் பாம்புகளால் கடிபட்டு, பலர் இறக்க நேரிட்டது. கால்நடை மருத்துவரான சரவணன், பாதுகாப்பான/முறையான பாம்பு பிடிக்கும் முறையைக் கையாண்டு பாம்புகளைக் கைப்பற்றி, வனத்துறையினரிடம் ஒப்படைத்து வருகிறார். இதுவரை 20க்கும் மேற்பட்ட இனங்களைச் சேர்ந்த பாம்புகளைக் காப்பாற்றியுள்ளார். பாம்புகள் பிடிப்பதை சேவையாகச் செய்து வருகிறார்.
மனிதர்களின் வாழிடங்களில் புகும் பாம்புகள் பிடிப்பதைப் பொழுதுபோக்காகச் செய்து வருகிறார். மக்களுக்கு பாம்புகளின் வித்தியாசத்தையும், விவசாய முன்னேற்றத்தில் அவற்றின் முக்கியத்துவத்தையும் உணர்த்தி வருகிறார்.

முதலுதவி
கடிபட்ட நபருக்கான முதலுதவிச் சிகிச்சை பற்றி இலவசப் பயிற்சிப் பட்டறைகளையும் நடத்தி வருகிறார். சேவை மனப்பாங்கோடு செயற்பட்டுவரும் இவருடைய பணி போற்றுதலுக்குரியது.
இப்பணியில் தன்னார்வலர்கள் பலர் இணையும்போது, அதிக எண்ணிக்கையிலான பாம்புகளைக் காப்பாற்ற முடியும்.

- முனைவர் ந.ச.மனோஜ்
நிறுவனர் ஆராய்ச்சியாளர்,
உலகளாவிய பாம்புக்கடி கல்வி மற்றும் ஆராய்ச்சி அமைப்பு, கிருஷ்ணகிரி.

Advertisement

 

மேலும் பட்டம் செய்திகள்:



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X