குண்டு மல்லி, கொஞ்சம் கேளு! - வாரத்திற்கு, 400 கலோரிகள்! | நலம் | Health | tamil weekly supplements
குண்டு மல்லி, கொஞ்சம் கேளு! - வாரத்திற்கு, 400 கலோரிகள்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 ஜூலை
2019
00:00

மரபியல் காரணங்களால், அடி வயிற்றுப் பகுதியில், கொழுப்பு சேர்ந்து, உடல் பருமன் ஏற்படுகிறது. கார்போஹைட்ரேட், சர்க்கரை அதிகம் சாப்பிடும் போது, இன்சுலின் அளவு அதிகரித்து, ரத்த சர்க்கரையின் அளவு உயருகிறது; கல்லீரலில் கொழுப்பு சேருகிறது.
இதனால், உடல் பருமன், டைப் - 2 சர்க்கரை கோளாறு, உயர் ரத்த அழுத்தம், ரத்தத்தில் கெட்ட கொழுப்பு அதிகரிப்பது ஆகிய பிரச்னைகள் வரலாம்.
அதிகப்படியான உடல் எடையை, படிப்படியாக, ஆறு மாதங்களில், 5 - 10 சதவீதத்தைக் குறைத்தாலே, கல்லீரல் வீக்கம் குறையத் துவங்குகிறது. பதப்படுத்தப்பட்ட உணவுகள் அனைத்தும், கல்லீரல் வீக்கத்தை ஏற்படுத்தக் கூடியவை; வாரத்தில், நான்கு நாட்கள், தினமும், 400 கலோரி எடையைக் குறைத்தாலே நல்ல பலன் தெரியும்.
டைப் - 2 நீரிழிவு இருக்கும், 50 - 70 சதவீதம் பேருக்கு, கல்லீரல் வீக்கம் இருப்பது உறுதி ஆகியுள்ளது. 40 சதவீதம் பேருக்கு, உடல் உள் செயல்பாடுகளில் மாற்றம் உள்ளது. குழந்தைகள், இளம் வயதினர் மத்தியில், இந்தக் கோளாறு அதிகரித்து வருகிறது.

டாக்டர் ஹரிகுமார் ஆர்.நாயர்,
குளோபல் ஹெல்த் சிட்டி, சென்னை.
95660 31449

Advertisement

 



We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X