சந்திரயான் -2 இந்தியாவின் தனிப்பெரும் சாதனை!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஜூலை
2019
00:00

இந்தக் கட்டுரையை நீங்கள் படிக்கும்போது, சந்திரயான் 2 இன்று அதிகாலை 2:51 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டு இருக்கும். சந்திரயான் 1க்கு இருந்த அதே ஆர்வம், இந்தப் புதிய திட்டத்திற்கும் இருக்கிறது. இஸ்ரோ தலைவர் சிவன் தலைமையில் செயற்பட்டுவரும், சந்திரயான் 2 குழுவினர் மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளன.
சந்திரயான் , பிற நாடுகளின் உதவியின்றி, தொழில்நுட்பங்களை உருவாக்கி விண்ணில் ஏவப்பட்டது. இது குறித்து, இந்திய விண்வெளித்துறை முதனிலை விஞ்ஞானி நெல்லை சு.முத்து, சில சுவாரசியத் தகவல்களைப் பகிர்ந்தார்.

சந்திரயான் 2 செய்யப்போவது என்ன?
சந்திரயான் -2 திட்டத்தில், சந்திரனின் தரையில் இறங்கும் நிலா ஊர்தி, பதினான்கு நாட்கள், நிலாவின் தரையில் மெல்ல ஊர்ந்து ஆய்வுசெய்யும். நில அமைப்பியல், நிலநடுக்கவியல், கனிமவளத் தேடல், மேற்பரப்பின் வேதிச்சேர்மானங்கள், மண்ணின் வெப்ப இயற்பியல் குணங்கள், வளிமண்டலம் போன்ற பல்வேறு ஆய்வுகளில் ஈடுபடும். நிலாவில் சென்று தரை இறங்கும் உலகின் நான்காம் நாடு, இந்தியா என்ற பெருமையை சந்திரயான் 2 பெற்றுத்தரும். இதற்குமுன் ரஷ்யா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகள் இந்த முயற்சியில் வெற்றிகண்டு உள்ளன. மேலும், நிலாவின் தென்துருவத்தில் இறங்கும் உலகின் முதல் நாடும் இந்தியா தான்.

சந்திரயான் 1க்கும், சந்திரயான் 2க்கும் உள்ள வேறுபாடு என்ன?
சந்திரயான் - 1 திட்டத்தின் கீழ் நிலாவைச் சுற்றிவந்து, அதன் பல்வேறு இயல்புகளைப் பதிவுசெய்தது. ஆனால், சந்திரயான் -2 திட்டத்தில் ஏறத்தாழ 2.4 டன் எடைகொண்ட நிலாச் சுற்றுக்கலன் அதில் இருந்து விடுவிக்கப்படும். 1.4 டன் எடையுள்ள விக்ரம் தரை இறங்கி நிலாவின் தரையில் ஆராய்ச்சி செய்வதற்காக, 27 கிலோ கிராம் எடையுள்ள, 'ப்ரக்ஞா' என்னும் நிலா ஊர்தி ஆகியவை இடம்பெறுகின்றன.
சந்திரயான் -1 திட்டத்தில், நிலாவின் தரையில் மோதி இறங்கும்படியான 'மிப்' என்ற நிலா மோதுகலன் இடம்பெற்றது. உதாரணமாக, சந்திரயான் -1 திட்டத்தில் இடம்பெற்ற, தரைப்படக் கேமரா போலவே சந்திரயான் -2 திட்டத்தில் நிலாச் சுற்றுக்கலனின் உயர்பகுதிறன் கேமரா வசதி உள்ளது. இதில் ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3 என்ற கனரக வாகனம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

மக்கள் என்ன எதிர்பார்க்கலாம்?
இத்தகைய விண்வெளி ஆய்வுகளிலும், கோள் ஆராய்ச்சிகளிலும் மக்களுக்கு உடனடி நேரடிப் பயன் என்ன என்று குறிப்பிட முடியாது. எனினும், தொழில்நுட்ப வளர்ச்சியில் நாம் உலக நாடுகளுக்குச் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபித்திருக்கிறோம்.
மேலும் நிலாவில் சென்று இறங்கும் 4வது நாடு இந்தியா என்பதும், நமக்குப் பெருமைதானே! அதையடுத்து, எதிர்காலத்தில் நாம் நிலாக் குடியிருப்புகள் அமைக்கும் தருணத்தில் இந்தியாவும் அதில் பங்களிக்கும் என்று நம்புவோம்.

சந்திரயான் 2 திட்டத்தில் உள்ள சவால்கள் என்ன?
நிலாவுக்கு நாம் அனுப்பிய சந்திரயான் -1 பயணம், ஆர்வத்தைத் தூண்டுவதும், சவால் நிறைந்ததும் என்று சொல்லலாம். பயணத்திற்கான ஏவுகலன், பல்வேறு பொறிகள், எரிபொருள், பயணப்பாதை, அதற்கான நெறிப்படுத்துதல் ஆகியவை ஆராய்ச்சியாளர்களுக்கு கடும் சவாலாக இருந்தன.
பூமியின் மடியிலிருந்து அண்டவெளிக்கு நுழைந்த பின்னரும் ஆராய்ச்சியாளர்களின் பணிகள் முடியாது. சந்திரயானைக் கட்டுப்பாட்டு நிலையத்திலிருந்து மட்டும் கண்காணிக்க முடியாத நிலையில், உலக விண்வெளி மையங்களுடனான ஒத்திசைவு உள்ளிட்டவையும் இதிலுள்ள சவால்தான்.

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X