கொஞ்சம் கவனம்... கொட்டும் நிம்மதி! - வாசல் முதல்... பலூன் வரை...! | நலம் | Health | tamil weekly supplements
கொஞ்சம் கவனம்... கொட்டும் நிம்மதி! - வாசல் முதல்... பலூன் வரை...!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 ஜூலை
2019
00:00

மயக்கம், தலை சுற்றல், அதிக வியர்வை, நெஞ்சு எரிச்சல், இடது தோள் பட்டையில் வலி போன்ற அறிகுறிகளுடன், எதிர்பாராமல் ஏற்படும் இறப்பிற்கு காரணம், கரோனரி ரத்த நாளங்களில் ஏற்படும் முழு அடைப்பு. இதயம் நின்ற மூன்று மணி நேரத்திற்குள், சி.பி.ஆர்., சிகிச்சை மூலம், மீண்டும் இதயத்தை இயங்க வைக்க முடியும்.
இதயம் இயங்குவதற்கு இடது மற்றும் வலது கரோனரி ரத்த நாளங்கள், ரத்தத்தைக் கொடுக்கின்றன.
இதில், இடது ரத்த நாளம், 65 சதவீதமும், வலது ரத்த நாளம், 35 சதவீதமும் ரத்தத்தைக் கொடுக்கின்றன. சில நேரங்களில் இது, 20 சதவீதம் மட்டுமே தரும். எனவே, இடது ரத்த நாளத்தில் அடைப்பு ஏற்பட்டால், திடீர் இறப்பு ஏற்படும்.
மாரடைப்பு ஏற்படுவதற்கு முன், கரோனரி ரத்த நாளத்தில், கொழுப்பு படிந்து விடும். இதையே, 'பிளாக்' என்போம். வயது ஆக ஆக, இது கல் போல ஆகிவிடும்.
இந்தக் கட்டி உடைந்தால், அவற்றின் மேல், ரத்தத்தில் உள்ள தட்டணுக்கள் படிந்து, ரத்தக் குழாயை முழுமையாக அடைத்து விடும். இதனால், எதிர்பாராத மாரடைப்பு ஏற்படும். இந்த அடைப்பை, பலுான் மூலம் நீக்க வேண்டும்.
இதைத் தான், 'வாசல் முதல், பலுான் வரை' என்போம்.
மார்பில் வலி வந்தவுடன், இ.சி.ஜி., டிராப்டி போன்ற பரிசோதனைகள் செய்து, மாரடைப்பு என்பதை உறுதி செய்ய முடியும்.
ரத்த நாளத்தில் ஏற்பட்டுள்ள அடைப்பை நீக்க, இதய ஊடுருவல் பரிசோதனை செய்து, ரத்த நாளத்தின் சுவரில், 'ஸ்டென்ட்' பொருத்தப்படும்.
இதனால், அடைப்பு முழுவதும் நீங்கி, ரத்த ஓட்டம் சீராகும். இதற்கு, 'பிரைமரி ஆஞ்சியோபிளாஸ்டி' என்று பெயர். இதை, மூன்று மணி நேரத்திற்குள் செய்ய வேண்டும்.
உடனடியாக சிறப்பு டாக்டரின் ஆலோசனை கிடைக்காத நிலையில், அருகில் உள்ள மருத்துவரின் ஆலோசனையில், ஆஸ்பிரின், 150 எம்.ஜி., சாப்பிடலாம்; அதன் பின், இதய சிகிச்சை நிபுணரிடம் செல்ல வேண்டும்.
உயர் ரத்த அழுத்தம், அதிக கொழுப்பு, உடல் பருமன், சர்க்கரை கோளாறு இருப்பவர்களுக்கு, மார்பு வலி ஏற்பட்டாலும், ஆஸ்பிரின், 150 எம்.ஜி., சாப்பிடலாம். அல்சர், வாயுத் தொல்லை இருந்தால், அதற்கான மாத்திரையோடு, இதை சேர்த்து சாப்பிடலாம்.
இதய நோய் சிகிச்சைகளை மேற்கொள்ளும் போது, நவீன மருத்துவ வசதிகள், திறமையான மருத்துவக் குழு உள்ள அரசு அல்லது தனியார் மருத்துவமனைகளில் செய்வதே பாதுகாப்பானது.

டாக்டர் சு.அர்த்தநாரி, இதய சிகிச்சை நிபுணர், சென்னை.
044 - 28110323, 98401 60433

Advertisement

 



We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X