நுண்பொருள் சிந்தனையாளராக இருங்கள்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஜூலை
2019
00:00

ஓவிய ஆசிரியர் வகுப்பில் மாணவர்களுக்குப் படம் வரைவதற்காக 'மரம்' என்ற தலைப்பைக் கொடுத்தார். இதைக் கேட்டதும் மாணவர்கள் மரங்களை வரையத் தொடங்கினார்கள்.
சிறிது நேரத்துக்குப்பிறகு, ஆசிரியர் 'இரவு' என்று தலைப்பைத் தந்தார். மாணவர்கள் இரவை வரையத் தொடங்கினார்கள்.
கொஞ்சம் பொறுங்கள், இரவை எப்படி வரைவது?
நிலவை வரையலாம், சாலை விளக்குகளை வரையலாம். அந்த விளக்குகளுக்கடியில் அமர்ந்து ஒருவர் புத்தகம் படிப்பதுபோல் வரையலாம். இவை அனைத்தும் சேர்ந்து இரவை உணர்த்துகின்றன.
ஆனால், நிலவோ, விளக்கோ இரவு இல்லை. இவற்றையெல்லாம் வைத்து அது இரவு என்று நாம் புரிந்துகொள்கிறோம்.
மரத்தில் இந்தக் குழப்பமே கிடையாது. நேரடியாக மரத்தை வரைந்துவிடலாம். ஆனால், இரவை வரைவதற்கு வேறு பொருட்களின் துணை தேவைப்படுகிறது.
ஏனெனில், மரம் என்பது பருப்பொருள் (Concrete Object). கண்ணால் காணக் கூடியது, தொட்டு உணரக்கூடியதே பருப்பொருள்.
ஆனால், இரவு என்பது பொருள் இல்லை. அதை பார்க்கவும், தொடவும் இயலாது. உணரவேண்டிய நுண்பொருள் (Abstract Object).
மாணவர்கள் வரைந்த நிலவு, விளக்கு போன்றவை பருப்பொருட்கள். அவற்றின் துணையோடு நுண்பொருளாகிய இரவை உணர்த்துகிறார்கள்.
இதேபோல், ஒருவர் விரிந்த கைகளோடும், சிரிப்போடும் துள்ளிக்குதிப்பதுபோல் ஓவியம் வரைந்தால், 'மகிழ்ச்சி' என்ற நுண்பொருளை உணரலாம். அதே மனிதர் சோர்ந்த கண்களோடு துவண்டு நடப்பதுபோல் இருந்தால், 'நம்பிக்கையின்மை' என்ற நுண்பொருளை உணரலாம்.
நம்மைச் சுற்றிப் பல பருப்பொருட்கள் இருக்கின்றன. அவற்றின் துணையோடு நாம் நுண்பொருட்களை உணர்கிறோம்.
நுண்பொருளை 11 - 16ஆம் வயதில் இருந்து குழந்தைகள் புரிந்துகொள்ளத் தொடங்குகிறார்கள்.
'எறும்பும் வெட்டுக்கிளியும்' என்ற கதையைக் கேட்டிருப்பீர்கள்.
பருப்பொருள் சிந்தனை மட்டும் கொண்ட ஒரு குழந்தை, அந்தக் கதையில் எறும்பையும் வெட்டுக் கிளியையும் தானியத்தையும் குளிர்காலத்தையும் (அதாவது, பருப்பொருட்களை மட்டும்தான்) பார்க்கும். ஆனால், நுண்பொருள் சிந்தனைகொண்ட வளர்ந்த குழந்தை, உழைப்பு, சேமிப்பின் முக்கியத்துவத்தையும் பார்க்கும். உழைக்கவேண்டிய நேரத்தில் சும்மா அமர்ந்திருக்கக்கூடாது என்ற நுண்பொருளைப் புரிந்துகொள்ளும்.
அதனால், நீங்கள் கேட்கிற, படிக்கிற, பார்க்கிற அனைத்தையும் பருப்பொருளாக மட்டும் காணாமல், அவற்றிலுள்ள நுண்பொருட்களையும் சிந்திக்கிற திறனையும் வளர்த்துக் கொள்ளுங்கள். அது உங்களைச் சிறந்த மனிதர்களாக்கும்.
- என். சொக்கன்

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X