''மூடுவதற்கு நான் வருகிறேன்!''
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஜூலை
2019
00:00

அர்ப்பணிப்பு
அம்மா காலையில் திட்டியது மனத்துக்குள்ளேயே வட்டமடித்துக்கொண்டு இருந்தது. எங்கள் வீட்டில் ஒரு பழக்கம் உண்டு. காலையில் எழுந்தவுடன் அவரவர் படுக்கையை, அவரவர்களே மடித்துவைக்க வேண்டும். உள்ளாடைகளைத் நாங்களே துவைத்து உலர்த்த வேண்டும். பள்ளிக்கு எடுத்துச்செல்லும் பாட்டிலில் நாங்களே தண்ணீர் பிடித்து வைத்துக்கொள்ள வேண்டும். முக்கியமாக, மாலை பள்ளியில் இருந்து வீடு திரும்பியவுடன், சாப்பாட்டு டப்பாவை, அதைக் கழுவுவதற்கான 'ஸிங்'கில் போட்டுவிட வேண்டும்.
பல சமயங்களில் இதையெல்லாம் தொடர்ச்சியாகச் செய்ய முடிந்ததில்லை. ஒருவித சோம்பல். இவற்றை நான் செய்கிறேனா என்று அம்மா பார்த்துக்கொண்டே இருப்பார். இன்று மீண்டும் வசமாக மாட்டிக்கொண்டேன். சாப்பாட்டு டப்பாவைக் கழுவப் போடவில்லை. “எதைச் செஞ்சாலும் ஒரு கமிட்மென்ட் இருக்கணும், டெடிகேஷன் இருக்கணும். தன்னால இயற்கையா வரணும்...” இன்னும் வந்துவிழுந்த அம்மாவின் திட்டுகள் வலிக்கத் தொடங்கின.
நான் 'உம்'மென்று இருப்பதைப் பார்த்து, உமா மிஸ் விவரத்தைக் கேட்டார். சொன்னேன்.
“இதுல எனக்கு என்ன டெடிகேஷன் இல்லாம போச்சு. என்னை மாதிரி ஒவ்வொரு விஷயத்தையும் யாராலும் டெடிகேடட்டா செய்ய முடியுமா?” ஒருமாதிரி குரல் கம்மிப் போனது எனக்கே தெரிந்தது. உமா மிஸ் உடனே பேசவில்லை. சற்றுநேரம் கழித்து,
“நான் ஏற்கெனவே அசோகமித்திரன் பத்தி சொல்லியிருக்கேன். அவர் 20 ஆண்டுகள் தொடர்ச்சியாக எழுதியதைப் பத்தி சொன்னேன் இல்லையா?”
“ஆமா மிஸ்.”
“அவரை அது மாதிரி செய்யவெச்சது என்ன?”
“...............”
“டெடிகேஷன்னு சொல்லப்படற அர்ப்பணிப்புதான் கதிர். அவர் மட்டுமல்ல; பேராசிரியர் ஜெகதீசனைப் பத்தித் தெரியுமா?”
“அவர் யார் மிஸ்?”
“தொழுநோய், இன்னிக்கு பெரும்பாலும் உலகத்துல இல்ல. ஆனால், 1920களிலேயும் 1930களிலேயும் அது மிகப்பெரிய பிரச்னை. 1960 வரைகூட அந்த நிலைமை இருந்தது. அதை
முற்றிலும் ஒழிக்கணும்னு உழைச்ச மாபெரும் மனுஷன் தான்
டி.என். ஜெகதீசன். விழுப்புரத்துக்கு பக்கத்துல 32 கிலோமீட்டர் தூரத்தில் மழவந்தாங்கல்னு ஓர் ஊர் இருக்கு. அங்கேதான் கஸ்தூர்பா தொழுநோய் நிவாரண நிலையம் இருக்கு. இந்தியா முழுசும் இருக்கும் 33 கஸ்தூர்பா மையங்களில் இதுவும் ஒன்று.
இந்த மையத்தையும், இடத்தையும், இவ்வளவு வசதிகளையும் தன்னலமே இல்லாமல் உருவாக்கியவர்தான் பேரா. ஜெகதீசன்.
அவர் ஒரு சுயசரிதை எழுதியிருக்கார். Fulfilment Through Leprosyன்னு அதுக்குப் பேர். அதைப் படிக்கப் படிக்க, வாழ்க்கையின் மேல் இன்னும் பிடிப்பு ஏற்படும். சிதம்பரத்தில் எளிய அந்தணர் குடும்பத்தில் பிறந்தவர் ஜெகதீசன். பின்னர் படித்துப் பட்டம் வாங்கி, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பல ஆண்டுகள் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றினார். சின்ன வயசிலேயே அவருக்குத் தொழுநோய் பாதித்துவிட்டது.
ஆசிரியப் பணிக்குப் பின், அதை விட்டு விலகி, தன் தொழுநோயைக் குணப்படுத்திக் கொள்வதற்கு பல்வேறு சிகிச்சைகளுக்குப் போனார் ஜெகதீசன்.
இன்றைக்கு இருப்பது போல், தொழுநோய்க்கான மருந்துகளோ, வசதிகளோ 40களிலும் 50களிலும் இல்லை. மேலும் தொழுநோயைப் பற்றிய தப்பான சிந்தனைகளே அப்போது அதிகம். அதைப் 'பெருவியாதி'ன்னே சொல்வாங்க. பல இடங்களில், வாசல்களில், 'பெருவியாதியஸ்தர்கள் உள்ளே வரக்கூடாது' என்றே பலகை எழுதிப் போட்டிருப்பாங்க.
தன் நோயைக் குணப்படுத்திக் கொள்வதற்கு மட்டுமல்லாமல், இந்த நோய் உள்ள அனைவரையும் குணப்படுத்த வேண்டும் என்ற நோக்கம் அவருக்கு. அதனால, பல வெளிநாட்டு அமைப்புகளோடும் மருத்துவர்களோடும் ஜெகதீசன் சேர்ந்து பணியாற்றினார்.
1945, பிப்ரவரி 8ஆம் நாள், ஜெகதீசன், வார்தா போய் மகாத்மா காந்தியைச் சந்திச்சார். தமிழ்நாட்டில் தொழுநோய் நிவாரண மையம் ஒன்றைத் தொடங்கவேண்டும் என்று ஆர்வம் காட்டுவதை அறிந்து காந்திக்கு ரொம்ப மகிழ்ச்சி. அதற்குத் தன் முழு ஆதரவையும் தந்து வழிகாட்டியும் அனுப்பினார்.
அந்தக் காலத்தில் தமிழகத்தில் தொழுநோய் அதிகம் பரவியிருந்த இடமாக இருந்தது பழைய தென்னாற்காடு மாவட்டம். அதனால் அங்கேதான் தன் பணியைத் தொடங்க வேண்டும் என்று முடிவு செய்துகொண்டார். மழவந்தாங்கலைத் தேர்வு செய்து, அங்கே இருந்த ஒரு பழைய அரசு பங்களாவைப் புதுப்பித்து, மருத்துவமனையாக மாற்றினார்.
இதெல்லாம் நடக்கும்போதே, காந்தியின் அன்புக் கட்டளைக்கு இணங்க, ஜெகதீசன், 'ஹரிஜன்' இதழில், தொழுநோய் பற்றித் தொடர்ந்து கட்டுரைகள் எழுதினார். கட்டட வேலைகள் முடிந்து, 1946, பிப்ரவரி 6ஆம் தேதி, இந்த நிவாரண நிலையம் தொடங்கப்பட்டது. அதைத் திறந்துவைக்க, ஜெகதீசன், மகாத்மா காந்தியை அழைத்தார். காந்தி போட்ட பதில்தான் இதில் இன்னும் சுவாரசியமானது:
'யாரையாவது வைத்து அதைத் திறந்துகொள்; மருத்துவமனையைத் திறப்பது பெரிய விஷயமல்ல, அதை மூடுவதற்கு நான் வருகிறேன்' (Get someone to open it; opening a hospital is not a big matter, but I shall come to close it) என்று பதில் எழுதினார் காந்தி. தொழுநோயே இல்லாமல், மருத்துவமனைக்குத் தேவையே இல்லாமல் போகவேண்டும் என்பதுதான் மகாத்மாவின் ஒரே நோக்கம்.
வாழ்நாள் முழுவதும் தொழுநோய், அதன் சிகிச்சை முறைகள், மேம்பாடுகள், சுகாதாரமான வாழ்வு என்று தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டு வாழ்ந்தவர் ஜெகதீசன். அவரோடு அவரது மனைவியும் இந்தத் தொண்டில் முழு மனசோடு பங்கெடுத்துக்கொண்டார்.
1991இல் பேரா. ஜெகதீசன் மறைந்தார். அவரது உடல் இதே மழவந்தாங்கலில் அடக்கம் செய்யப்பட்டு, அதன் மேல் நினைவு வளாகம் எழுப்பப்பட்டிருக்கு.
இன்றைக்கும் அவரோடு பழகியவர்கள் மழவந்தாங்கலில் இருக்கிறார்கள். ஆஜானுபாகுவான தோற்றம், உயரம், அதோடு அத்தனை பேர் தோளிலும் கைபோட்டுக்கொண்டு மிகவும் சகஜமாகப் பழகும் சுபாவம் என்று கதை கதையாகச் சொல்கிறார்கள் மழவந்தாங்கல்வாசிகள்.
இதுதான் உண்மையான அர்ப்பணிப்பு. இன்னிக்கு தொழுநோயே இல்லாமல் போயிருக்குன்னா, அதுக்கு மருந்துகள் மட்டும் காரணமல்ல, இதுபோன்ற தன்னலமற்ற மனிதர்களோட அர்ப்பணிப்பும்தான் காரணம்.”
நான் பேச்சற்றுப் போனேன்.

பேரா. டி.என். ஜெகதீசன்
2.10.1909 - 28.06.1991

அர்ப்பணிப்புக்கு கிடைத்த அங்கீகாரங்கள்!
1957 - பத்மஸ்ரீ விருது
1967 - போப் ஆறாம் பாலிடம் இருந்து வெள்ளிப் பதக்கம்
1988 - சர்வதேச காந்தி விருது

Advertisement

 

மேலும் பட்டம் செய்திகள்:வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X