சொக்கநாதர் வேண்டிய சீரகம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஜூலை
2019
00:00

வெங்காயம் சுக்கானால் வெந்தயத்தால் ஆவதென்ன?
இங்கார் சுமந்திருப்பார் இச்சரக்கை? மங்காத
சீரகத்தைத் தந்தீரேல் வேண்டேன் பெருங்காயம்
ஏரகத்து செட்டியாரே!

சொக்கநாதப் புலவர் பாடிய சிலேடைப்பாடல் இது. மேலோட்டமாகப் பார்த்தால் ஒரு பொருளும், ஆழ்ந்து நோக்கினால் மற்றொரு பொருளும் தரக்கூடியது.
இந்தப் பாடலின் ஒரு பொருளைப் பார்ப்போம். 'வெங்காயக் குழம்பு வைக்க, வெந்தயமும் பெருங்காயமும் வாங்கினேன். ஆனால், அதை வைக்க மறந்து விட்டேன். வாங்கி வந்த வெங்காயம் சுருங்கி சுக்குபோல் ஆகிவிட்டது. வெறும் வெந்தயத்தை வைத்து நான் என்ன செய்வது? இப்போது வெங்காயம், வெந்தயம், பெருங்காயம் எதுவும் வேண்டாம். சீரகம் கொடுங்கள் செட்டியாரே' (கடை வைத்திருக்கும் வணிகர்) என்று கேட்பதாக உள்ளது.
மற்றொரு பொருளைப் பார்ப்போம்
நம் உடம்புக்கு 'காயம்' என்றொரு பொருள் உண்டு. உடலில் வெப்பமும் (வெம்மை) உண்டு. ஆகையால், அது வெங் 'காயம்'. பல உறுப்புகளைக் கொண்ட பெருங்காயமும் (பெரிய) உடம்புதான். வெறும் உடம்புக்கு மதிப்பில்லை. உயிர் இருந்தால்தான் மதிப்பு. வெந்த அயமாகிய (வெந்தயம்) பிணத்தின் வாயில், உறுதிமிக்க இரும்பு (அயம்) போன்ற ஒரு பஸ்பத்தையே (மருந்து) கொடுத்தாலும், உயிர் வராது. ஆகையால் மோட்சம் தரும் நிலையை (சீரகம்) முருகன் அருளினால் வேண்டேன் இன்னொரு பிறவி (பெருங்காயம்). செட்டியார் என்பது சுவாமிமலை முருகனைக் குறிக்கும்.
பாடலில் தான், எத்தனை நுட்பமும், பொருளும் அடங்கி இருக்கிறது!

Advertisement

 

மேலும் பட்டம் செய்திகள்:



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X